26 May 2006

கலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா?

இன்று(26/5/2006) சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றது.

நண்பர் லக்கிலுக் பதிவான கலைஞரைத் தாக்க முயற்சி! -யில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.

>> ஒரு டஜன் ரவுடிகளுக்கு மேல் சட்டசபைக்கு அனுப்பி இருக்கும் தாதா ஜெயா தன் அடியாட்களுக்கு கொடுத்திருந்த அசைன்மெண்ட் இன்று வெற்றிகரமாக சட்டசபையில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.... >>

இந்த "சொர்ணக்கா" ஜெயா மாமி 1989-90-இலும் இதைத்தான் செய்தார்!

கலைஞர் படிக்கவிருந்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்துவிட்டு - பிறகு "அய்யயோ என்னை மானபங்கப் படுத்த முயற்சி" என்று நாடகம் போட்டார்.

அதைப் பார்ப்பனீயவாதிகள் பயன்படுத்தி எத்தனை கோயபெல்ஸ் பரப்புரை செய்தார்கள்?

இந்துத்துவவாத, பிற்படுத்தப்ப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க பார்ப்பனீயவாதிகள் செய்த சதியே ஜெ.வின் அதிமுக கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும்.

தமிழர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கோபால்சாமியும், திருமாவும் - இன்னமும் அங்கே இருப்ப்து மாபெரும் இனத்துரோகத்தில்தான் போய் முடியும்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றி ஒன்றும் பேசாத ஜெ. கலைஞரைத் தாக்க ஆள் அனுப்புகிறார் என்றால் - இதன் உள்ளர்த்தம் என்ன??


பார்ப்பனீயவாதிகள் - இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவ்ர்களை - கொலை செய்யத் திட்டம் இடுகிறார்களா? என்ற சந்தேகம் மமிக மிக மிக கடுமையாக எழுகிறது.

இதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"


பிற்சேர்க்கை:

அதிமுக அராஜகக் காட்சிகள்

அதிமுக அராஜகம்1

அதிமுக அராஜகம்2

அதிமுக அராஜகம்3

அதிமுக அராஜகம்4


( ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை. )

41 comments:

நியோ / neo said...

பாலக்கோடு அன்பழகன், (ஒரத்தநாடு) தி.நகர் கலைராஜன், ஆர்.கே.நகர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ராயபுரம் ஜெயக்குமார், சைதாப்பேட்டை செந்தமிழன் (இவர் ஜெயக்குமாரின் அடியாள்) - ஆகிய அதிமுக குண்டர்கள்தான் சட்டமன்றத்தில் தங்கள் அடியாள் கலாச்சாரத்தை இன்று வெளிப்படுத்துவதில் முன்னணியில் இருந்திருக்கிறார்கள்.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக அதிமுகவின் அராஜகம் நடந்தேறியிருக்கிறது.

இன்று நடந்த வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை தமிழக அரசும், மத்திய அரசும் கண்டறியவேண்டும்.

லக்கிலுக் said...

தி. நகர் கலைராஜன் மைக்கைத் தூக்கி பீட்டர் அல்போன்ஸை தாக்கி இருக்கிறார்....

இதேபோல் தொடர்ந்து நடந்தால் ஒரு நாள் தமிழர்கள் கொதித்தெழுந்து போயஸ் கார்டனுக்குள் நுழைந்து ஜெயாவையும், சசியையும்.....

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை....

Unknown said...

சண்டியர்களின் தலைவி அறங்கேற்றிய நாடகம் இது என்பதில் சந்தேகமில்லை என் பதிவில் மேலும் சில பழைய சம்பவங்கள் பட்டியலிட்டுள்ளேன் வாருங்கள்

Anonymous said...

DMK Gundas KKSSR, Karuppan stopped admk gundas...He he how is it.

May be DK supported DMK gundas...

ADMK gundas supoorted by Parpans

ஜோ/Joe said...

அதிமுக -வெல்லாம் ஒரு கட்சி .அடிப்படை நாகரீகமே தெரியாத ஒரு தலைவி .அடியாள் சிஷ்யர்கள் .

நியோ / neo said...

>> இதேபோல் தொடர்ந்து நடந்தால் ஒரு நாள் தமிழர்கள் கொதித்தெழுந்து போயஸ் கார்டனுக்குள் நுழைந்து ஜெயாவையும், சசியையும்..... >>

எனக்கும் அந்தக் கவலை இருக்கிறது லக்கிலுக்.

இந்தப் பிரச்சனையில் - சட்டமன்றத்தின் முதல் நாளிலேயே அதிமுக - கலைஞரை அடிக்கப் பாய்ந்தார்கள் என்று சொன்னால் - ஏதோ பெரிய திட்டமிட்ட சதி இருப்பதாகத்தான் அர்த்தம்.

