இத்தனை நாள்வரை மிகக் குறைந்த படசம் 'பரந்த நோக்கும் சமூகப் பார்வையும்' உள்ளவர் ரவி ஸ்ரீநிவாஸ் - என்கிற ('மாயை'யை யாவது ரவியிடம் எதிர்பார்க்கலாம் என்கிற) 'ரோசா வசந்த்'தின் கூற்றைப் போலவே நானும் நம்பியிருந்தேன். இப்போது ரவியே தன்னைக் 'கட்டுடைத்து' கொள்கிறார்.
>> இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். >> என்றெல்லாம் பொச்சரிப்பு பொழிகிறார் ரவி!
இதை விடவும் அயோக்கியத்தனமாக மேல்சாதித்தனத்துடன் - இன்னும் சொல்லப்போனால் "பாப்பாரத்தனமாக" இந்த விஷயத்தைத் திரிக்க முடியாது.
"மெரிட்" என்கிற எச்சித்தனமான மாயையான சங்கதியை - இன்று 'காஞ்சா இலையா' போன்ற சமூக நீதி அறிஞர்கள் 'கட்டுடைத்துக்' கொண்டிருக்கும் வேளையில் - தங்களின் புரட்டுத்தனமான மேல்சாதித்தனமான 'மெரிட் வாதம்' - சமூகத் தளங்களில் அவற்றால் ஏற்பட்ட சமூகப் பங்களிப்பு என்ன என்கிற கறாரான எடைபோடப்பட்டுத் தோலுரிக்கப்படுவதைப் பொறுக்க முடியாத மனுவாதிகள் (இன்றைய சூழலில் பார்ப்பன - பனியா கூட்டணி மயிரான்கள்) - 'இட ஒதுக்கீட்டை' கட்டுடைத்துவிட்டதாக ஊளையிடலாம்.
அந்த கோஷ்டியிலே சேர்ந்து கொள்ளும் "Political Correctness" (அதாவது அவாள்களுக்கு)
இப்பொது ரவியிடம் தொற்றிக் கொண்டு விட்டது. இது குறித்து விசனப்பட வேண்டியதில்லை!
சமூக நீதி என்பது இவர்களின் "இருப்பை" கேள்விக்குள்ளாக்காமல், 'பீடத்தைப்' பெயர்க்காமல் நடக்கும் வரை அதன் நலம்விரும்பிகளாக வேடம் தரிக்க இவர்களால் நன்றாகவே இயல்கிறது.
தங்கள் சமூக அதிகாரத்தின் அடிவேராக இருக்கும் Intellectual Leadership மாயைக்கே வேட்டு வைக்கிற நடவடிக்கை என்றதும் இந்த ஜெண்டில்மேன்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிடும்!
உழைக்கும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய அரசும், தேசமும் - அவர்களின்
பெருவாரியான ரத்தம், வேர்வை, கண்ணீர் - இதன் மீதாகக் கட்டப்பட்ட அரசாங்க நிதியத்தின்
மூலம் நடத்தப்படுகிற மேற்கல்வி நிறுவனங்களின் எஜமானர்களாக மட்டும் இவாள்களே
இருப்பார்களாம்! உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஒருபயனும் இருக்காதென்கிற 'வேத விதியை' கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!
சென்னை ஐஐடி-யில் எப்படி மேல்வகுப்பார் - "சூத்திரர்" களை நடத்துகிறார்கள், மற்ற
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி பேராசிரியர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக பேராசிரியை வசந்தா கந்தசாமியின் உதாரணத்தை ரவியின் முந்தைய இட ஒதுக்கீட்டுப் பதிவில்
சொல்லியிருந்தேன். அதற்கு - ஒரே ஒரு உதாரணம் போதாது என்று புறந்தள்ளிப் பேசிவிட்டார். உண்மையில் வசந்தாவின் இ-மெயிலுக்கு ஒரு மடல் அனுப்பி முயற்சி செய்துவிட்டுப் பிறகு ஐஐடி-யின் மேல்சாதித் திமிர்த்தனம் பற்றி இவர் புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்திருக்கலாம்!
உயர்கல்வி நிறுவனங்கள் 'பெரியார் பூமி'யிலேயே இப்படி நடக்கும் என்றால் வட இந்தியாவில்?!!!
இவர்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை நாய்களாகவும், புழுக்களாகவும் நடத்துவார்களாம்; ஆனால், இந்தியாவில் இவர்களின் மேலாதிக்கத்தை மட்டும் சாமரம் வீசி பாதுகாக்க வேண்டுமாம்!
