கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருந்த, தொடர்ந்து கலைஞர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த 'ஒரு கிலோ இரண்டு ரூபாய்' பொது விநியோக அரிசித் திட்டத்துக்கு ஜெ.வும், 'வையகத்தின் கோமாளியும்' கடும் எதிர்ப்பும், கிண்டலும் செய்தபடி இருந்தனர்.
இப்போது தமிழக முதல்வர் திடீரென ஒரு 'சந்துமுனையில்' நின்றபடி 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்கிறார், ஒரு முதலமைச்சர் 'கொள்கை முடிவுகளை' இப்படி அறிவிக்கக் கூடாது என்கிற வரம்பையும் மீறி!
அதற்கும் சில அறுந்த வால் வானரங்கள் தாண்டிக் குதித்து குட்டிக்கரணம் இட்டு மகிழ்ச்சி ஊளையில் திளைக்கின்றன! இத்தனை சனநாயக விரோதப் போக்கும் தமிழின விரோதக் கும்பலால் நடத்தப் படுகின்றன.
இதிலே முழு உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கு :
1. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான விளக்கம்
2. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான கூடுதல் விளக்கம்(தினமணி)
3. கலைஞரின் கருத்து
4. கலைஞரின் கவிதை
5. அரசியல் தலைவர்கள் கருத்து
14 comments:
"அரிசியல்"
அனா ஆவன்னா படித்தாலும் சரி
படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
வாரிசு முறையில் பிணக்குண்டா?
"பெரிசின்" பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
"அரிசியல்" தெரியுமா உனக்கு?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?
உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!
'அரிசியல்' பேசி அவமானப் படுத்துகிறார்.
'அரிசியல்' மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
'அரிசியல்'ஆல் ஆட்சிக்கு வந்தவர்
'அரிசியல்'ஆல் அழிவதுதானே முறை!
அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
"அரிசி" இன்று கொல்லும்!
இது புது மொழி!!
ரசிகர் கூட்டங்கள் உடனே வருமென்று
சரியாகத் தெரியும்எனக்கு!
'என்னெஸ்'சும் மற்றோரும்
கவிதயெல்லாம் நல்லாருக்குங்க! ஆனா இந்த விசயகாந்தும் 15 கிலோ அரிசி இலவசமாத் தருவேன், வீட்டுக்கு வந்து குடுப்பேன், மாச மளிகைச் செலவுக்கு 500 ரூவா குடுப்பேங்குறாரே!
அதப் பத்தி ஒன்னுஞ் சொல்லக் காங்கலியே நானு!
போற போக்குல வீட்டுப் பிள்ளைக வெளிக்கிருந்தா கால் கழுவி விடுவேனு சொல்லுவாரு போல!
அட! இவர்கள் 30 வருடமாய் ஏமாத்திக் கொண்டு இருக்காங்க!
இதுவரைக்கும் செய்யவில்லை!
இனிமேலும் இவர்களை நம்பிப் பயனில்லை!
விசயகாந்தை நம்ப நான் தயார்!
ஏன்னா, இவுகளை நம்ப நா இனிமேலும் தயாரா இல்லை!
நான் ரெடி!
நீங்க ரெடியா!?
வாங்க! கெடைச்ச இந்த வாய்ப்பை தவற விட வேணாம்!
அவுரு மொத விருத்தாசலத்துல செயிப்பாரான்னு பாப்பம்! பொறவுதான் மத்த சங்கதி!
கல்யாண மண்டபத்து பிரச்சனைக்கெல்லாம் கட்சி ஆரம்பிக்கிற பயல்களுக்கு பேச்சு ஒரு கேடா?! ;)
நேர்மையாகப் பேசுகிறவரோ என எண்ணி
வாதம் செய்து விட்டேன்!
நீங்கள் நடுனிலைமைவாதி அல்லர் எனத்
தெரிந்து விட்டது!
நன்றி! வணக்கம்!
ஒரு முதல்வர் தேர்தல் கமிஷன் உத்தரவையும் மீறி அரிசி கொடுப்பேன், மிளகாய் கொடுப்பேன் என்று பேசுவது கண்டனத்துக்குரியது. புடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி உள்ளார போடவேண்டும்.