பெரிய கலவரம் உண்டாக்கி அதன் மூலம், சனாதன மறுப்பு, சமூக-நீதி, மக்கள் மேம்பாடு ஆகியவர்றில் கவனம் செலுத்தும் - "பிற்படுத்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாக" விளங்கும் திமுக அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தி - கலைஞரைத் தாக்குவதன் மூலம் - இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான தலைவர்களை, OBC மக்களை பயமுறுத்தி - அழித்து ஒழிக்கத் திட்டம் இடுகிறார்களா ஆதிக்க பார்ப்பனீயவாதிகள் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இந்திய அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிப்போம் என்று சிலர் சொல்லியிருப்பதையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது - ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியாகவே இதைக் காணவேண்டும்.

நியோ / neo said...

வருகைக்கு நன்றி மகேந்திரன் :)

அதிமுகவின் - (அணைக்கட்டு) பாண்டுரங்கன், சின்னச்சாமி, டி.சின்னச்சாமி, போன்றொரும் வன்முறையில் ஈடுபட்டதாக - காங்கிரஸ் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Anonymous said...

உங்களுக்கெல்லாம் சுரத்து பத்தாது ஓய். இதே ஜெயலலிதாவுக்கு நடந்திருந்தால் அதிமுக ஆதரவு வலைப்பதிவர்கள் கருணாநிதி எப்படி கடைந்தெடுத்த ரௌடி, திமுகவினரின் அராஜகம் எப்படிப் போகிறதென்று, சுடுகாட்டிலிருந்து பழனிவேல்ராஜனின் ஆவி எழுந்து வந்து சட்டசபையில் அமளி செய்கிறது என்ற மாதிரி ஆளுக்குப் பத்துப் பதிவு போட்டு ஊரெல்லாம் போய் பின்னூட்டங்களில் புலம்பித் தள்ளி, ஸ்கேன் செய்து போட்டு அதைப் பூதாகரமாக்கி அடி அடியென்று அடித்துத் துவைத்து எடுத்திருக்கமாட்டார்கள்? அதிமுகவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் ஐயா ;-)

Anonymous said...

ஜெயா சட்டசபைக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன? இன்று 'அது' நினைத்தது நிறைவேறவில்லை. அதற்காக 'அது' எந்த ஒரு அவலட்சணமான செயலும் செய்ய முயலும்.

ஆயினும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுத்தருள்வார்களாக!!!!

நியோ / neo said...

கள்ளுக்கடை,

உம்முடைய கமெண்ட்டை நான் எடிட் செய்து வெளியிட்டிருக்கிறேன். இன்னும் "அவ்வளவு" கடினமான சொற்களை வெளியிடும் அளவு நிலைமை வரவில்லை. வந்தபின்பு பார்த்துக்கொள்ளலாம் :)

நியோ / neo said...

ஜோ!
வருகைக்கு நன்றிகள்! :)

----------------------

அனானி!

>> இதே ஜெயலலிதாவுக்கு நடந்திருந்தால் அதிமுக ஆதரவு வலைப்பதிவர்கள் கருணாநிதி எப்படி கடைந்தெடுத்த ரௌடி, திமுகவினரின் அராஜகம் எப்படிப் போகிறதென்று, சுடுகாட்டிலிருந்து பழனிவேல்ராஜனின் ஆவி எழுந்து வந்து சட்டசபையில் அமளி செய்கிறது என்ற மாதிரி ஆளுக்குப் பத்துப் பதிவு போட்டு ஊரெல்லாம் போய் பின்னூட்டங்களில் புலம்பித் தள்ளி, ஸ்கேன் செய்து போட்டு அதைப் பூதாகரமாக்கி அடி அடியென்று அடித்துத் துவைத்து எடுத்திருக்கமாட்டார்கள்? அதிமுகவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் ஐயா ;-) >>

ஹாஹ்ஹா! :))

சரியாகச் சொன்னீர்கள்! ஆனால், இதுதானே பார்ப்பனீயவாதிகளுக்கும் திராவிடருக்கும் உள்ள வேறுபாடே! :)

நியோ / neo said...

பீட்டர் அல்ஃபோன்ஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர். சட்டமன்ற, நாடாளுமன்ற மரபுகள், கண்ணியங்கள் தெரிந்தவர். அவர் 'கடல்நீரக் குடிநீராக்கும் திட்டம்' பற்றிச் சொன்ன புள்ளிவிவரம் ஏற்கெனவே ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சரத்தின் போதே சொன்னதுதான்.

மத்திய அரசு நிதி ஒதுக்கியும் Solid Plans எதையும் தமிழக ஆரசு (ஜெ.அரசு) அப்போது அனுப்பாததால் அந்த நிதியம் தூங்கியது என்று ப.சி சொன்னதைத்தான் மீண்டும் பீட்டர் சொல்லியிருக்கிறார்.

இந்த அதிமுக குண்டர்கள் அதற்கு அவர் மீது பாய்ந்திருக்கிறார்கள்.

ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு ரவுடிகள் போலவே சட்டமன்றத்திலும் நடந்திருக்கிறார்கள் அதிமுகவினர்.