அடச்சீ! இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம் வெட்கமாய் இல்லை?
சிங்கப்பூரிலும் - கொரியாவிலும் ஐஐஎம் கிளைகளை அமைத்தே தீரவேண்டும் - அங்கெல்லாம் நம்முடைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி பன்னாட்டு வணிக அறிவுசால் வல்லமை பெறவேன்ண்டும் என்றெல்லாம் - இந்த மேலாதிக்க எஜமானர்கள் கொஞ்சம் நாள் முன்பு கூட பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஐஐஎம் என்பது ஒரு சிறப்பான Brand-ஆம்; அதை உலகம் முழுக்கப் பரப்புவார்களாம்!
அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியதே - குப்பனும், சுப்பனும் வரி கட்டி - வாக்களித்து உருவாக்கிய அரசாங்கமும், அரசும் தானே - அவர்களுக்கு இந்த 'மேட்டுக் குடி' நிறுவனங்கள் என்ன செய்து கிழித்து விட்டன?
>> இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து
கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட
ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். >> - என்கிறார் ரவி..
கொஞ்சம் நாள் முன்பு பார்ப்பனர்களும், தலித்துகளும் சேர்ந்து சமூக தளத்தில் செயல்பட
வேண்டும் - பிற்பட்ட வகுப்பாரை எதிர்த்து; ஏனெனில் அதுவே இப்போதைய இயற்கையான
சூழ்நிலை - என்றெல்லாம் நயவஞ்சகப் பரப்புரை செய்து கொண்டிருந்தார் ரவி. அதைக் கூட ஒரு அரசியல் கருத்து என்று அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்; ஆனால், இப்போது இவர் பேசுவது முழுக்க முழுக்க பார்ப்பனிய, உயர்சாதிய சிந்தனையின் பாற் பட்ட அரசியலே.
அதனால்தான், சமூக நீதி என்கிற உயரிய கருத்தாக்கத்தையும் 'கட்டுடைக்க' துணிச்சலோடு
வந்திருக்கிறார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியலே மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி - வேலை வாய்ப்புக்கான சமூக நீதி இட ஒதுக்கீடு குறித்துத்தான் எழுந்தது. அதத்தான் அவர் இப்போதும் பேசுகிறார்; செயல்படுகிறார் - அதை ரவி 'பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக
காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சி' என்று சேறு வாரி இறைப்பது - அயோக்கியத்தனமான பேச்சாகவே தோன்றுகிறது.
கலைஞரும் இதைப்போல கருத்தைத்தான் நேற்று - திருவாரூரில் பேசியுள்ளார்; கலைஞருக்கும் 'ரேசிஸ்ட்' முத்திரையை (இரண்டாம் முறையாக) குத்துவதற்கு ரவிக்கு ஒரு வாய்ப்பு எனக் கருதிக் கொள்ளலாம் போல!
'தி ஹிந்துவிலே' வியாழன் அன்று (18/5/06) வெளிவந்திருக்கும் "OBC Quota: stirring wider issues" என்கிற கட்டுரையைப் பற்றி "இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது" என்கிறார் ரவி.
OBC மக்கள் தங்களுக்கு 27% தரப்படும் வரை - எந்த மேல்சாதிக்காரனும் படிக்கவோ, வேலை செய்யவோ கூடாது என்றொரு கடும் போராட்டத்தை முன்னெடுக்கத்தான் ரவி போன்றவர்களின் எதேச்சதிகாரக் கருத்துக்கள் தூண்டும்.
>> எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். >> - என்று மேலும் மேலும் தன்னையே முரண்படுத்திக் கொள்கிறார்.
நாடு தழுவிய விவாதம் செய்ய எங்கே விட்டர்கள் மேல்சாதி ஜெண்டில்மேன்கள்?
"தேர்தல் முடிவு வரட்டும்; பிறகு பேசுவோம் - ஏனெனில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது" என்று அர்ஜுன் சிங் சொன்னபிறகும் - இஷ்டத்துக்கு நினைத்த போது போராட்டம், வேலை நிறுத்தம், பிரதமர் வீடு நோக்கிப் படையெடுப்பு - என்கிற காட்டுமிராண்டித்தனமான அராஜகத்தைச் செய்தது யார்? ரவி பாதுக்காக்கும் அதே மேல்சாதி மாணவர்கள்... டாக்டர்கள்தாம்!
