சும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் போய் விடுமோ என்கிற பயமும் சேர்ந்து கொண்ட பின்னர் கேட்கவா வேண்டும்?!
தயாநிதி மாறன் 'டாட்டா குழுமத்தை' DTH விசயத்தில் மிரட்டினார் என்று 'சும்மா' கொளுத்திப் போட்டு - அதற்குத் தங்கள் ஆஸ்தான குரு சோ -வின் ஆதிசேட நாக்கை வேறு பயன்படுத்திப் பார்த்தார்கள்!
'குரு கோல்வால்கருக்கு' அஞ்சலி செலுத்தும் தமிழகத்தின் 'ஒரே நடுநிலைப் பத்திரிக்கை'யான தினமணியில் கம்பு சுத்திப் பாத்தாச்சு! அவங்கப்பன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் அலம்பல்கள்! போதாததற்கு 40 கோடி (150 கோடி??!) புகழ் கோமாளியும் ஊளைக்கு ஒத்து வேறு!
என்னடா விசயமென்றால் - 'அதாவதுங்கய்யா சம்பவம் நடந்த எடத்துல இருந்து நான் திரும்பி வர்றப்ப ஒரு பத்துமைல் தூரத்தில தயாநிதி மாறன் வீடு இருந்துச்சுங்கய்யா' ரேச்ஞ்சில முழநீள பதிவுகள்!!! ;) (எல்லாம் இடஒதுக்கீடு அறிவிப்புப் படுத்தும் பாடு!! - என்னப்பா தமிழ்நாட்டில ஒரு டாக்டரும் தெருவில போராடக்காணமே! ;) )
தயாநிதி மாறன் - தன்னைப் பற்றிய பற்றிய செய்தி அவதூறு என்றும் - அதை வெளியிட்டதற்காக - 'தினமணி' ஆசிரியரும், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' நிர்வாக இயக்குநரும் - தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் - தவறினால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தினகரனில் இன்று(27/04/06) வெளிவந்திருக்கும் அந்தச் செய்தி இங்கே :
"டாடாவை மிரட்டினார் தயாநிதி மாறன்" என்ற பெயரில் தினமணியிலும், எக்ஸ்பிரஸ் இன்வெஸ்டிகேஷன் என்ற பாணியில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் 26.4.2006 அன்று வெளியான கட்டுரை விஷமத்தனமாக உள்ளது. இந்தக் கட்டுரையில் வெளியான தகவல்கள் கற்பனையானவை, பொய்யானவை, அற்பத்தனமானவை.
உங்கள் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் எழுப்பிவிட்டு அவற்றுக்கு பாதிக்கப்பட்டோரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
தயாநிதி மாறனைப் பிடிக்காத சிலரின் கட்டளைப்படி நேர்மையற்ற முறையில் புரளிகளைப் பரப்பி ஆதாயம் அடைவதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள். அவர் பதில் அளிக்க மறுக்கும் விஷயங்களை தயாநிதி மாறன் மறுக்க வேண்டும் என்கிறீர்கள்.
இதுகுறித்து பிரஸ் கவுன்சிலிடம் தயாநிதி மாறன் புகார் செய்வார். தேர்தல் சமயத்தில் இது போன்ற அவதூறான கட்டுரையால் அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
உங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தயாநிதி மாறன் மறுக்கிறார்.
மேலும் சன் டி.வி சம்பத்தப்பட்ட எந்த விஷயத்திலும் தனக்கு ஆர்வமில்லை. தனது பெயரை இந்த விஷயத்தில் தேவையின்றி இழுத்து சேற்றை வாரி இறைப்பதாகக் கூறுகிறார்.
எனவே எனது கட்சிக்காரரிடம் (தயாநிதி மாறன்) நீங்கள்: நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அத உங்கள் பத்திரிக்கையில் பிரதான இடத்தில் வெளியிட்டுக் களங்கம் கற்பித்ததற்கு நஷ்ட ஏடாக ரூ. 1 கோடி தரவேண்டும்.
இதைச் செய்யத் தவறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியது இருக்கும்."
கார்த்திக்கும் அவரது பார்வர்டு பிளாக் கட்சிக்காரர்களும் தொடர்ந்து மிரட்டப்படுவது - ஒரு வேட்பாளர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, எம்ஜியாரின் அண்ணன் மகள் லீலாவதி மிரட்டி துன்புறுத்தி ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது, தேமுதிக வேட்பாளர்கள் விலைபேசப்படுவது - என தொடரும் 'அவாள்' திமுக-வின் லீலைகளில் இந்த அவதூறு செய்தியும் ஒன்றாகிறது போலும்!
வழக்கம்போல - 'இவாள்' இதையும் இருட்டடிப்புச் செய்வாள் பாருங்கோ! ;)
13 comments:
//கார்த்திக்கும் அவரது பார்வர்டு பிளாக் கட்சிக்காரர்களும் தொடர்ந்து மிரட்டப்படுவது - ஒரு வேட்பாளர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, எம்ஜியாரின் அண்ணன் மகள் லீலாவதி மிரட்டி துன்புறுத்தி ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது, தேமுதிக வேட்பாளர்கள் விலைபேசப்படுவது - என தொடரும் 'அவாள்' திமுக-வின் லீலைகளில் இந்த அவதூறு செய்தியும் ஒன்றாகிறது போலும்!