ஜால்ரா போடுகிறார் - என்று பீட்டர் பேசும்போது குறுக்கே கத்தியிருக்கிறார் ஜெயக்குமார்.

முதலில் சபாநாயகர் இருக்கும்போது அவை உறுப்பினர்களை ஒருமையில் அழைப்பதோ, கத்துவதோ, ஒருவருக்கொருவர் பேசுவதோ கூடாது.

அதிமுகவினர் எல்லாவற்றையும் திட்டம் போட்ட சதியுடனே மீறியிருக்கிறார்கள்.

சிலர் 'டேய் பேசாதேடா' என்று கத்திக் கொண்டு (கலைராஜன், பாலக்கோடு அன்பழகன், சிவி சண்முகம் போன்றோர்) - பீட்டர் மீது பாய, குறுக்கெ இருந்த மற்ர காங்கிரஸ்காரர்களுக்கும் அடி விழுந்திருக்கிறது.

கலைராஜன் ஒரு மைகைப் பிடுங்கி காங்கிரஸ் ஞானசேகரனை அடிக்க, மற்ற அதிமுகவினரும் சேர் வீச என களேபரம் செய்து - இத்தனை திசை திருப்பலுக்கு நடுவே - கலைஞர் மீது ஆர்.கே.நகர் ரவுடி போல சேகர்பாபு பாய்ந்து மைக்கைப் பிடுங்கி கலைஞரை அடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நல்லவேளையாக பரிதி இளம் வழுதியும், வி.பி.துரைசாமியும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும், நெல்லை கருப்பசாமி பாண்டியனும் குறுக்கே அரண் போல நின்று சேகர்பாபு கலைஞரின் அருகே 1 நொடிக்குள் தாக்கி விடுவதுபோல வந்தபோது - தடுத்துக் கலைஞரைக் காத்திருகிறார்கள்.

"வாடா டேய், என்பது முதல் இன்னபிற வடசென்னை "வளமான தமிழில்" சேகர்பாபு கத்துவது - லிப் ரீடிங்கில் நன்றாகவே தெரிகிறது.

லோக்கல் கிரிக்கெட்மேச் பையன்கள் அடித்துக் கொண்டால் பேசும் - *த்தா, பு**, ல** என்பதுபோலவெல்லாம் பேசியதாகச் சொல்கிறார்கள் பார்த்தவர்கள்!

தூக்கி வீசப்பட்ட பிறகும், மீண்டுமொருமுரை சபைக்குள் ஓடிவந்து மீண்டும் கலைஞர் மீது பாய்கிறார் - சேகர்பாபு.

நடந்ததை வைத்துப் பார்க்கையில் இது நிச்சயம் திட்டமிட்டு - தமிழகத்தில் மிகப் பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையிலேயே செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இட ஒதுக்கீடு பற்றி ஏதும் பேசாத ஜெ. நாளை சபைக்கு வருகிறாராம்!

தேர்தலின் போது - ஜெ. கூட்டணியை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்து - நம்முடைய வலைப்பதிவு (பதிவர்) பத்திரிக்கையாளர்கள் இரண்டுபேர் எழுதிக் கிழித்தனர்!

அவர்கள் வெட்கப்படாமல் வந்து அவ்வாறு எழுதியதற்கு மன்னிப்புக் கோரினால் அவர்களின் நம்பகத்தன்மைக்கு நல்லது.

கால்கரி சிவா said...

நடந்தது அநாகரிகத்தின் உச்சம். ரௌடிகள் அரசியலிருந்து ஒழிய வழியே இல்லையா?

இதுதான் தமிழன் தமிழனுக்கு காட்டும் மரியாதையா?

இவ்வாறு சட்டசபையில் ரௌடி தனம் செய்பவர்களைத் அவர்கள் எம் எல் ஏ பதவியிலிருந்து தூக்கி எறிய மக்களிடம் அதிகாரம் வேண்டும்

நியோ / neo said...

1

2

3

4

5

நியோ / neo said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா :)

>> இவ்வாறு சட்டசபையில் ரௌடி தனம் செய்பவர்களைத் அவர்கள் எம் எல் ஏ பதவியிலிருந்து தூக்கி எறிய மக்களிடம் அதிகாரம் வேண்டும் >>

தேர்தல், சனநாயகம் என்றெல்லாம் பேசினாலும் - மிகக் குறைந்தபட்சம் - சட்டமன்றத்தில் Physical Violence-இல் ஈடுபடுபவர் மீது இதுபோல "திரும்பப் பெறும்ம்" அதிகாரம் மூலம் அவர்களை பதவி இழக்கச் செய்வது சரிதான் என்று எனக்கும் தோன்றுகிறது.

கட்சி சார்புகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் - ஒரு Mercenary, Hit man போல நடந்து கொள்ளத்தானா சட்டசபை உள்ளது? :(

நியோ / neo said...