தமிழக அரசு ஊழியர் போராட்டம் அவர்களுடைய வாழ்வுரிமை பற்றியது; அதுவும் அரசு ஊழியர் தெளிவாக கோரிக்கைகள், அறிக்கைகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்ட்ங்கள், பேச்சுவார்த்தைக்கான முறையீடுகள் - என எல்லா சனநாயக் முறைகளையும் செய்து பிறகு ஸ்டிரைக் பற்றிய முன்னறிவிப்பு கொடுத்து - பிறகுதான் வேலை நிறுத்தம் செய்தார்கள். (அப்போதும் கூட டாக்டர்கள், நர்சுகள் அந்த அரசு ஊழியர் போராட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது).
அந்தப் போராட்டத்துடன் - இப்போதைய மேல்சாதி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் டில்லியில் Unannounced Flash Strike நடத்தும் திமிர்த்தனத்தோடு ஒப்பிடுகிறார் ரவி. இவருடைய நேர்மை இத்தனை கீழ்த்தரமாக எழுதுமளவு இறங்கும் என்று இதுவரை நான் கருதியதில்லை.
ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுடைக்கப்பட்டிருக்கிறார்; அதையும் மற்றவருக்கு விட்டு வைக்காமல் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி.
27 comments:
இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் மேட்டுக்குடியினரின் அலம்பல்கள் இப்போது எல்லை மீறிப் போவதையும் - "ஆங்கில மீடியாக்கள்" இவர்களுக்கு ஆதரவாக 'சாமியாடுவதையும்' பார்க்கையில் - இவர்களின் சமத்துவபுர முகமூடிகள் கழன்று விழுவது நன்றாகவே தெரிகிறது!
'விகரம்' படத்தில் பெண் கணிப்பொறி நிபுணரை கமல் - "ஆம்பளைங்க வேர்த்திச்சின்னா சட்டையக் கழட்டிடுவோம், நின்னுக்கிட்டே சுவத்துல ரோட்டில 'ஒப்' போவோம் - பொண்ணுங்களால அதெல்லாம் முடியுமா" என்பது போல - பெண் முன்னேற்றத்தை 'கலாய்ப்பதாக' ஒரு காட்சி வரும்.
அந்த ரேஞ்சில்தான் இப்போது பார்ப்பனர்களின் லாஜிக்குகள் இட ஒதுக்கீடு விஷயத்தில் பறந்து வருகின்றன!
ஈராயிரமாண்டுகள் 'மேட்டுக்குடியார்' அனுபவித்துப் பெற்ற 'வல்லமையை' - 'சூத்திரர்கள்' ஒரு தலைமுறைக்குள் - பெற்றுவிட வேண்டுமாம்! இல்லாவிட்டால் அவர்களுக்கு 'சமூக நீதியில்' இடம் இல்லையாம்!
இந்த செருப்படி கொடுத்து வைத்திருக்கும் போதே இதுகள் இப்படி 'நாட்டாமை' செய்கிறதே - ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் என்னதான் செய்திருக்காதுகள்!
எம்.எஸ்.கோல்வால்க்கரின் 'சிந்தனைக் கொத்தி' நூலிலே - 'ஒரு பார்ப்பன அலுவலகச் சிப்பந்தியின் முன்பாக - ஒரு 'சூத்திர' அதிகாரி எப்படி - தன்னுடைய 'மனுவாத' நிலைப்படியை உணர்ந்து காட்டும்விதமாக எழுந்து நின்று குனிந்து வணங்கினார்' என்பதை - ஒரு ஆதர்சமாக கோல்வால்க்கர் எழுதியிருப்பார்.
அத்தகைய "ஆதர்ச இந்தியா'வை உருவாக்குவதே 'இவாள்;களின் நோக்கம்!
நோக்கம் எதுவோஒ அதெற்கேற்றாற் போல்தானே பேச்சும் செயலும் இருக்கும்! ;)
நியோ நீங்கள் சொல்வது போல்தான் நானும் ரவியைப்பற்றி நினைத்திருந்தேன். அவருடைய பிராமண சங்கப் பதிவிலும், இட ஒதுக்கீட்டுப்பதிவிலும் அவரது சுயரூபப் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்தப்பதிவுக்கு மிக்க நன்றி.
தலித் பூசாரி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! :)
இந்தப் பொருள் குறித்துப் பேசுகிற தினகரன் கட்டுரை
தொடர்ந்து இவ்விஷயத்தில் 'அவர்கள்' எறியும் ஒவ்வொரு அம்புக்கும் நம்மிடம் கேடயமும் உண்டு; பதில் அம்பும் உண்டு என்பதை அவர்கள் அறியச் செய்வோம்.
