26 January 2007

'அமிர்தானந்தமயி'யும், சப்பாத்திகளும, சில வராகங்களும்!

நமது வலையுலகப் புனிதப் பசுக்களின் பிறழ்நிலைகளும், இரட்டைப் பேச்சுகளும், உள்ளடி வேலைகளும், கயமைத்தனங்களும் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

தமிழினம், தமிழ் மொழி - இவைகளைக் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிச் சிதைத்துவிட மாட்டோமா என்று வெறி கொண்டு அலையும் வராகமூர்த்திகள் - இதே மொழி அடையாளத்தின் காரணமாக ஏதேனும் நன்மை கிட்டுமானால் - அதையும் நக்கித் திண்ணுவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்புறம் மயிரைப் பிடுங்கினால் தமிழ் வளருமா என்று எச்சிகலைத்தனமாகக் குலைக்கவும் செய்வார்கள்!

இதைப்போலவே - தமிழர் நலனில் தமிழ்நாட்டு நலனில் எவ்வித அக்கறையுமற்றவர்கள் - தமிழ்நாடென்னும் சுயமரியாதைப் பூங்கா பொசுங்கிப் போகாதா - என்று நாளெல்லாம் ஏங்குவோர் - தமிழ்நாட்டு நலன் கருதி நடக்கும் காரியங்கள் மீது சேறு தூற்ற முதல் ஆளாய் நிற்பார்கள்.

மனித உரிமை, நவீனத்துவ சிந்தனைகளெல்லாம் இவர்களுக்குப் Punch(ing) lines! - அதாவது இவர்களின் 'இன'நலன்கள் பாதுகாக்கப்படும்வரைதான்.

தமிழ் இனத்தின் மானத்தின் மீது எறியப்படுகிற அம்புகள் எல்லாம் இவர்களுக்குப் பூச்செண்டுகள்! அந்த அம்புகளை வானத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க வந்த கடவுளின் மோட்ச கயிறுகளாய்ப் பற்றிக் கொண்டு தமிழர்கள் 'போய்ச்சேர'வேண்டும் என்று 'சாமியாடி' அருளாசி வழங்குவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழரால் கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுத்தலத்தில் 'இவாள்' நிற்கும் இடத்தில் சூத்திரன் நின்று தமிழ்ப்பாடல் இசைத்துவிட்டால் போதும்! உலகமே இடிந்துவிடும்! சூத்திரனை அடித்து உதைத்து துரத்திக் கொல்லும்வர ஓயமாட்டார்கள். அதையும் ஆதரித்து அது ஒரு சட்டபூர்வ சைவ நடவடிக்கை என்று எழுதும் சண்டாளத்தனம் இவாள்களுக்க்கு வெகு இயல்பாய் வரும்.

சுகாசினி அய்யங்காரையும் குஷ்புவையும் காப்பாற்ற ஓடோடி வந்த சில வலையுலகப் பெண்கள் - இந்த 'சம்பிரதாய' Moral puritanist எச்சிகலைத்தனத்தைக் கண்டிக்க மாட்டார்கள்! என்ன இருந்தாலும் Blood is thicker than post-modernism இல்லையா?

ஆனால், மாதவிலக்கு, தீட்டு என்றெல்லாம் படுகேவலமான வியாக்கியானம் செய்கிற இதே கும்பலின் அடிப்பொடிகள் பற்றி இந்தப் பெண்கள் பேசாமலிருப்பதன் மூலம் - இந்திய 'வர்ண' வரலாற்றின் நீட்சியை நிரூபித்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு முதலில் நன்றி.

பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதும், பேணுவதுமே 'சப்பாத்தி'களின் முதல் கடமை என்பது இன்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அமிர்தானந்தமயி, அன்னை சாரதா, அரவிந்த அன்னை, நிவேதா இவர்களின் அருளாசியெல்லாம் சூத்திரனை இந்த 'ஆன்மீக' மாயைக்குள் வைத்திருக்கும் வரையே! அப்புறம் 'எங்களவா பொண்ண அர்ச்சகராக்க மாட்டோம்' என்று அறிக்கை விட்டுவிடுவார்கள். கேட்டால் சூத்திரர்கள் கோவிலுக்குள் பூந்து அவங்காத்துப் பொண்ணை சைட் அடிப்பார்களாம்!

நல்ல Post-modernist மெளனம்! வாழ்க!

ந்ல்லவேளை அமிர்தானந்தமயி 'புனிதப் பசு' அல்லர்; இல்லாவிட்டால், நம்மளவா பெண்டுக சூத்ராள 'கட்டிப்புடிச்சு' அருளாசி கொடுப்பதாவது என்று அவரை ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்திருப்பார்கள்!

அமிர்தானந்தமயி தமிழகத்துக்கு வருகை தந்து சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நலப் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். வாழ்க!

அவர் வந்து போகும் வரை எந்த பார்ப்பையும், சப்பாத்தியையும் அவர் பக்கத்தில் விட்டுவிடாமல் இருப்பது தமிழகத்துக்கு நல்லது; இல்லாவிட்டால் அமிர்தானந்தமயிக்கும் தீட்டு கழித்து விட்டாலே ஆயிற்று என்று ஒழித்துக் கட்டிவிடுவார்கள்.

பி.கு:

தமிழ், தமிழின அடையாளங்களை வேதத்தின் பெயரால் இழிவுபடுத்தும், தமிழர் உரிமை மறுக்கும் பன்றிகளுக்கு - சிறந்த தமிழ் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டும் எதற்கு?