ஜெ. சட்டமன்றத்திற்கு வருவதாக அறிவித்திருப்பது மீண்டும் ஒரு கலவர நாடகம் போடத்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இந்தமுறை ஜெ.விற்கு எந்த விதமான கரிசனமும், அனுதாபமும் மக்களிடையே கிடைக்கப் போவதில்லை.

ஒரு "சொர்ணக்கா"வை எப்படி பார்க்க வேண்டுமோ அவ்வளவு மரியாதை கூட ஜெ.வுக்குத் தரவேண்டியதில்லை.

இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான்.

ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை.

Machi said...

"சோ" இதை வைத்து திமுகவை மட்டம் தட்டி சாணக்கியதனமா அடுத்த துக்ளக்கில் கார்ட்டூன் போட்டாலும் போடுவார். அதை நாலு பேர் படித்து புழங்காகிதம் அடைய தான் போறாங்க.

அதிமுக மிக மிக கேவலமான நிலைக்கு போய்க்கிட்டிருக்கு. சீ தூ .
ஜெ சட்டசபையில் இருந்திருந்தால் புடவைய இழுத்தான், கிழிச்சான் அப்படின்னு நாடகம் போட்டிறுப்பாங்க இப்ப அதுக்கு வழியில்லாம போயிடுச்சு. ஆனா நாளைக்கு வந்து மானபங்க நாடகத்தை நடத்தினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நியோ / neo said...

ஜெ. இன்று சட்டசபைக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில உளறிக் கொட்டியதைப் போல உளறிக்கொட்டி கலைஞரிடம் பதிலடி வாங்கியிருக்கு! ;)

Muthu said...

அதிமுக காரர்கள் நாகரீகம் உலகறிந்தது. இது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.

சந்தர் said...

இதெற்கெல்லாம் பின்னனி ஜெ நேற்று அறிக்கை படித்தபோது தெரிந்திருக்கும். "நாங்கள் மொத்தம் 61 பேர்" (இதற்கு அர்த்தம் நாங்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்வோம். நீங்கள் எதாவது செய்தால் எங்கள் இனத்தை துணைக்கு அழைப்போம். பெண்ணென்றும் பாராமல்... என்கிற சிறப்புவாய்ந்த வாக்கியத்தை வைத்தே காரியம் சாதித்துக் கொள்வோம்! என்பது தான். கலைஞர் இன்னமும் மெத்தனமாக இருப்பபது சரியல்ல.

நியோ / neo said...

குறும்பன், வருகைகும் கருத்துகும் நன்றிகள்! :)

நியோ / neo said...

முத்து! வருக! அதிமுக-வின் அநாகரீகம் என்பது இப்போது பரிணாம வளர்ச்சி பெற்று காட்டுமிராண்டித்தன நரமாமிசம் உண்கிற கற்காலத்தனத்துக்குப் போயிருக்கிறது.

சந்தர் said...

//"சோ" இதை வைத்து திமுகவை மட்டம் தட்டி சாணக்கியதனமா //
சோவை எல்லாம் சாணக்கியன் என்று நீங்க தான் மெச்சிக்கணும். எல்லோரும் கோமாளி என்ற அளவுக்குள் கூட சேர்ப்பதில்லை!!

நியோ / neo said...

>>இதற்கு அர்த்தம் நாங்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்வோம். நீங்கள் எதாவது செய்தால் எங்கள் இனத்தை துணைக்கு அழைப்போம். >>

ப்ரதிமா,

வருக! போலிப் பெண்ணியவாதிகளின் கருணையால் ஒரு பூதமாக வலர்ந்து நிற்கிறார் ஜெ.

>> பெண்ணென்றும் பாராமல்... என்கிற சிறப்புவாய்ந்த வாக்கியத்தை வைத்தே காரியம் சாதித்துக் கொள்வோம்! என்பது தான். கலைஞர் இன்னமும் மெத்தனமாக இருப்பபது சரியல்ல. >>

நானும் இவ்விஷயத்தில் கலைஞர் அதிரடி நடவடிகையாக எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அராஜகவாதிகளை இன்னமும் மென்மையான முறையிலேயே அணுகுவது சரியல்ல. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவதுதான் சரி.

நியோ / neo said...

அங்கே சிலர் கலைஞர் மீது 'ஒரு அடியும் படவில்லையே - ஒரு Expression-உம் காட்டாமல் நல்லாத்தானே உட்கார்ந்திருந்தார்' என்று அராஜகமாகப் பேசிவருகிறார்கள். நமக்குத் தெரியும் இவர்களுக்கெல்லாம் கலைஞர் மீது அடி விழலையே என்று கடுப்புதான் என்று.

இதுபோன்ற 'கோடாரிக்கம்பு'களை விறகுக்குப் போட்டு எரிக்க - ஒருநாள் தமிழன் முடிவெடுப்பான்; அன்று, ஒடுக்கப்பட்டோர் 'போகி' கொண்டாடக் கூடும்!

Radha N said...