வணக்கம் நியோ!
//உயர்கல்வி நிறுவனங்கள் 'பெரியார் பூமி'யிலேயே இப்படி நடக்கும் என்றால் வட இந்தியாவில்?!!!//
வட இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களில (குறிப்பாக வேளான்மை பல்கலைக்கழகங்களில்),மற்றும் கரக் பூர் ஐ.ஐ.டீ. யில் படிக்க சென்ற தமிழ் நாட்டு மாணவர்கள் அதிலும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தோர் அதிகளவில் கடத்தபட்டு தங்களுக்கு படிக்க விருப்பம் இல்லை என்று எழுதி தர சொல்லி மிரட்டப் பட்டதாக முன்னர் படித்துள்ளேன். அவ்வாறு துறத்திவிட்டு அவ்விடங்களில் அவர்களே காலி இடங்களை நிரப்பிக்கொள்ள ஒரு வழியுள்ளது.
சில சமயம் நிதர்சனம் புரிவதில்லை சிலருக்கு.
இன்று (19/5) பாட்னாவில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகநீதி விழையும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்மூடித்தனமாக அராஜகமாக தடியடி நடத்தியுள்ளனர்.
மாணவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. மேல்சாதிக்காரர்களின் உடும்புப் பிடியில் இருக்கும் ஆங்கில டி.வி. மீடியாக்கள் - இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவர்கள் மீடியா மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி போட்டு 'தாக்குகிறார்கள்'! (என்.டி.டி.வி ரிப்போர்ட்டர் மண்டைகட்டோடு பேசுகிறார்; இட ஒதுகீட்டுக்கு ஆதரவான மாணவர்கள் ரவுடித்தனம் செய்தார்கள் என்கிற ரீதியில் அப்பட்டமான, அயோக்கியத்தனமான - ஒருதலைப்பட்ச ரிப்போர்ட் தருகிறார்!)
இந்த லட்சணத்தில் உள்லது மேல்சாதி 'மெரிட்' நீதியும், Professional புத்தியும்!
சும்மனாச்சுக்கும் கிரண் பேடியைப் பேச வைத்து - காவலர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவர்கள் தலை மீதே குறி வைத்து தடியடி நடத்தியதை கண்டிப்பதைக் காட்டுகிறார்கள்!
இந்தியப் பார்ப்பனியவாதிகளும், மேட்டுக்குடியினரும் ரத்தம் சிந்தாமல், "களப்பலி" கொடுக்காமல் திருந்த மாட்டார்களோ - என்று எண்ண வைக்கும்படியான அயோக்கியத்தனத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Things May get out of hand in the coming weeks, months..என்று தோன்றுகிறது...இதைச் சொல்ல வருத்தமாகத்தான் உள்ளது.
>> வட இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களில (குறிப்பாக வேளான்மை பல்கலைக்கழகங்களில்),மற்றும் கரக் பூர் ஐ.ஐ.டீ. யில் படிக்க சென்ற தமிழ் நாட்டு மாணவர்கள் அதிலும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தோர் அதிகளவில் கடத்தபட்டு தங்களுக்கு படிக்க விருப்பம் இல்லை என்று எழுதி தர சொல்லி மிரட்டப் பட்டதாக முன்னர் படித்துள்ளேன். >>
வவ்வால் அவர்களே, வருகைக்கு நன்றி.
மேற்சொன்ன மாதிரியான விடயங்களை நானும் கேள்வியுற்றிருக்கிறேன். இணையத்தில் இதுகுறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்குமா..உங்களிடம் உள்ள Sources ஏதாவ்து இருந்தால் இங்கே தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
test
Neo,
I heard you're a FC too. Is it ture? If so have you arranged your childrens' education out of TN? Why don't your sacrifice your childrens' education for the sake of "social justice"? You won't would you! Becuse only poor Brahmins have to sacrifice. not Badris and neos.
அனானி,
கூமுட்டைத்தனமான புரட்டுகளை 'கருத்து' என்கிற பெயரில் எழுதுவதைத் தவி்ர்க்கப் பாருங்கள்.
இதை வெளியிட்டதற்குக் காரணமே இது போன்ற பொச்சரிப்புகள் ஏராளம் வருகிறது என்பதை வெளிப்படுத்தத்தான்.
