17 April 2006

'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகுப்பு!

'பரம்பரைப் பகை' என செயலலிதா வெளிப்படையாகவே அறிவித்திருப்பதை தமிழினத்துக்கு விடப்பட்ட அறைகூவலாகவே இன உணர்வாளர்கள் கருதுகின்றனர் என்பது உறுதி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணீ அவர்கள் 18 ஏபரல் முதல் தி.மு.க கூட்டணியை ஆதரித்து தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

1990-களில் 'தடாவில் கைதாகி சிறைவாசம் செய்தவரும், பிறகு 2002-ஆம் ஆண்டு 'பொடா'வில் கைதாகி ஒன்றரை ஆண்டு காலம் வெஞ்சிறையில் இன உணர்வுக்காகவும், ஈழ விடுதலை உணர்வுக்காகவும் வாடிய - பேராசிரியர் 'அடலேறு' சுப.வீரபாண்டியன் அவர்களும் - தமிழின விரோத செயலலிதாவை தமிழக அரசியல் அரங்கிலிருந்தே வெளியேற்றுவோம் என்கிற முழக்கத்தோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சுபவீ வெளியிட்டுள்ள அறிக்கை:

"பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டு சிறையில் கிடந்த தமிழன் என்னும் அடிப்படையில் தமிழ் மக்களிடம் என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

பொடாவை மறந்து விட்டோம் என நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். அது நமக்கும் செயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகை என்றால் மறந்து விடலாம்.

தமிழினத்துக்கும், தமிழீழ உறவுக்கும் எதிராக அவரால் தொடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம் அல்லவா அது? - என்பதால் என்னால் மறக்க முடியவில்லை.

தமிழர் தேசிய இயக்கத்தை தடை செய்து, கண்ணகி சிலை போன்ற தமிழ் அடையாளங்களை அப்புறப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களை எல்லாம் பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே இல்லாமல் பார்த்துக் கொண்ட தமிழ் இன எதிரி செயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி இனியும் இந்த நாட்டில் நீடிக்கக் கூடாது.

'பரம்பரை எதிரியோடு தேர்தலில் மோதுகிறேன்' என்று செயலலிதாவே சொன்னபிறகு, அந்த அறைகூவலை நாமும் ஏற்போம். பரம்பரை எதிரியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம்.

சர்வாதிகார ஆட்சி ஒழியவும், சனநாயக ஆட்சி மலரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

தமிழ் இன உணர்வாளர்களே - நீங்களும் களத்துக்கு வாருங்கள். கைகோர்த்து நிற்போம். "

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சுபவீ.

சனவரித் திங்களில் ஒரு சாலை விபத்தின் காரணமாக காயமடைந்து இப்போதுதான் தேறி வந்திருக்கும் சுபவீ அவர்களின் இன உணர்வுப் போராட்டம் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியது.

'பரம்பரைப் பகையை' வேரறுக்க இன உணர்வுப் போர் வீரர்களும், படைத்தலைவர்களும் அணிவகுப்பது தமிழினத்தின் விடியலைக் கட்டியங்கூறும்; நாளை வெற்றி முரசம் ஒலிக்குமென்கிற நம்பிக்கை தரும் மகிழ்ச்சிச் செய்தி.

11 comments:

Pot"tea" kadai said...

கண்ட கண்ட அற்ப பதரின் காலடியில் விழுந்து தான் வாழ வேண்டும் என்று போலிகள் முகங்கள் கிழிந்த நிலையில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று சேர்வது மகிழ்ச்சியான செய்தியே!

இதனால் தமிழகத்தில் வரலாறு நிகழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

ஆணவம் பிடித்த ஜெயாவின் கனவும் தவிட்டுபொடியாக ஆகப் போவதும் உறுதி!

nayanan said...