வழக்கம்போல - 'இவாள்' இதையும் இருட்டடிப்புச் செய்வாள் பாருங்கோ! ;)//
என்ன நியோ,
கலைஞரின் ஆஸ்தான இயக்குனர், ஆடிவெள்ளி மற்றும் பாளையத்துஅம்மன் பக்திபடப்புகழ் இயக்குனர் ராமநாராயணன் படம் எதுவும் பார்த்தீர்களா?! பார்க்கும் போதே சாமி ஆடுனீங்களா இல்ல தமிழ் மணத்துக்கு வந்து ஆடுனீங்களா?
காகிதப்பூக்களுக்கு மகரந்த சேர்க்கை உண்டா என்று கேட்டால் yes sir! அப்படின்னு சொல்லுவீங்க போலிருக்கு.
எதெற்கெடுத்தாளும் 'அவாள்'-யும் 'இவாள்'-யும் இழுக்குறீங்களா? பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, கீழ்வென்மனி சமப்வம் போன்றவற்றிற்கு காரணமான மற்ற சாதிக்காரர்கள பத்தியும் கொஞசம் எழுதுங்களே!
நோண்டி நொங்கெடுத்திருவாங்கனனு பயமா?!
>> பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, கீழ்வென்மனி சமப்வம் போன்றவற்றிற்கு காரணமான மற்ற சாதிக்காரர்கள பத்தியும் கொஞசம் எழுதுங்களே!
நோண்டி நொங்கெடுத்திருவாங்கனனு பயமா?! >>
உமக்கு நான் எங்கெங்கே என்ன பின்னூட்டம் விட்டேன் என்பது பூராவும் தெரியாது என்பதால் உமது கூமுட்டை கமெண்ட்டைப் பார்த்துச் சிரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்! ;)
'நோண்டுவது' 'நொங்கெடுப்பது' ,'திருப்பாச்சேத்தி' 'அருவா' 'மதுரை மேலமாசி வீதியில் கற்ற கெட்ட வார்த்தைகள்' 'சிவகங்கைச் சீமை' - இதுபோல சீன் போடறத விட்ருங்கப்பு!
ஏற்கெனவே ஊத்தப்போகுது! இதில இம்புட்டு நொர் நாட்டியம் பண்ணிக்கிட்ருந்தா 'உண்டனா'வாத்தேன் வெளக்கமாத்துப் பூச கெடைக்கும்!
>> >> பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, கீழ்வென்மனி >>
இதில கண்டமாதேவி-ய விட்டுப்புட்டீய்ங்கப்பே!
//ஏற்கெனவே ஊத்தப்போகுது! இதில இம்புட்டு நொர் நாட்டியம் பண்ணிக்கிட்ருந்தா 'உண்டனா'வாத்தேன் வெளக்கமாத்துப் பூச கெடைக்கும்!//
இந்த பிண்ணூட்டத்தைப்பார்த்தா, எதோ ஒரு பொம்பளை, ஆம்பளை பேருல எழுதுறது மாதிரில்ல இருக்கு!
அதென்ன "நோர் நாட்டியம்". ஓ ஊத்திகிட்டதுக்கு அப்புறம் ஆடுற ஆட்டமா!?
//உமது கூமுட்டை கமெண்ட்டைப் பார்த்துச் சிரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்! ;)
//
இது என்ன உமது ஆஸ்தான இயக்குநர் ராமநாராயணன் படத்தில வருகிற க்ராபிக்ஸ் முட்டையா?
அய்யா செயகுமாரு......
ஆயிர கணக்காண அர்சு அலுவலரை ஒரே நாளில் டிஸ்மிஸ் பண்ணக்கூடிய அதிகாரம் ( சர்வதிகாரம் இல்லங் கண்ணா ) உள்ள முதலமைசருக்கு
பாபாபட்டி, கீரிபட்டி தேர்தல நடத்த முடியலனா; என்ன அர்த்தம்?
அவங்க்ளுக்கும் அதான் வேணும்னு அர்த்தம்.....
இச்செய்தியில் எமக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நான் அறிந்த வரையில் தொழிலதிபர்கள் தான் "அரசாங்கத்தை" மிரட்ட முடியுமேயொழிய அரசுப் பதவியிலிருப்பவர் "டாடா" போன்ற நிறுவனத்தை மிரட்ட முடியுமா என்பது கேள்விக்குறியே!உதாரணத்திற்கு காலஞ்சென்ற அம்பானி அவர்கள் இந்திராகாந்தியை மிரட்டி எரிவாயுவைத் தனியார்மயமாக்கியது.,தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அனிள் அம்பானி சோனியாவை சந்தித்தது..,
***
டாடா நிறுவனம் ஒரு "பழம்பெரும் நிறுவனம்". அதனோடு சன் தொகா வினால் போட்டி போடவே முடியாது. அப்படியே அதிகாரத்தைப் பயன்படுத்தி டாடாவை வளைக்க முயன்றால் அதைத் தேர்தல் நேரத்தில் செய்யுமளவிற்கு முட்டாளல்லவே, தயா மாறன்.மேலும் தயாவிற்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
ஆக இது நடந்து குறைந்தது ஒரு 6 மாத காலம் ஆகியிருந்ததாக ஊகித்துக் கொண்டாலும் அதைத் தேர்தல் நேரத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் தினமணி போன்ற நடுநிலையான?!, சனநாயகத்தின் நாண்காவது தூணுக்கு வரவேண்டிய நிலை ஏன்?