மு. சுந்தரமூர்த்தியாரின் இந்த
இடுகை வழியே "அண்டை அயல்" அருள் செல்வனின் பதிவுகளைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது :
மேட்டுக்குடி மருத்துவர்களின் அராஜகத்தைக் கண்டிக்கும் பதிவு.
இடஒதுக்கீடு
குறித்த அருளின் பதிவு :
கிழிச்சு தொங்க விட்டு விட்டீர்.
இவ்விடயம் குறித்துப் பேசும் மேலும் சில பதிவுகள் :
1. "இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?" - குழலி
2. "இட ஒதுக்கீடு" - பத்ரி
3. " நான் ஏமாளியா? - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு" - மனசாட்சி
"யார் நல்லவர்? யார் ஏழை?" - ஜோ
"புஜ்ஜிக்குட்டி அர்ஜுன்சிங்கும் கைகால்நடுக்கமும்" -
முத்து (தமிழினி)
வணக்கம்,
ஏன் இவர்கள் இன்னும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் என்ற காரணங்களை தெளிவாக விளக்கவில்லை. "கல்வி நிறுவனங்களின் தரம் கெட்டுவிடும்" என்பதையே பதிலாக சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் பாதுகாப்பில் உள்ள IIT/IIM களுக்கு 100 கோடிக்கு மேல் இந்த "தாழ்ந்த" ஜாதியினரின் வரிப்பணம் தேவைப்படுகிறது.ஆனால் மிகவும் கடினமாக உழைத்து (வழிகாட்டுதலின்றி)மதிப்பெண் பெறும் அவர்களின் பிள்ளைகளோ தேவையில்லை.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் அண்ணா பல்கலைக்கழகம் கூட நல்ல தரத்துடன் தான் இருக்கிறது. (இது இரண்டு கல்வி நிறுவனங்களையும்் ஒப்பிடும் முயற்சி அல்ல) தரம் என்ற பதிலுக்கான எனது வினாவேயாகும்.
நல்ல மதிப்பெண் வாங்குபவர்க்கு எதற்கு இடஒதுக்கீடு என கேட்கிறார்கள் சிலர்.அவர்களுக்கான பதில், நல்ல மதிப்பெண் வாங்கும் எனது சகோதர, சகோதரி கள் வெறும் 10 பேர் தான் அதிலும் கல்வி கற்ற குடும்பங்களின் இரண்டாம் தலைமுறையினர் தான் இவர்கள். ஆண்டாண்டு காலமாக கல்வி கற்றவர்களின் "உயர்ந்த" தலைமுறையினருடன் போட்டி போட மற்ற "தாழ்ந்தவர்களுக்கு" மேலும் சிறிது ஊட்டசத்து தேவைப்படுகிறது , அதற்கு தான் இந்த இட ஒதுக்கீடு.
இந்த நாட்டில் எத்தனை நிறுவனங்கள்் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து ஒருவரை அளவிடுகிறது? சிபாரிசுகளின்(உயர்ந்த மென்பொருள் நிறுவனங்களில் கூட) மூலமே முதல் வாய்ப்பை பெறுகிறார்கள் பலர். எங்களுக்கு சிபாரிசு செய்யவோ, கறுப்பு தோல் உடையவரை! ஏற்கவோ ஓரிரு ஆட்கள் வேண்டுமல்லவா, அதற்காகத்தான் இட ஒதுக்கீடு கேட்கிறோம். ்
என்று இந்த நாட்டில் ஏற்ற தாழ்வு அழிந்து சகோதரத்துடன் சம வாய்ப்பும், மதிப்பும் அளிக்கபடுகின்றனவோ அன்று அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டாம் என நாங்களே குரல் கொடுக்கிறோம்.
பெருபான்மையாக உள்ள சமூகத்தினர்க்கு உதவாத கல்வி நிறுவனங்களுக்கு எதற்காக எங்கள் வரிப்பணம் வீணழிய வேண்டும்.எங்களுக்கு கல்வியை அளிக்காத அவற்றை தனியாருக்கு தாரை வார்த்துவிடலாமே அரசு?
பதிலை "உயர்ந்தவர்" களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
தீ
http://stationbench.blogspot.com/2006/05/blog-post.html
ராம்கி! உங்கள் வருகைக்கும் இந்தச் செய்தியினைத் தந்ததற்கும் நன்றி! :)
"தீ" உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!
இந்த விடயத்தில் பல முக்கிய வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள். பார்ப்போம் - எந்தளவு விடைகள் வருகிறதென்று. தொடர்ச்சியாகவும், விழிப்புணர்வோடும் இவ்விடயத்தில் சமூக நீதியாளர்கள் உறுதி காட்ட வேண்டும்.