'பத்ரி' இது போன்ற பன்றிகளுடன் ஒரே குழுவில் இருக்க மறுக்கவேண்டும், விலகவேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.


25 January 2007

தல புராணம்

சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்தக் கவிதை புரியும். இதை நான் முதன்முதலாக எழுதி பல ஆண்டுகள் அப்படியே வைத்திருந்தேன்; சில திருத்தங்கட்குப் பின்னர் சில ஆண்டுகள் முன்பு வேறொரு தளத்தில் இட்டேன்.

இப்போது பொன்ஸ் அவர்கள் எழுதிய அரசாங்கம் கவனிக்குமா? - 2 என்ற பதிவில் யானைப் படங்கள் போட்டிருந்ததைப் பார்த்தபோது ஏனோ இந்த என் கவிதை நினைவுக்கு வந்தது!


தல புராணம்

=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.

- நியோ.

13 January 2007

'முனைவர் வைரமுத்து'வுக்கு வாழ்த்துக்கள்!



நேற்று முன்தினம் (11/01/2007) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு முனைவர்' (Doctor of Literature honoris causa ) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள்! :)

தகுதிவாய்ந்த பெருமகனாருக்கு சீரிய சிறப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பாராட்டுகிறோம். :)

இத்தருணத்தில் கவிப்ப்பேரரசரின் 'இனம்' என்ற கவிதையை இங்கே தருகிறேன்.


இனம்
-----------------------------

தமிழா

காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா

கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்

பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்

``````````````````

உன்
ஆட்டு மந்தைகளை
வேட்டையாட விட்டுவிட்டாய்

கூடப் பிறந்தோனின்
கோழிக்குஞ்சு திருடுகிறாய்

பிள்ளைபெற்ற பெண்ணை
அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அடையாளம் சொல்வதுபோல்
நீ
அடிமை புரிந்த
அடையாளம் மாறவில்லை

அன்று-
மதம் வந்தது
நீ
வருணமாகப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாய்ப் பிரிந்தாய்

தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்

````````````````````````

மழைபிலிற்றும் இரவுகளில்
நனையாத திண்ணையை
நாய்க்கு வழங்கிவிட்டு
நனைந்து கிடக்கிறாய்


வெளவால் -
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை

நீ -
அடிமையா? மனிதனா?
ஆதாரம் இல்லை

மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவத்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்

`````````````````````````````````

இந்தியப் பரப்பில்
எந்தமிழ் நாடு
நடந்து பார்த்தால்
நான்கு சதம்

இந்திய மக்களில்
எம்மருந்தமிழர்
ஏழுபுள்ளி ஐந்து சதம்

அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
ஊராட்சி ஒன்றியம்

பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்

அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்

தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்

அன்று தொலைத்த முகம்தான்
இன்றும் காணக் கிடைக்கவில்லை

`````````````````````````


தொலைக்காட்சி விளம்பரங்கள்
துருவிப் பார்க்கிறேன்

ஒரு முகமேனும்
தமிழ் முகம் இல்லை

ஒரு வணிகமேனும்
தமிழ் வணிகம் இல்லை

சுவர்பார்த்துத் தலைவாரும்
அடுக்குமாடி வீடுகளில்
பத்துக்கு ஏழு
தமிழர் இல்லை

விமானம் ஏறினால்
தமிழ்முகம் தேடுவேன்

ஏழைவீட்டுப் பாயாசத்தில்
எங்கோ அகப்படும் முந்திரிமாதிரி
இரண்டோ மூன்றோ
இருப்பினும் இருக்கும்

ஏனிந்தப் பின்னடைவு?

ஆடை ஆயுதம்
சுமையென்றானால்
அழுக்கும் பொதிகளும்
செல்வமென்றானால்
எந்த இனத்தின் யாத்திரை தொடரும்?

புதுமைகொள் தமிழா
புழுதி கழுவு

உலக நீரோட்டத்தில்
கரைந்துவிடாமல்
கலக்கப்பழகு

அடுத்த நூற்றாண்டின் *
அந்தி நேரத்தில்
மூளை தவிர எல்லாம்
செயற்கையாய்க் கிடைக்கும்

ஆண்டுக்கொருமுறை
முகம் மாற்றலாம்

மரத்தின் திசுக்களில்
மனிதன் வாழ்வான்

எண்கள் இட்ட்
இருதயம் கிடைக்கும்

கணவனுக்கு மனைவி
செவ்வாயிலிருந்து
செலவுக்கனுப்புவாள்

உணவு மாறும்
உடைகள் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

இன அடையாளம் மொழியாய் மிஞ்சும்
அடையாளம் இழக்காதே

மேற்கே விஞ்ஞானம்
பொருள் கண்டறிந்தது
போன நூற்றாண்டு

அதற்கு நீ
சொல் கண்டறிந்தது
இந்த நூற்றாண்டு

சொல்?
என்று நீ
சொல்லை விடுத்துப்
பொருள் கண்டறிவாய்?

அறி
அன்றுதான்

நீ
அறியப்படுவாய்.


- "தமிழுக்கு நிறம் உண்டு" தொகுதியிலிருந்து


* => இந்தக் கவிதை 1997 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது

11 January 2007

"ஜெய் தீட்டு ! "

சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.

முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)

அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!

இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)


"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:


மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!

ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)