//எதெற்கெடுத்தாளும் \'அவாள்\'-யும் \'இவாள்\'-யும் இழுக்குறீங்களா? பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, கீழ்வென்மனி சமப்வம் போன்றவற்றிற்கு காரணமான மற்ற சாதிக்காரர்கள பத்தியும் கொஞசம் எழுதுங்களே!//
\'அவாள்கள்\' என்று குறிப்பிடப்படுபவர்கள் அளவுக்குத் தங்களையும் சகல விதங்களிலும் மேலேற்றிக்கொள்ளும் வேட்கையுள்ள இந்த நவீனயுக \"ஞானோதயம்பெற்ற BC/MBC அய்யனாருகள்\" தொல்லை தாங்கமுடியவில்லையடா சுடலைக்கருப்பா! இதில் தேவனாயிருந்தாலென்ன, கவுண்டன், நாயக்கன் நாடாராயிருந்தாலென்ன... அப்படிப் பார்த்தால் \"அவாள்கள்\" என்று திட்டுவது இந்த \"ஞானோதய வேட்கையுள்ள\" wannabe அவாள்களையும் சேர்த்துத்தான் என்றுவேறு தனியாக நியோ சொல்லவேண்டுமா என்ன?
அவாள், இவாள், அவிய்ங்க, இவிய்ங்க, அந்த ஜனம், இந்த ஜனம் - இப்படி ஒட்டு மொத்தமா டாட்டா காட்டாம இருந்தா சரி.
ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு போட்டு விட்டால் மாறன் உத்தமர் என்றாகி விடுமா?
ஆகா என்னே தமிழ் வார்த்தைகள், என்னெ தமிழ் பற்று, அரசியல் எங்கு வந்தாலும் (அது தமிழ் மணமாக இருந்தாலும்) நாறுவது தமிழ் தானோ. அரசியல் விட்டு நல்ல தமிழ் அறிய பாடுபடுவோமே. கண்டிப்பாக தமிழில் நாம்(ன்) கற்க நிறைய உள்ளது. இந்த சண்டைகள் பொது இடத்தில் வேண்டாமே. அதுவும் தமிழ் மணம் போல் இடத்தில். தமிழை வளர்பதற்கும், பறப்புவதற்கும், அறிய வகை விவாதங்களுக்கும் இதை பயன் படுத்தலாமே.
இன்னாபா இது...சொம்மா கொழாயடி சண்ட மாதிரி ரப்சரா கீது...உட்டா கைலிய மட்ச்சி கட்டிகினு டாய், ஒண்டிகி ஒண்டி வரியாடா ( தயாநிதி மாறன் வை.கோ வ பாத்து டீசன்டா கேட்டமாதிரி) அப்பிடின்னு பூடுவீங்க போல கீதே...!!!!!
யோவ் நியோ இந்த ஜெயகுமார் ஒயுங்கான நாளிலேயே கூமுட்டை. இதுலே நீ வேறே அதுகூட ஆப்பாயில் காமெண்டுக்கல்லாமே ரெச்பான்சு பண்ணிக்கீறே. விட்டுத்தள்ளு பிரதர். ஆமா லண்டன்ல டிபோட்டு பண்றதுக்கா அடைச்சு வெச்சிருந்த 916 கூமுட்டைங்களை மிஸ்டேக்கா தொறந்து வுட்டுடானுங்களாமே. மெய்யாலுமா?
அண்ணே இன்னிக்கு காலையில பேப்பர் பாத்திங்களா?டாடா நம்ம சிங்குக்கு ஏதோ கடுதாசி போட்டு இருக்காராம்.(நான் நம்ம முரசொலியில் தாத்தா போட்ட கடுதாசியை சொல்லவில்லை சாமி)
பொட்டீக்கடை, நன்மனம், மாயவரத்தான், சந்தோஷ், ரவி, ஊசி ஆகியோருக்கும், மேலும் 2 அனானிகளுக்கும் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)
எனது கூடுதல் கருத்துக்கள் விரைவில்!
அப்புறம் - இன்னொரு நண்பர் மிகக் 'கடினமான' சொற்களுடன் ஒரு பின்னூட்டம் விட்டுள்ளார்; அதை வெளியிட விரும்பவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கோபத்தைப் பதிவு செய்ய அத்தனை கடும் சொற்கள் வேண்டாம் என அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment