05 May 2009

எவனடா தமிழினத் தலைவன்?

இனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக தன் உட்லையே எரித்து வெளிச்சம் கொடுக்கிறானோ - அவனையே தலைவன் என்று மக்கள் வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து நான் ஒருபோதும் பார்த்திராத என் உடன்பிறப்பு முத்துக்குமாருக்கு உரித்தானது.

தன் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த முடிவுக்கு எதிராகச் சுயநலத்தோடு செயல்படும் "மாக்களுக்கு" இனி இனத்தலைவன் என்கிற பட்டம் கிடைக்காது.

இனி எந்தத் தனிமனிதனுக்கும் அந்த உரிமை கிடைக்கப்போவதும் இல்லை.

கருணாநிதி இப்போது இருந்தும் "இல்லாதவராக" இருக்கிறார். 70 ஆண்டு கால பொதுவாழ்வின் பலனை 6 மாதங்களில் தானாகவே துவம்சம் செய்து விட்ட முட்டாளாகவே அவரைப் பார்க்க வேண்டும் இனி. எந்தக் கொள்கைக்காகப் பாடுபட்டாரோ அதற்கு எதிரான திசையில் போய்த்தான் அவரின் இறுதிக்காலம் முடியப் போகிறது என்பது துற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

திராவிட-தமிழ் இயக்கங்கள் மீண்டும் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. தனி மனிதர்களின் மீது அல்ல தங்கள் பற்று - இனத்தை மீட்டெடுப்பதும் - அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை நிலையை மாற்றுவதும்தான் திராவிட-தமிழ் இயக்கங்களின் உள்ளீடு.

அதை இனி எந்தத் தனியொரு தலைவனின் காலடியிலும் கொண்டுபோய் அடகு வைக்கும் கூமுட்டைத்தனத்தை தமிழன் செய்ய மாட்டான்; கூடாது.

திமுக - எதுவரை தமிழின வேட்கைகளை மதிக்கிறதோ அதுவரைதான் அதற்கு மரியாதை என்பதை மறந்து விட்டது. putting the cart before the horse என்பது போல தமிழின விருப்பங்களை காலில் போட்டு மிதித்தாலும், தன்னை விட்டால் இந்த தமிழன்களுக்கு வேறு நாதி இல்லை - என்ற மமதையில் கருணாநிதியும், திமுக-வும் செயல்படுவது நன்றாகத் தெரிகிறது.

மமதையில் இருப்பவர்களுக்கு - அதிகார போதையில் இருப்பவர்களுக்கு - பெரியார் தி.க-வினர் பாடம் புகட்டியிருக்கிறார்கள். அது நண்பர் லக்கிலுக்கு-க்கு கடுப்பைத் தருகிறது என்றால் - அவருக்கு இன்னும் நிறைய கடுப்பு ஏற்படும் காரியங்கள் வரும் காலங்களில் தொடர - நான் விழைகிறேன்.

1967-இல் "உணர்ச்சி வசப்பட்ட" - தமிழர் கூட்டம் இவர்களுக்கு "வரலாற்றுத் திருப்பமாக" தோன்றும் - ஆனால் இப்போது, மட்டும் தமிழன் "உணர்ச்சிய" அடக்கி இமயமலை ஏறிவிடவேண்டுமாம்! ... த்தா அடங்குங்கடா டேய்.

உன் வேலை தமிழின உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, அரசியல் அங்கீகாரம் அளிப்பதுதான்; அதற்குத்தான் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திமுக-வை , கருணாநிதியை ஏற்றிவைத்தோம், தலையின் மேல்.

அது என்ன ஆயுட்காலப் பதவியா - பட்டா போட்டு அனுபவிக்க? உனக்கு நாற்காலியில் உட்கார முடியாவிட்டால் - குண்டி வலிக்குமென்பதற்காக - நாங்கள் எங்கள் உரிமையை இழக்க வேண்டுமா?

நினைவில் வைத்துக்கொள்வீர். தமிழினம் தனக்கான தலைமையை மக்களிடம் இருந்து மீண்டும் கண்டு கொள்ளும் - உயர்த்தும்.