உங்கள் தலைப்பே முதலில் தவறு. கலைஞர் மீது தாக்குதலே நடக்கவில்லை. அப்படியிருக்க அதெப்படி நீங்கள் கலைஞர் மீது தாக்குதல் என்று போடுகிறீர்கள். புரியலீங்க.. விவாதம் என்பது சாதி மத பேத அடிப்படையில் இல்லா மல் இருக்கவேண்டும். யாரும் எந்தக் கருத்தையும் சொல்லலாம். உங்களின் வார்த்தைப் பி ரவாகம் சற்று முகம்சுளிக்க வைக்கிறது. ஜெ.யும் க.வும் மக்களுக்குப் பொதுவானவர்கள். நீங்கள் என்னவோ ஜெ.வைப்பற்றிப் பேசினால் ஒரு சாதியினராகத்தான் இருக்கமுடியும் என்ற முடிவில் பேசுகிறீர்கள். ஆக நீங்கள் சாதி வெறியில் பேசுகிறீரா அல்லது கலைஞர் மீது பற்றுதலால் பேசுகிறீரா என்று புரியவில்லை. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்துப்படியுமேயானாலும் அனைத்து சாதியிலுமே மேற்சொன்ன இருவரின் விசுவா சிகள் இருக்கிறார்கள். ஆக சாதிவேறு ஆட்சியாளர்கள் வேறு. உங்களை மாதிரி ஆட்கள் இருக்கிற காரணத்தினால் தான், அரசியல் கட்சி சாதி வேடம் புனையும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.

பாலசந்தர் கணேசன். said...

அதிமுக ஆட்சியில் எதிர்கட்சிகள் எவ்வாறு நடத்த படுவார்கள் என்பது எல்லாருக்குன் தெரிந்த ஒன்று. சேடபட்டி முத்தையாவும், காளிமுத்துவும் சபாநாயகர்களாகவே நடந்து கொள்ளவில்லை. பழனிவேல் ராஜன் இவர்களுக்கு எவ்வளவோ மேல். அ.தி.மு.க சட்டசபையில் நல்ல ஆளுங்கட்சியாகவும் நடக்கவில்லை. எதிர்கட்சியாகவும் நடக்கவில்லை. திமிர் பிடித்த சுயநலத்தின் உச்சம் ஜெயலலிதா.

VSK said...

விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், துணிந்து சொன்ன நாகுவிற்கு என் வாழ்த்துகள்!

ஜாயின் த க்ளப்!

சீக்கிரமே சொல்லடி பட்டுத் துரத்தப் படுவீர்கள்1
அல்லது முத்திரை குத்தப் படுவீர்கள்!

ஒத்த கருத்து இல்லையெனில், ஓரம்போ என்பதுதான் எழுதி வைக்கா சட்டம்!

இதுகூட வெளிவருமோ என்பது ஐயமே! ஆகவே, உங்களுக்குத் தனி மடல்லிலும் அனுப்பியுள்ளேன்!

நியோ / neo said...

>> உங்கள் தலைப்பே முதலில் தவறு. கலைஞர் மீது தாக்குதலே நடக்கவில்லை. அப்படியிருக்க அதெப்படி நீங்கள் கலைஞர் மீது தாக்குதல் என்று போடுகிறீர்கள். >>

அடடா! உங்கள் நேர்மை(!) கண்டு உள்ளம் பூரிக்குது!

சேகர்பாபு பாய்ந்து மைக்கைப் பிடுங்குவதையும் அதைக் கொண்டு கலைஞரை நோக்கிப் பாய்வதையும், சாத்தூரார், பரிதி ஆகியோர் இடைநின்று காத்ததையும் எல்லோரும் கண்டபின்னும் - 'அதுதான் கலைஞருக்கு மண்டை உடையவில்லையே' என்று வக்கரித்த மனதோடு பேச வந்துவிட்டீர்!


>> புரியலீங்க.. விவாதம் என்பது சாதி மத பேத அடிப்படையில் இல்லா மல் இருக்கவேண்டும். யாரும் எந்தக் கருத்தையும் சொல்லலாம். >>

முதலில் நடந்த படுகேவலமான, காட்டுமிராண்டித்தனமான, கொலைவெறித்தனமான அதிமுக-வின் ரவுடித்தனத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் துப்பு உங்களுக்கு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு நடுநிலைவியாதி வேடம் போட வரலாம்.

யாரோ நாலு ரவுடிகள் அடித்துக் கொண்டதைப் பெரிதா பில்டப் குடுக்கறானுங்கோ என்று - கடும் வன்மத்தோடு பேசுகிறவர்களின் நேர்மையையும் உள்நோக்கத்தையும் யாரும் சந்தேகித்தான் செய்வார்கள்.

அதுவுமில்லாமல் - இப்போது இடஒதுக்கீட்டை எதிர்த்து மூர்க்கத்தனமாக எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களில் யாராவது ஒருவர் - இந்தக் கேவலமான சம்பவத்தைக் கண்டித்தோ அல்லது விமர்சித்தோ எழுதியிருக்கிறார்களா என்றால் தேடவேண்டியதுதான்!

