21 April 2006

கலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ

வில்லிவாக்கத்தின் திமுக வேட்பாளரை ஆதரித்து அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்ட்டத்தில் பேராசிரியர் 'அடலேறு' சுபவீ அவர்கள் பேசியிருக்கிறார் :

* கலைஞரின் முயற்சியால்தான் - நானும், வைகோவும் மற்ற பொடாவில் கைது செய்யப்பட்டவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தோம்

* வைகோ சிறையிலிருந்த போது எழுதிய நூல்கள் சிறப்பானவை;ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது. எனவே வைகோவின் நூல்களைக் கொளுத்தவேண்டும்.

* ஜெ. தமிழின அடையாளங்களுக்கு எதிரானவர்; அவரை விமர்சிப்பவர்களைக் கொலை கூடச் செய்து விடுவார்.

* தமிழகத்தில் சனநாயகம், தமிழின உணர்வு ஆகியவை தழைத்தோங்க திமுக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான் - ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2 comments:

Anonymous said...

சுபவீ அவர்களின் பேட்டியை தினகரன் வெளியிடுவதும், தினகரன் பேட்டியை நீங்கள் வெளியிடுவதும், தனக்கு ஆதரவளிக்கிறார் என்பதற்காக அவரை திமுக உபயோகப்படுத்திகொள்வதும் இன்னமும் திமுக ஒரு தீவிரவாதக்கட்சி என்ற எண்ணத்தைத்தான் மக்கள் மனதில் உறுதிப்படுத்தும். இன்னமும் திமுக திருந்தவில்லை என்பதாலேயே அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. இதுபோன்ற ஆதரவுகள் திமுகவுக்கு பலவீனமே தவிர பலம் அல்ல. இந்த பேட்டியை அதிமுக தகுந்த முறையில் உபயோகப்படுத்தினால், திமுகவுக்கு டெப்பாஸிட் காலி. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக டெப்பாஸிட் காலியானதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கூட்டணிக்குப் பிறகு வைகோவும் திருமாவும் அடக்கி வாசிக்கிறார்கள். காரணம், அதிமுகவின் ஓட்டு வங்கி வைகோ- திருமாவின் அரசியலுக்கு எதிரானது. அதே காரணத்தால், திமுகவிற்கு ஆதரவு தரக்கூடிய மக்கள் கூட இப்படிப்பட்ட பேட்டிகளை கண்டு, அதிமுகவுக்கே வாக்களிக்க கூடும். தேர்தல் நேரத்தில் சுபவீயின் பேட்டியை தினகரன் வெளியிட்டது மடத்தனம்

நியோ / neo said...

தினகரனில் சுபவீ செவ்வி பற்றிய என் பதிவை பிளாக்கர் தின்று விட்டதா என்று தெரியவில்லை! - அதன் சுட்டி இதோ :

http://neo-lemurian.blogspot.com/2006/04/blog-post_22.html

இந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில். செவ்வியின் சுட்டி:

http://www.dinakaran.com/epaper/2006/Apr/23/8_2.jpg

அப்புறம் நீங்கள் சொல்வது போலெல்லாம் மக்கள் மடையர்கள் அல்லர்! போன நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ இங்கே இருந்தபோதும், நெடுமாறன், சுபவீ ஆகியோர் திமுக அணியை ஆதரித்தபோதும் - நீங்கள் இப்போது சொல்லும் இதே காரணங்கள் அப்போது இன்னும் வலுவாக ஜெ. அணியால் வைக்கப்பட்டனவே!

என்ன ஆயிற்று அப்போது?!!

உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி :

சுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும் :

http://www.dinakaran.com/epaper/2006/Apr/23/7_1.jpg

:)