"அவாள் நமக்கு எப்போதும் சவால்தான்" - என்று வசனம் எழுதி விட்டு - சம்பந்திப் பாப்பான் இந்து ராம் என்கிற தமிழின விரோதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடும் - நடமாடும் பிணங்கள் எமக்குத் தலைமையேற்க முடியாது.

ஏசுநாதரை - யூதர்கள் குற்றஞ்சுமத்தி பழித்தபோது - தன் பதவியைக் காத்துக் கொள்ள - "ரோமானிய" பேரரசின் கைக்கூலி பிலாத்து மன்னர் - ஏசுவைக் கைவிட்டது போல - தமிழீழத்தைக் கைவிட்ட கருணாநிதி - வரலாறு முழுதும் பழிக்கப்படுவார்.

Sonia cannot be compared with the Italian Mobsters from Martin Scorsese's movies; coz the mobsters had a code of honour. But yet, the stink of Mussolini, the Mobsters, and the backstabbing roman agent pontius pilate emanate from Sonia's house.

We, the tamils, shall prevail - inspite of judas amongst us.

19 comments:

maanam ketta thi.mu.ka-kaaran said...

pinnuutta karunanidhi-thanam. :)

முத்துகுமரன் said...

நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது தமிழினம். மருந்து கொடுக்கிறேன் என்று பெட்ரோலை தீர்த்தாமாக தெளித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி!

நம் இரு பதிவுகளுக்கிடையே பல இடங்களில் ஒத்த சிந்தனைகள் வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம்

நியோ / neo said...

அருமையாகச் சொன்னீர்கள் முத்து!

முடிந்தவரை வார்த்தைகளுக்கு அணை போட்டிருக்கிறேன்.

அணை இப்போது நிரம்பி வழிகிறது! :)

Anonymous said...

//எந்தக் கொள்கைக்காகப் பாடுபட்டாரோ அதற்கு எதிரான திசையில் போய்த்தான் அவரின் இறுதிக்காலம் முடியப் போகிறது என்பது துற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.//

இது மட்டும் தான் இந்தப் பதிவில் இடிக்கின்றது. தன் குடும்ப நலம், அரசியல் குள்ளநரித்தனம் போன்றவை தானே இந்த ஈனத் தலைவனின் கொள்கை.. அப்படியிருக்க, அதற்கு எதிர் திசையில் என்ன நடந்துவிட போகின்றது?

//தன்னை விட்டால் இந்த தமிழன்களுக்கு வேறு நாதி இல்லை - என்ற மமதையில் கருணாநிதியும், திமுக-வும் செயல்படுவது நன்றாகத் தெரிகிறது.//

கருணாவுக்கு தெரிகின்றதோ இல்லையோ, இங்கு உலாவும் இணைய அல்லக்கைகளுக்கு அப்படித் தான் நினைப்பு... ஆப்பு வைக்கப் போகின்றதாம் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஜந்து.. யாருக்கென்று தான் தெரியவில்லை...

//பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போராட்டத்தில் திமுக-வை , கருணாநிதியை ஏற்றிவைத்தோம், தலையின் மேல்.//

இப்பொழுது கொலைஞரே ஒரு முழுப்பார்ப்பான்...

Anonymous said...

எவன்டா அது தேசிய தலைவன்

ஜோ/Joe said...

ஏதாவது ஓரிரு வரிகளை மேற்கோள் காட்டி வழிமொழியலாம் என நினைத்தேன் ..வழியில்லை ..மொத்த பதிவையும் வழிமொழிகிறேன்.

Anonymous said...

unarchimikka pathivu...

DK,DMK & MK ella thaayozhingalum thiraavida, periyaariya sinthanaiyil irunthu vilagi varudangal pala aagirathu.

namakku vedhanai mattume michcham :(

- Pot"tea"kadai

Anonymous said...

அப்படியாடா! நீ சொன்னா சரிதான்டா!

Anonymous said...

The question is idiotic.

Karnanidhi did not style himself as leader of tamils. He is so called by his party cadres.

Suppose some one calls in a way he likes, which you dont like, what can I do for that?

