Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

13 January 2007

'முனைவர் வைரமுத்து'வுக்கு வாழ்த்துக்கள்!



நேற்று முன்தினம் (11/01/2007) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு முனைவர்' (Doctor of Literature honoris causa ) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள்! :)

தகுதிவாய்ந்த பெருமகனாருக்கு சீரிய சிறப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பாராட்டுகிறோம். :)

இத்தருணத்தில் கவிப்ப்பேரரசரின் 'இனம்' என்ற கவிதையை இங்கே தருகிறேன்.


இனம்
-----------------------------

தமிழா

காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா

கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்

பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்

``````````````````

உன்
ஆட்டு மந்தைகளை
வேட்டையாட விட்டுவிட்டாய்

கூடப் பிறந்தோனின்
கோழிக்குஞ்சு திருடுகிறாய்

பிள்ளைபெற்ற பெண்ணை
அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அடையாளம் சொல்வதுபோல்
நீ
அடிமை புரிந்த
அடையாளம் மாறவில்லை

அன்று-
மதம் வந்தது
நீ
வருணமாகப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாய்ப் பிரிந்தாய்

தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்

````````````````````````

மழைபிலிற்றும் இரவுகளில்
நனையாத திண்ணையை
நாய்க்கு வழங்கிவிட்டு
நனைந்து கிடக்கிறாய்


வெளவால் -
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை

நீ -
அடிமையா? மனிதனா?
ஆதாரம் இல்லை

மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவத்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்

`````````````````````````````````

இந்தியப் பரப்பில்
எந்தமிழ் நாடு
நடந்து பார்த்தால்
நான்கு சதம்

இந்திய மக்களில்
எம்மருந்தமிழர்
ஏழுபுள்ளி ஐந்து சதம்

அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
ஊராட்சி ஒன்றியம்

பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்

அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்

தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்

அன்று தொலைத்த முகம்தான்
இன்றும் காணக் கிடைக்கவில்லை

`````````````````````````


தொலைக்காட்சி விளம்பரங்கள்
துருவிப் பார்க்கிறேன்

ஒரு முகமேனும்
தமிழ் முகம் இல்லை

ஒரு வணிகமேனும்
தமிழ் வணிகம் இல்லை

சுவர்பார்த்துத் தலைவாரும்
அடுக்குமாடி வீடுகளில்
பத்துக்கு ஏழு
தமிழர் இல்லை

விமானம் ஏறினால்
தமிழ்முகம் தேடுவேன்

ஏழைவீட்டுப் பாயாசத்தில்
எங்கோ அகப்படும் முந்திரிமாதிரி
இரண்டோ மூன்றோ
இருப்பினும் இருக்கும்

ஏனிந்தப் பின்னடைவு?

ஆடை ஆயுதம்
சுமையென்றானால்
அழுக்கும் பொதிகளும்
செல்வமென்றானால்
எந்த இனத்தின் யாத்திரை தொடரும்?

புதுமைகொள் தமிழா
புழுதி கழுவு

உலக நீரோட்டத்தில்
கரைந்துவிடாமல்
கலக்கப்பழகு

அடுத்த நூற்றாண்டின் *
அந்தி நேரத்தில்
மூளை தவிர எல்லாம்
செயற்கையாய்க் கிடைக்கும்

ஆண்டுக்கொருமுறை
முகம் மாற்றலாம்

மரத்தின் திசுக்களில்
மனிதன் வாழ்வான்

எண்கள் இட்ட்
இருதயம் கிடைக்கும்

கணவனுக்கு மனைவி
செவ்வாயிலிருந்து
செலவுக்கனுப்புவாள்

உணவு மாறும்
உடைகள் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

இன அடையாளம் மொழியாய் மிஞ்சும்
அடையாளம் இழக்காதே

மேற்கே விஞ்ஞானம்
பொருள் கண்டறிந்தது
போன நூற்றாண்டு

அதற்கு நீ
சொல் கண்டறிந்தது
இந்த நூற்றாண்டு

சொல்?
என்று நீ
சொல்லை விடுத்துப்
பொருள் கண்டறிவாய்?

அறி
அன்றுதான்

நீ
அறியப்படுவாய்.


- "தமிழுக்கு நிறம் உண்டு" தொகுதியிலிருந்து


* => இந்தக் கவிதை 1997 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது

26 May 2006

கலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா?

இன்று(26/5/2006) சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றது.

நண்பர் லக்கிலுக் பதிவான கலைஞரைத் தாக்க முயற்சி! -யில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.

>> ஒரு டஜன் ரவுடிகளுக்கு மேல் சட்டசபைக்கு அனுப்பி இருக்கும் தாதா ஜெயா தன் அடியாட்களுக்கு கொடுத்திருந்த அசைன்மெண்ட் இன்று வெற்றிகரமாக சட்டசபையில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.... >>

இந்த "சொர்ணக்கா" ஜெயா மாமி 1989-90-இலும் இதைத்தான் செய்தார்!

கலைஞர் படிக்கவிருந்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்துவிட்டு - பிறகு "அய்யயோ என்னை மானபங்கப் படுத்த முயற்சி" என்று நாடகம் போட்டார்.

அதைப் பார்ப்பனீயவாதிகள் பயன்படுத்தி எத்தனை கோயபெல்ஸ் பரப்புரை செய்தார்கள்?

இந்துத்துவவாத, பிற்படுத்தப்ப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க பார்ப்பனீயவாதிகள் செய்த சதியே ஜெ.வின் அதிமுக கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும்.

தமிழர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கோபால்சாமியும், திருமாவும் - இன்னமும் அங்கே இருப்ப்து மாபெரும் இனத்துரோகத்தில்தான் போய் முடியும்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றி ஒன்றும் பேசாத ஜெ. கலைஞரைத் தாக்க ஆள் அனுப்புகிறார் என்றால் - இதன் உள்ளர்த்தம் என்ன??


பார்ப்பனீயவாதிகள் - இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவ்ர்களை - கொலை செய்யத் திட்டம் இடுகிறார்களா? என்ற சந்தேகம் மமிக மிக மிக கடுமையாக எழுகிறது.

இதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"


பிற்சேர்க்கை:

அதிமுக அராஜகக் காட்சிகள்

அதிமுக அராஜகம்1

அதிமுக அராஜகம்2

அதிமுக அராஜகம்3

அதிமுக அராஜகம்4


( ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை. )