பேரா.சுபவீயின் உணர்வுகளைப் பதித்தமைக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலிற்கு சற்று முன்னர், கருணாநிதி
வைகோவை சிறையில் சென்று சந்தித்த போதும்,
பின்னர் தி.மு.க உள்ளிட்ட தமிழ் உணர்வு இன்னும்
கொஞ்சம் இருக்கும் கட்சிகள் பலவும் கட்சி, அரசியல்
சார்பற்று பொடாவின் நோக்கத்தை உணர்ந்து எதிர்த்த போது, மலிவான அரசியலுக்கு அப்பாற்பட்டு,
கருணாநிதி வைகோ விற்கு செய்ததை நானும் சரி
தங்களைப் போன்றோரும் சரி - அதை உதவி எனக் கண்டிருக்கவில்லை/கண்டிருக்க மாட்டோம். மாறாக, வலிக்கும்போது
மயிலிறகால் மருந்து போட்டுவிட்டதாகவே அதனை
எண்ணினேன்/எண்ணினோம். ஆனால், குதிரை
கீழே தள்ளியதும் அல்லாமல், மண்ணை வேறு போட்டு மூடுவது போல, கருணாநிதி எந்த உதவியும் செய்யவில்லை என்று வைகோ சொல்வது எத்தனைத் தரம் தாழ்ந்தது என்று எண்ணும்போது நமக்கு வலிக்கிறது. சுப.வீக்கு அதிகமாகவே வலித்திருக்கும். வைகோவின் செயல்பட்டால், தமிழகத்தில் ஒரு தமிழுணர்வால் நசுக்கப்பட்டால் கூட மற்றவர்கள் உதவி செய்ய பலமுறை யோசிக்கும் நிலையை ஏற்படுத்தி மானங் கெட்டதுடன், மானத்தையும் வாங்கிவிட்டார் வைகோ.

நியோ / neo said...

>> குதிரை
கீழே தள்ளியதும் அல்லாமல், மண்ணை வேறு போட்டு மூடுவது போல, கருணாநிதி எந்த உதவியும் செய்யவில்லை என்று வைகோ சொல்வது எத்தனைத் தரம் தாழ்ந்தது என்று எண்ணும்போது நமக்கு வலிக்கிறது. சுப.வீக்கு அதிகமாகவே வலித்திருக்கும். >>

"உன்னை விற்காதே" என்ற பாரதிதாசனின் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன. தன்னையே விற்றுக் கொண்ட கழிசடைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் உள வலியைத்தானா பொருட்படுத்துவர்?

>> வைகோவின் செயல்பட்டால், தமிழகத்தில் ஒரு தமிழுணர்வால் நசுக்கப்பட்டால் கூட மற்றவர்கள் உதவி செய்ய பலமுறை யோசிக்கும் நிலையை ஏற்படுத்தி மானங் கெட்டதுடன், மானத்தையும் வாங்கிவிட்டார் வைகோ. >>

கோடியில் ஒரு சொல் சொன்னீர்கள். இதுதான் இதுதான் மிக மிக காயப்படுத்துகிற செயல். இன உணர்வை தன் சுய லாபத்துக்காகக் கொச்சைப்படுத்திய துரோகத்தை தமிழினம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மன்னிக்கக் கூடாது.

வருகைக்கு நன்றி நாக.இளங்கோவன்(நயனம்) அவர்களே! :)

நியோ / neo said...

பொட்டீக்கடை - உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வளர்க வாழ்க உங்கள் சேவை! வருகைக்கு நன்றி.

ஜெ.வின் 'மாய வலை'களையெல்லாம் அறுத்தெறிந்து இன உணர்வுப்படை வெற்றியைக் குவிக்கும் என நம்புவோம்.

Anonymous said...

DK supported JJ during the strike by TN govt. employees.It also supported the ban on animal sacrifices in temples.In the past DK had supported ADMK.So the credibility of veeramani is questionable.

VSK said...

மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல!

இந்த 'ஆணவம் பிடித்த' 'அம்மா'வையும் சரி, பேராணவம் பிடித்த 'அப்பா'வையும் சரி, தூக்கி எறிய வேண்டிய காலகட்டத்தில்தான் தமிழகம் இன்று இருக்கிறது!

'இலவசங்கள்' மூலம் பிச்சை எடுக்கும் இந்தக் கழகங்களின் முகத்திரை கிழியும் நேரமும் இதுவே!

சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, இந்தப் 'பிள்ளை'யிடம் சில நாள், அந்த 'மகள்'இடம் சில நாள் 'ஓசிச்சோறு' சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளர் வீரமணி அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ணும்போது, பெருமிதமாக இருக்கிறது.

இரு கழகங்களுமே தமிழுக்கு, தமிழனுக்கு விரோதமாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டாம்.

Anonymous said...