As Srilankan Tamils, you have been also calling him so, for many, many years.

Now, you change the record; because karnunanidhi cant go all the way to halt the operations of SL army.

Suppose tomorrwo he does succeed. You will call him leader of Tamils.

Mistake is with you, not with him.

வரவனையான் said...

"இனியுந்தன் மந்திரத் தமிழ் எம்மை மயக்காது"



1000% ஆகச்சரியான பதிவு. இதைக்கூட செய்யவில்லையெனில் நம் நாவில் தமிழ் புரண்டென்ன பயன்.

பதி said...

//ஏதாவது ஓரிரு வரிகளை மேற்கோள் காட்டி வழிமொழியலாம் என நினைத்தேன் ..வழியில்லை ..மொத்த பதிவையும் வழிமொழிகிறேன்.//

ரிப்பீட்டேய்

நியோ / neo said...

>> ஏதாவது ஓரிரு வரிகளை மேற்கோள் காட்டி வழிமொழியலாம் என நினைத்தேன் ..வழியில்லை ..மொத்த பதிவையும் வழிமொழிகிறேன். <<

நன்றி ஜோ.

நியோ / neo said...

>> DK,DMK & MK ella thaayozhingalum thiraavida, periyaariya sinthanaiyil irunthu vilagi varudangal pala aagirathu.

namakku vedhanai mattume michcham :(

- Pot"tea"kadai <<

சரியாகத் தூக்கம் வரவில்லை; சாப்பிட முடியவில்லை. உயிரோடிருக்கிறேனா இல்லையா என்றொரு குழப்பமான துக்கம்.. :(

ஆற்றாமையை சொற்களில் இறக்கி வைக்கும் முயற்சி கூட உயிரில் கொஞ்சம் இறந்துபோகும் உணர்வை ஏற்படுத்துகிறது.

நியோ / neo said...

வரவனை!
>> "இனியுந்தன் மந்திரத் தமிழ் எம்மை மயக்காது" <<

பேசிப்பேசியே ஒரு இனப்படுகொலையை மறைத்துவிடலாம் என்று எண்ணுகிற அளவு ஈழத்தமிழர்கள் இவர்களுக்கு என்ன தீவினை செய்தார்கள்? :(



>> 1000% ஆகச்சரியான பதிவு. இதைக்கூட செய்யவில்லையெனில் நம் நாவில் தமிழ் புரண்டென்ன பயன். <<

நம்மால் முடிந்தது மனதில் உள்ளதைச் சொல்வதுதான். அதையும் விட முக்கியம் - நடந்ததைப் பதிவு செய்து வைப்பது.

நம் சந்ததிகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆவணப் படுத்துதல் பணியை நாம் இன்று செய்யத்தான் வேண்டும்.

நியோ / neo said...

பதி!

வருகைக்கு நன்றி.

Anonymous said...

//இனத்தலைவன் என்கிற பட்டம் கிடைக்காது.//


முண்டம் நியோ,

எந்த கொம்பனும் மஞ்ச துண்டு அய்யாவிடமிருந்து தமிழினத் தலைவன் பட்டத்தை பிடுங்க முடியாது.அப்படியே பிடுங்கினாலும் வேறு எந்த சொறி நாயுக்கும் திராவிட தமிழ் முண்டங்களுக்கு ஏற்ற தலைவனாக தகுதி கிடையாது.மானமிகு முண்டம் கூட நிரம்பவே முயற்சி செய்தால் தான் இந்த பிரியாணி நாய்களுக்கு தலைவனாக முடியும்.புரிந்து கொள்ளடா முண்டமே.

Anonymous said...

பிரபாகரன் மலையாளத்தானாமே?

ஆமா தமிழர்களுக்கு தமிழனா ஒரு தலைவன் கூட கிடைக்க மாட்டானா?

கன்னட ஜெயா, மலையாள எம்ஜியார், மலையாள பிரபாகரன், கொல்ட்டி கோபால்சாமின்னு சுரணை கெட்ட கும்பலா தமிழர்கள் இருக்கிறோமே?

Anonymous said...

This theme is simply matchless :), it is interesting to me)))

Anonymous said...

Directly in the purpose