மாற்று வேட்பாளரா கூட, தன் கட்சி ஆள போடாம, தன் மனைவிய போடற ஆளயும், இப்பவே மச்சானுக்கு சீட்டு கொடுத்த ஆளயும், கட்சி பேர தன் தொண்டர்களையும், இரண்டாம் மட்ட தலைவர்களையும் கலந்தாலோசிச்சி வைக்காம, தன் மனைவியையும், மச்சானயும், ஆஸ்தான ஜோஷ்யரையும் கேட்டு வைத்தவரையும், கல்யாண மண்டபத்தை காப்பாத்த கால்ல விழுந்துட்டு, ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஆன பின்னாடி மக்களுக்கே கொடுத்திடறேன்னு சொன்னவரையும் நம்ப நீங்க ரெடியா இருக்கலாம் எஸ்கெ, நாங்க ரெடியா இல்ல.
நியோ, அரிசி விவகாரத்தில ஆப்பசச்ச குரங்கா மாட்டிக்கிட்டவங்கள சப்பகட்டற, படிச்ச அறிவாளிகள சரியா மென்னிய புடிக்கிறது நல்லாயிருக்கு.
அம்மா கொடுக்கிற இடத்துல இருந்தும் இதுவரை கொடுக்காம, இப்ப கொடுப்பேன்னு சொல்றதும் அய்யா கொடுப்பேன்னு, அதுவும் எப்படி கொடுக்கமுடியும்னு விலாவரியா சொன்னப்பறம்தான்னு படிக்காத பாமர மனிதனும் புரிஞ்சிப்பானே.
டிவி விஷயத்தில அய்யா சொன்னது சரியில்லன்னு நினைக்கிறத பதிவு பண்ண விரும்புகிறேன்.
>> நேர்மையாகப் பேசுகிறவரோ என எண்ணி வாதம் செய்து விட்டேன்! >>
நான் என்ன பொய் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டேன் என்று என் மீது இப்படி ஒரு புகார் சொல்கிறீர்கள்?
உங்கள் ஒரு சார்புத் தன்மையை நான் குற்றம் ஒன்றும் சொல்லவில்லையே?
எல்லோருக்கும் ஒரு 'சார்பு' இருக்கத்தான் செய்கிறது. சிலர் அதை வெளிப்படையாகச் சொல்கிறோம். சிலருக்கு 'பூடக நாடகங்கள்' தேவையாயிரூக்கிறது! ;)
ஆனால், மிகக் குறைந்தபட்ச வாதப்-பிரதிவாதத் தையாவது அனுமதிப்பதே சனநாயகம். நான் 'விஜி' மீது வைத்த குற்றச்சாட்டுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்; அதன் மீது விவாதம் செய்யலாம்! :)
எஸ்.கே, நெருப்பு சிவா, திருப்பாச்சி, கிருஷ்ணா அனைவர் வருகைக்கும் நன்றிகள் :)
கிருஷ்ணா,
>> டிவி விஷயத்தில அய்யா சொன்னது சரியில்லன்னு நினைக்கிறத பதிவு பண்ண விரும்புகிறேன். >>
கலைஞர் 5 ஆம் தேதி புரசைப் பொதுக்கூட்டத்தில - இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான மானிய நிதி எப்படித் திரட்டுவது என்பது பற்றியும் ஒரு கோடிட்டு காட்டினார்!
"மிடாஸ் டிஸ்டிலரிஸ் வைத்திருக்கும் சசி மற்றும் அவரது பினாமி கும்பல் - டாஸ்மாக் மூலம் கோடி கோடியாக கமிஷன் வாங்கிக் குவித்துள்ளனர்; அதையெல்லாம் தடுத்து நிறுத்தினாலே - இந்த கலர் டிவிக்கு வேண்டிய 1060 கோடி ரூபாய் மானியத்தையும் ஒதுக்கி விட முடியும்.
அதுவும் முதல் மற்றும் இரண்டாவது வருடங்களாகப் பிரித்து அந்தச் செலவினத்தை 530 கோடி ரூபாய் ( முதல் & இரண்டாவது வருடங்களுக்கு என்று ) பிரித்து செலவினத்தைச் செய்ய முடியும் என்றார்!
It's a Political Brownie point! And he's the expert in impressing the people!
மேலும் 2000/- ரூபாய்க்கு கலர் டி.வி என்கிற விஷ்யம் மேலும் சில அது தொடர்பான தொழிற்சாலைகளை Spin-off -ஆகச் செய்யும் என்று சொல்லுகிறார்கள்.
அப்பாவித்தமிழன்!
கனிமொழி பொதுவாகச் சொன்னதை - இப்போது இந்த விஷயத்திற்குச் சொன்னதாகத் திரிக்க வேண்டாம்!
அப்படிப் பார்த்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து - என்பதையெலாம் கூட கனிமொழி எதிர்க்கிறார் என்பீர்கள் போல!
