இனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக தன் உட்லையே எரித்து வெளிச்சம் கொடுக்கிறானோ - அவனையே தலைவன் என்று மக்கள் வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து நான் ஒருபோதும் பார்த்திராத என் உடன்பிறப்பு முத்துக்குமாருக்கு உரித்தானது.
தன் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த முடிவுக்கு எதிராகச் சுயநலத்தோடு செயல்படும் "மாக்களுக்கு" இனி இனத்தலைவன் என்கிற பட்டம் கிடைக்காது.
இனி எந்தத் தனிமனிதனுக்கும் அந்த உரிமை கிடைக்கப்போவதும் இல்லை.
கருணாநிதி இப்போது இருந்தும் "இல்லாதவராக" இருக்கிறார். 70 ஆண்டு கால பொதுவாழ்வின் பலனை 6 மாதங்களில் தானாகவே துவம்சம் செய்து விட்ட முட்டாளாகவே அவரைப் பார்க்க வேண்டும் இனி. எந்தக் கொள்கைக்காகப் பாடுபட்டாரோ அதற்கு எதிரான திசையில் போய்த்தான் அவரின் இறுதிக்காலம் முடியப் போகிறது என்பது துற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.
திராவிட-தமிழ் இயக்கங்கள் மீண்டும் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. தனி மனிதர்களின் மீது அல்ல தங்கள் பற்று - இனத்தை மீட்டெடுப்பதும் - அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை நிலையை மாற்றுவதும்தான் திராவிட-தமிழ் இயக்கங்களின் உள்ளீடு.
அதை இனி எந்தத் தனியொரு தலைவனின் காலடியிலும் கொண்டுபோய் அடகு வைக்கும் கூமுட்டைத்தனத்தை தமிழன் செய்ய மாட்டான்; கூடாது.
திமுக - எதுவரை தமிழின வேட்கைகளை மதிக்கிறதோ அதுவரைதான் அதற்கு மரியாதை என்பதை மறந்து விட்டது. putting the cart before the horse என்பது போல தமிழின விருப்பங்களை காலில் போட்டு மிதித்தாலும், தன்னை விட்டால் இந்த தமிழன்களுக்கு வேறு நாதி இல்லை - என்ற மமதையில் கருணாநிதியும், திமுக-வும் செயல்படுவது நன்றாகத் தெரிகிறது.
மமதையில் இருப்பவர்களுக்கு - அதிகார போதையில் இருப்பவர்களுக்கு - பெரியார் தி.க-வினர் பாடம் புகட்டியிருக்கிறார்கள். அது நண்பர் லக்கிலுக்கு-க்கு கடுப்பைத் தருகிறது என்றால் - அவருக்கு இன்னும் நிறைய கடுப்பு ஏற்படும் காரியங்கள் வரும் காலங்களில் தொடர - நான் விழைகிறேன்.
1967-இல் "உணர்ச்சி வசப்பட்ட" - தமிழர் கூட்டம் இவர்களுக்கு "வரலாற்றுத் திருப்பமாக" தோன்றும் - ஆனால் இப்போது, மட்டும் தமிழன் "உணர்ச்சிய" அடக்கி இமயமலை ஏறிவிடவேண்டுமாம்! ... த்தா அடங்குங்கடா டேய்.
உன் வேலை தமிழின உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, அரசியல் அங்கீகாரம் அளிப்பதுதான்; அதற்குத்தான் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திமுக-வை , கருணாநிதியை ஏற்றிவைத்தோம், தலையின் மேல்.
அது என்ன ஆயுட்காலப் பதவியா - பட்டா போட்டு அனுபவிக்க? உனக்கு நாற்காலியில் உட்கார முடியாவிட்டால் - குண்டி வலிக்குமென்பதற்காக - நாங்கள் எங்கள் உரிமையை இழக்க வேண்டுமா?
நினைவில் வைத்துக்கொள்வீர். தமிழினம் தனக்கான தலைமையை மக்களிடம் இருந்து மீண்டும் கண்டு கொள்ளும் - உயர்த்தும்.
"அவாள் நமக்கு எப்போதும் சவால்தான்" - என்று வசனம் எழுதி விட்டு - சம்பந்திப் பாப்பான் இந்து ராம் என்கிற தமிழின விரோதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடும் - நடமாடும் பிணங்கள் எமக்குத் தலைமையேற்க முடியாது.
ஏசுநாதரை - யூதர்கள் குற்றஞ்சுமத்தி பழித்தபோது - தன் பதவியைக் காத்துக் கொள்ள - "ரோமானிய" பேரரசின் கைக்கூலி பிலாத்து மன்னர் - ஏசுவைக் கைவிட்டது போல - தமிழீழத்தைக் கைவிட்ட கருணாநிதி - வரலாறு முழுதும் பழிக்கப்படுவார்.
Sonia cannot be compared with the Italian Mobsters from Martin Scorsese's movies; coz the mobsters had a code of honour. But yet, the stink of Mussolini, the Mobsters, and the backstabbing roman agent pontius pilate emanate from Sonia's house.
We, the tamils, shall prevail - inspite of judas amongst us.