தேர்தல் பற்றி நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா?

நியோ / neo said...

நாகரீக கோமாளி மற்றும், எஸ்கே, இனமாணன்(இனமானன்?!) ஆகியோர் வருகைக்கு நன்றி!

நாகரீக கோமாளி அவர்களே

>> Dear 'Anonymous', doesn't that speak for itself. Irrespective of where he belongs, Ki.Veeramani has supported her CORRECT views ..>>

கி.வீரமணி அந்தச் சமயத்தில் முழுமையாக அரசு ஊழியர் சார்பு நிலை எடுத்திருக்க வேண்டும்..

ஆனால் 'பேச்சுவார்த்தையின் மூலம் அரசு ஊழியர் பிரச்சனைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டுமேயல்லாது மோதல் போக்கை கைவிடவேண்டும்' - என்பது போல மயிற்பீலியால் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது உண்மைதான்.

பிற்பாடு அதை அவர் திருத்திக் கொண்டு விட்டார். மற்றபடி தி.க. இவ்னுடைய Social agenda எப்போது திமுக சார்பு நிலை கொண்டதாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு கடந்த 15 ஆண்டுகாலமாக 'தள்ளாட்டம்' கொண்டதாகவே இருந்திருக்கிறது என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.

இப்போது தமிழ் அர்ச்சனை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்கிற பெரியாரின் முக்கிய கொள்கை விருப்பங்களை - கலைஞரின் புதிய அரசு நிறைவேற்றும் என்பதற்காகவே ஆதரிப்பதாக தி.க தெளிவாக சொல்லிவிட்டது.

மேலும் அவர்கள் 'தனி' மேடையில் திமுக அணிக்காகப் பிரச்சாரம் செய்வோம் என்றும் சொல்லிவிட்டார்கள்.

முக்கியமாக IIT, IIM போன்ற் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்கிற முக்கிய விஷயத்தில் தி.க. ஆற்ற வேண்டிய 'பிரச்சார' பங்கு நிறைய உள்ளது.

இந்த 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் இட ஒதுக்கீடு விவாதம் சூடு பிடிக்கும்; அப்போது தி.க.வின் பங்குபணி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நியோ / neo said...

>> இனமாணன் said...

தேர்தல் பற்றி நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா? >>

ஆமாம் படித்தேன்!

'யார் தமிழ் வழிக்கல்வி, தமிழ் ஆலய வழிபாடு, தமிழீழ ஆதரவு, தமிழ் பயிற்று மொழி' போன்ற விஷயங்களை ஆதரிக்கின்றார்களோ - அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

மேலும், தன் மீதான 'வாய்ப்பூட்டு' விஷயத்தை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இருக்கும் எல்லா பொடா வழக்குகளையும் விரந்து 'முடித்து' விடுவார்கள்; குறிப்பாக 'ஈழ' விவகாரத்தில்.

அப்போது அரசே ஆட்சேபிக்காவிட்டால், அய்யா நெடுமாறன் சுதந்திரமாகப் பேச மிண்டும் வாய்ப்புத் தன்னால் வந்துவிடும்.

அவருடைய மற்ற வேண்டுகோள்களெல்லாம் - திமுக கூட்டணிக்குத்தான் பெரிதும் பொருந்துகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ;)

நியோ / neo said...

எஸ்கே!

>> வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ணும்போது, பெருமிதமாக இருக்கிறது. >>

அதாவது - திமுக - அதிமுக இரண்டு கூட்டணியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'விஜி' முதல்வராவார் என்கிறீர்கள் அப்படித்தானே?!

கலைஞர் முன்பு ஒருமுறை சொன்னது போல 'கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு'! :)

Anonymous said...

//முக்கியமாக IIT, IIM போன்ற் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்கிற முக்கிய விஷயத்தில் தி.க. ஆற்ற வேண்டிய 'பிரச்சார' பங்கு நிறைய உள்ளது.

இந்த 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் இட ஒதுக்கீடு விவாதம் சூடு பிடிக்கும்; அப்போது தி.க.வின் பங்குபணி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். //

They have already conducted a meeting in Chennai a week ago. Human-chain agitations were conducted all over TNadu to support the reservation.

Preparations are undergoing for a rally in Delhi in support of the reservations. Hope the BC & OBC's support the rally in huge numbers.