கனிமொழிக்கான கருத்துரிமை போல - Welfare State-க்கு ஆதரவான கருத்துகளும் புனிதமானவையே!
சிதம்பரம் சொன்னது போல 'சாத்தியமானவற்றை' புதிய உலகத்தின் தேவைகளுக்கு ஏற்ப செய்கிறார்கள் (டிவி).
இதிலே மாற்றுக்கருத்து இருக்கத்தான் செய்யும்.
ஆனால் - எது மோசமானது? சாராய வியாபாரத்திலே 500-1000 கோடி இலாபம் பெற்றது அரசு என்று 'பெருமித்மாக' சட்டசபையிலே அறிவித்து மகிழ்வதா? - அல்லது அந்த மோசமான மக்கள் விரோத சாராய ஆலையின் கமிஷன் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்கி - அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் டி.வி. அளிப்பதா - என்பத மக்கள் முடிவு செய்யட்டும்! :)
Television Should ALSO be seen as a Social necessity and information penetrative/distributive tool - என்கிற சமூகவியல் வாதத்தில் ஒரே ஒரு சதம் உண்மை கூட இல்லையா என்ன? :)
'எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர் கும்பல் ரோட்டிலே1
இனச்சண்டை, பணச்சண்டை
மதச்சண்டை, மொழிச்சண்டை
எத்தனையோ உண்டு நாட்டிலே !
இத்தனையையும் தீர்த்திட
வழி ஒன்றும் செய்யாமல்
கலர் டிவி கொடுக்கிறார் ஓட்டிலே!
தமிழர் சாதி நீங்க
இந்தப் பகுத்தறிவாளரைப்
பாக்காதீங்க!
கொடுப்பதை வாங்குங்க!
நாமத்தை போடுங்க![கழகங்களை]
வீட்டிற்கு அனுப்பிட
மறக்காதீங்க!
வா! வா! வா!
வாக்கினைப் போட
எல்லாரும் ஒண்ணாக
அன்போடு ஓடி வாங்க!
இந்த அனுபவப் பொருள் விளங்க
வாக்காளர் அண்ணாவே நீங்க
எல்லோரும் சேர்ந்து
நன்றாக முடிவெடுங்க!
வாக்கையெல்லாம்
உபயோகமாப் போடுங்க!
வா! வா! வா!
[நன்றி: கலைஞரின் பராசக்தி]
>> ஆனால், இதைவிட அத்தியாவசியமான அனைத்தயும் தமிழகம் எட்டிவிட்டது, இதுதான் அடுத்த தேவை என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒவ்வொரு தேவையாக கண்டுபிடித்து இலவசமாக வழங்குவதுதான் தீர்வாக நினைக்கிறீர்களா? >>
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அப்பாவித்தமிழன். ஆனால் 'தேர்தன் சனநாயகம்' என்கிற முறையிலே - 1000, 2000 ரூபாய் என்று பணத்தை அள்ளி வீசி மக்களின் ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமிரோடு அலையும் 'சதுக்கப் பூதமாக' திகழும் செயலலிதாவின் - சனநாயக் விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக் நடத்தப்படுகிற Strategic அரசியல் காய் நகர்த்தலில் இந்த இலவச டி.வி.யும் வருகிறது - என்கிற 'சிக்கலான தேர்தல் அரசியல் நடைமுறையை' புரிந்து கொண்டு, அதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது - இது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக எனக்குத் தோன்றூகிறது.
ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞர் - இதைவிடவும் இன்றியமையாத் திட்டங்களை நிறவேற்றுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நான் எதிர்பார்க்கும்/ ஆசைப்படும் ஒரு திட்டம் :
தமிழகத்தின் நீர் நிலை ஆதாரங்களையெல்லாம் 'அரசு பொக்கிஷங்கள்' போல பாவித்து - அவற்றை பாதுகாத்து, சீர்செய்து, செம்மைப்படுத்தி - விவசாய, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிற திட்டம்.
மற்றொன்று (இது போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்) :
சென்னையில் மட்டுமாவது - கடல் நீரைக் குடி நீராக மாற்றும் திட்டத்தின் முழு வடிவமும் நிறைவேறி - அப்படி நீர் மக்களுக்கு 1 அல்லது 2 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும்.
எஸ்கே!
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனா கொஞ்சம் 'பொருட்குற்றம்' இருக்கு!
பி.கு :
டிவி. Social Tension-ஐக் குறைக்க பயன்படும் - சமூகவியல்! ;)
Post a Comment