ஜெ.வை ஆதரிப்பவர்கள், அல்லது நேரடியாக ஆதரிக்க முடியாமல் (சில சுப்பிரமணிய காரணங்களுக்காக!) மறைமுகமாக தாங்கிப் பிடிப்பவர்கள், நடுநிலைமைவியாதி வேடம் போடுபவர்கள் - எல்லோரும்(பெரும்பாலும்) இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களாக இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வா??

எனக்குத் தெரிந்து சமூகநீதியினால் கல்வி பெற்ற சிலரும் - (தேர்தல் சமயத்தில் ஜெ.வினை ஆதரித்து பதிவுகளில் கம்பு சுத்திக் கொண்டிருந்தவர்கள்) - இப்போது இடஒதுக்கீடு குறித்து ஏதும் பேசாமல் இருப்பது எந்த "எஜமானர்களின்" கால்நக்கும் விசுவாசப் புத்தி?

இங்கே எஸ்கே என்றொரு "அச்சுபிச்சுப் பாட்டையா" உங்களை வந்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போகிறார். அவரது நிலைப்பாடுகள் என்னவென்பதும் தெரிந்ததுதானே!

ஜெ. ஒரு பார்ப்பனீய, இந்துத்துவவாத முகமூடிகளின் பினாமி சக்தி.

"நாங்க சாகற வரைக்கும் எம்சியாருக்குதேன் ஒட்டுப் போடுவோம் - அவரு கட்சி ரெட்ட எலை-க்குத்தேன் எங்க ஓட்டு" என்று வெள்ளந்தியாய்த் திரியும் ஒடுக்கப்பட்ட மக்களின் வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி - "திராவிடம்", "அண்ணா" போன்ற தமிழர்களின் உன்னத பண்பாட்டு/சமூக/அரசியல் அடையாளங்களை - சிதைத்துச் சின்னாபின்னமாக்கி மகிழ்ச்சியுறும் - பார்ப்பனீயச் சதியே ஜெ.வின் அதிமுக தலைமை.

ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழன்/திராவிடன் இழிவுறக் காரணமாயிருந்த 'பார்ப்பனீய - சத்திரிய' கூட்டணியே அதிமுக-வின் அடிநாதம்.

இந்த அடிப்படை, வரலாற்று / அரசியல் போக்குகள் தெரிந்தவர்க்குப் புரியக் கூடிய கருத்துருவாக்கம்தான் - அதிமுக-வின் - அதை வெறித்தனமாகத் தூக்கிப் பிடிப்போரின் அடிமனக் கொள்கை. இதை மறுக்க எவனுக்கும் துணிவிருக்கிறதா?

பார்ப்பனீயத் தலைமை - அதை தாங்கிப் பிடிக்கும், தூக்கி வைத்து முன்னெடுக்கும் முக்காடு போட்ட - நிலவுடமைச் சிந்தனையும், "சத்திரிய" மனோபாவமும் கொண்ட மாஃபியா கூட்டம் - இதுதான் அதிமுக.

இந்தப் புரிதல் வெறும் ஒரு "சாதியின்", "கும்பலின்" மீதான "அடையாளங் காட்டப்படல்" என்பது ஒற்றைத்தன்மையான புரிதல்.

அதையும் மீறி - ஆண்டாண்டு காலத்துக்கும் முன்னர் - துடியனோடும், கிணையனோடும், பாணனோடும் - ஒன்றாக உட்கார்ந்து பழரசமும், பானமும் அருந்தியிருந்த எம்முடைய சங்ககால 'அரசன்' என்கிற சமதர்மக் கருத்தாக்கத்தை - சிதைத்து சின்னாபின்னப்படுத்தி - தம்முடைய வர்ணாஸ்ரம சனாதனச் சனியனை, அவ்வடிப்படையிலான சமூகத்தை அமைப்பதற்கென்று சதி செய்து :

"நீ கடவுளின் அவதாரம்; விஷ்ணுவின் அவதாரம் - நீயும் உன் குலமும் கடவுளின் நேரடி விருப்பத்தால் குடிகளை ஆளவே பிறந்துள்ளீர்கள் - நீவிர் சாதாரனக் குடிகளினும் மேலான பிறப்பால் பெருமையடைந்தவர்- நீர் சத்திரியர் - ஆளப் பிறந்தவர்"

- என்று அரசர்களின் மனதில் நஞ்சை விதைத்து - அதன்மூலம் ஆட்சியதிகாரம், சமுகம், கல்வி, சமயம், பாடல், இசை, கலைகள், கருத்தாக்கங்கள், நிலவுடமை, வாழ்க்கை - என்று அனைத்திலும் வர்ண நஞ்சைக் கலந்த பார்ப்பனர்கள் - எந்த நஞ்சைக் கலந்தார்களோ - அந்த நஞ்சுதான் - 'நான் ஆளப் பிறந்தவன்' என்கிற "சத்திரிய" செருக்கை ஏற்படுத்தி - எம்மக்களை இந்தியத் துனைக்கண்டத்தை முழுமையுமே - "சூத்திரர்களின்" பூமியாக மாற்றியது.

எந்தக் கருத்தாக்கம் எம் இனவீழ்ச்சிக்கு வழிவகுத்ததோ - அதேதான் - இன்று பெரியார், அண்ணா காலத்துக்குப் பின்னர் - மீண்டும் தமிழகத்திலே கோலோச்ச - சதியால் அதிமுகவாக உருவெடுத்தது.

அதை முழு நோக்கமாகக் கொண்டு 1989 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

அதன் காரணமாகத்தான் 1989-இலும் சரி, இப்போதும் சரி அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட ஒருபோதும் விரும்பாது; வன்முறையைத்தான் தூண்டிவிடும்.

1991-96 மற்றும் 2001-06-இல் அதிமுக ஜெ.வின் சர்வாதிகார, சனாதன ஆணவப் போக்கு - என்று எதையும் கண்டிக்காத ஆட்கள்-தான் - அதே ஆட்கள்தான் - இப்போது இடஒதுக்கீடு பற்றியும் வாயே திறக்கவில்லை.

கலைஞர் அடிபடவில்லையே என்று தங்கள் "ஏக்கத்தையும்" தெரிவிக்கிறார்கள்!

சமூக நீதியையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்ட கட்சிக்கு இன்று வலையுலகிலும், வெளியிலும் அபிமானிகள் யார்?

பார்ப்பனீயவாதிகள் - அல்லது "பழைய" "சத்திரிய"க் கனவுகளில் மிதக்க விரும்பும் வர்ணாஸ்ரம கணவான்கள், இந்துத்துவ ஒற்றர்கள்!

இவர்களில் சிலர் அதே சமூக நீதியால் பலன் பெற்று வளர்ந்திருப்பதையும் மறந்துவிட்டு - பார்ப்பனீயவாதத்துக்கு கால் அமுக்கிவிட, முதுகு சொறிந்து விட சித்தமாயிருக்கிறார்கள்!

இவர்களுக்கெல்லாம் பேச்சு ஒரு கேடு!
அடி செருப்பால.


>>உங்களின் வார்த்தைப் பிரவாகம் சற்று முகம்சுளிக்க வைக்கிறது. >>

" கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே!"


- "திராவிட இயக்கத்தின் வெற்றிச்சங்கு" "புரட்சிக் கவிஞன்" பாவேந்தன் பாரதிதாசனார்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

This is JJ's Plot

VSK said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

வணக்கம் நியோ!

நான் புதியவன் உங்கள் பதிவுகள் படித்துகொண்டு வருகிறேன்,
பின்னூட்டம் இட்டேனா என தெரியவில்லை. நீங்கள் சொல்வது உங்களைப் பொருத்தவரை சரியே! அதை ஒருவர் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம் எனவே அதைனை குறை கூற வேண்டாமே,உங்களது பதிவையும் நேரம் ஒதுக்கி படித்துவிட்டு தானே பதில் சொல்கிறார்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது ,கடுமையான கருத்து எனில் கடுமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்பதில்லையே! இங்கு வலைபதிவோரின் கருத்துகளை படித்தால் புதிய கருத்தாக்கம் பிறக்கும் என நம்புவோரில் நானும் ஒருவன்! அது பேராசையாக கூட இருக்கலாம்!


நீங்கள் நல்ல கருத்தை சொன்னாலும் பெரும்பான்மையினர் வாசிக்காமல் விலகி செல்ல வைத்து விடும் போல் உள்ளது அனுகுமுறை!.உங்களுக்கு நான் ஏதோ உபதேசம் செய்வதாக எண்ண வேண்டாம்,உங்கள் கருத்துகள் பிற்காலத்தில் படிக்கபடாமலேயே இப்படித்தான் இருக்கும் என முன்கூட்டியே நினைக்க வைத்து விட கூடாதல்லவா!

நாகு,எஸ்கே போன்றோர் கருத்து கூறினால் ரொம்ப காட்டமாக ,

//இங்கே எஸ்கே என்றொரு "அச்சுபிச்சுப் பாட்டையா" உங்களை வந்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போகிறார். //

என்றெல்லாம் சொல்வது மிகையாக உள்ளதே! அவர்களும் உங்கள் வலைப்பதிவின் வாசகர்கள் அல்லவா! நம்மை வாசிக்கிறார்கள் என்பதற்காகவது கடும் சொற்களில் சொல்லாமல் விடலாம்.பின்னர் அவர்கள் ஒரு கருத்தினை முன் வைத்து வலைபதிவு இடும் போது உங்கள் கருத்தை சொல்லி விட்டு போங்களேன்! தன்னிச்சையாக இதனை சொல்கிறேன் தவறெனில் மன்னிக்கவும்!

இப்படிக்கு அன்புடன்
சகதமிழ் வலைப்பதிவன்
வவ்வால்

நியோ / neo said...

SK Said :



நியோ,
தங்களது தவறான தலைப்பினைச் சுட்டிக்காட்டி
தயங்காமல் சொன்னவரை "ஏக்கம்" என இனம் பிரித்த
தங்களது தளராத துடிக்குணத்தைப் பாராட்டும் வேளையில்
தீரா அரிப்புடன், எனைத் தூற்றி மகிழ்ந்திட்ட
துணிவிலாச் செய்கையினை என் சொல்லி மகிழ்வேன்!

( Sk - Comment Edited - Hope you got my pinnoottam)

நியோ / neo said...

வவ்வால்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

>> நான் புதியவன >>

என்கிறீர்கள்; அதனால் உங்களுக்குச் சில எதிர்வினைகளை கடுமையாக வைப்பதன் தேவை விளங்காமல் இருக்கலாம். விரைவில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி :)

VSK said...

என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டீர்கள், வவ்வால் அவர்களே!
மிக்க நன்றி!

வவ்வால் said...

வணக்கம் எஸ்.கே.

நெகிழும் அளவுக்கு என்ன செய்துவிட்டேன்,கருத்துடன் கருத்து கொண்டு மோதலாம் ,மனிதர்கள் மீதல்ல என்பதையே சொன்னேன். அனைவரும் நண்பர்களே சில சமயம் கருத்து வேறுபாடு முற்றி தனி மனித தாக்குதலாக போவதை கூடுமானவரை தவிர்த்தல் அனைவருக்கும் நலம் பயக்கும்.வாருங்கள் எப்போதும் போல விவாதிப்போம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் !

நியோ அவர்கள் அனைத்து கருத்துகளுக்கும் இடம் தரும் பரந்த நோக்கு கொண்டவரே என்ன காட்டமாக சொல்லிவிடுகிறார் :-)) எனது பின்னூட்டதை வெளியிட்டமைக்கு நன்றி நியோ!

Radha N said...

நியோ அவர்களுக்கு,

தங்கள் கருத்தினை பதிவாக வெளியிட்டு, அதற்கான விமர்சனைத்தினையும் எதிர்பார்த்துக் கா த்திருந்து, தங்கள் மனதினுள் நினைத்து வைத்திருந்த விமர்சனத்திற்கு மாறா ன ஒன்று வந்தால், அதனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லையேல் இணையதளத்தில் அனைவரும் படிக்கும் வகையில் வெளியிடக்கூடாது.

ஒரு கயிற்றினை அரையிருட்டில் நோக்கும் போது, சிலருக்கு பாம்பாகத் தோன்றலாம், சிலருக்கு கயி றாகத் தோன்றலாம். அதனை ஆராய்ந்து முடிவெடுக்காமல், போதுமான காரணிகளை வைத்துத்தான் முடிவெடுக்கவேண்டுமே தவிர, வேறுவகையில் அல்ல.

ஒரு கேள்வியை உருவாக்கிவிட்டுத்தான் பதில் தேடவேண்டும். ஆனால் நீங்கள் (உங்களுக்குச் சா தகமான) ஒரு பதிலை வைத்துக்கொண்டு அதற்குரி ய கேள்வியைத் தேடுகிறீர்கள்.

ஏன் ஆரோக்கியமான அரசியல் விமர்சனம் செய்யக்கூடாதா?

தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.


(இதனை வெளியிடலாம், ஆனால் வெளியிடாலும் போகலா ம், ஒன்று சொல்லிக்கொள்கிறேன். வயது வித்தியாசம் தெரியாமல்தான் நாம் இங்கே ஒருவர் கருத்தினை ஒருவர் விமர்சனம் செய்து கொ ண்டிருக்கிறோம். தாங்கள் கடைசிவரை தங்களின் வார்த்தைகளில் மென்மைப் போக்கை கடைபிடிக்க மறுப்பதால் தங்களின் பதிவிற்குள் இனிமேல் நுழைய விருப்பமில்லை.)

நியோ / neo said...

>> ஏன் ஆரோக்கியமான அரசியல் விமர்சனம் செய்யக்கூடாதா? >>

உங்களுக்கும் மேலே சொல்லியுள்ள வார்தைதைகளுக்குமான தொடர்பை நியாயப்படுத்துமாறுதான் நடந்து கொண்டிருகிறீர்களா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

இன்னமும் அன்று நடந்த சம்பவம் பற்றிய எந்தவொரு காத்திரமான விமர்சனத்தையும் நீங்கள் செய்யவில்லை.

எதைச் செய்வது, செய்யக் கூடாது என்று முடிவு செய்து கொள்ள உங்கட்கு உரிமையிருக்கிறது.

யார் எந்த முக்காட்டுக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார்கள் என்பதைக் காட்டும் உரைகல்லாக பதிவுகளும், பின்னூட்டங்களும் உள்ளன.

பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் - இங்கு நடக்கும் பார்ப்பனீய-சனாதன அரசியலை.

மாயவரத்தான் said...

Hi,

Can u plz. send me ur mail address to mayiladuthurai@gmail.com?

Tks,

Omni said...

Hello from the USA!! :-)