அப்போதுதான் மேட்டுக்குடியாரின் அரசியல் சதிகளை எல்லாத் தளங்களிலும் வெளிப்படுத்தி முறியடிக்க முடியும்.
இறுதியாக இட ஒதுக்கீடு வந்தே விட்டது!
ஜுன் 2007-இல் இருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்தக் கல்வியாண்டிலிருந்தே - ஒரு சில நிறுவனங்களிலாவது இந்த இட ஒதுக்கீடு அமல் நடத்தப்பட்டால் நல்லது என்று தோன்றுகிறது.
------------------------------
இன்று - சுந்தரவடிவேல் அவர்களின் இட ஒதுக்கீடும், பன்மயமாக்கும் திட்டமும் (Diversity Plan) என்கிற அட்டகாசமான பதிவைப் படித்து மகிழ்ந்தேன்!
யாம் பெற்ற இன்பம் பெறுக!... :)
கல்வெட்டு அவர்களின் இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? என்னும் அருமையான் பதிவு படித்தேன், இட ஒதுக்கீட்டு விஷயம் பற்றி.
Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - OBC
25 - SC
20 - ST
5 - Handicapped
5 - Sports Persons
5 - Terrorist Affected
5 - Kashmiri Migrants
9 - Politicians
and if possible
1 - Astronnaut
பதிலை "உயர்ந்தவர்" களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
பதில் இருக்கிறது. ஆனால் நான் நீங்கள் கூறும் "உயர்ந்தவர்" இல்லை.
Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - Iyer
25 - Iyengaar
10 + 10 - Iyer ladies + Iyengaar Ladies
5 - poosaaris
5 - pRokithars
5 - Pasumaadus
5 - Kashmiri Pandits
9 - Principals
and if possible
1 - SangaraaChariya
OK vaa? ;-)
தலித் பூசாரியின் பின்னூட்டம் முந்தைய அனானியின் அனாமதேய அராஜகப் பின்னூட்டத்துக்கான எதிர்வினை என்ற அளவில் ரசிக்கத்தக்கது!
இந்த அனாமதேய குமட்டல் - பல பார்ப்பனீயவாதிகளின் ஒட்டுமொத்த வாந்தியெடுத்தலைச் சேர்த்துக் குழைத்து சமைத்ததாகத் தெரிகிறது. மின்னஞ்சல் மூலம் இப்படிப்பட்ட கழிவுகளை பரப்பி மகிழ்கின்றன சில மேட்டுக்குடிக் குக்கல்கள்!
நேற்று ஒரு நாகரீகப்பதிவர்!!
இதே விஷயத்தைப் பதிந்திருந்தார்!
பார்ப்பனீயவாதிகளுக்கு இனி பேய் என்ன ஒட்டு மொத்த சாத்தான்களுமே உடலில் ஏறிக் கொண்டு ஆடத்தான் போகின்றன! பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டை இனி தடுக்க இயலாதல்லவா!
உடனே OBC-க்கள் வன்முறையாளர்களாகி விடுவர்; தேச விரோதி, பார்ப்பன விரோதி அல் காய்தா தீவிரவாதி என்று பார்ப்பனர்கள் OBC-க்கள் மீது வாந்தி விமர்சனம் தொடர்ந்து செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்!
எல்லாத்துக்கும் மேலே போய் ஒரு குடுமி "....ஓட்டப்பம் வீட்டைச்சுடும்" பட்டினத்தார் ரேஞ்சில அலறல் சாபம் விடுகிறது!
ஈராயிரமாண்டுச் சனியன் லேசில விட்டுக் குடுத்துருமா? ஒரு ஆட்டம் ஆடித்தான் ஓயும்!
மலையேத்திருவோம் சீக்கிரம்! ;)
Hi Guys,
Please we tamilians dont deserve any credit to comment on any issues on social justice... We cant accept anybody to express their views... May be irrelevant to the current issue but I am forced to mention what happened to actress Kushboo here.. Whatever s he said was her views.. Correct or wrong, In a democracy we have the right to speak, right to putforth our views.. But in TN we have some worst politicians like Ramadoss, krishnasaamy and some other criminals... we dont deserve any social justice my dear friends..
//விடயங்களை நானும் கேள்வியுற்றிருக்கிறேன். இணையத்தில் இதுகுறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்குமா..//
Not likely (you know the reason)
-----------
The Merit List for Admission to Medical Colleges in Tamil
Nadu gives and Interesting point
Read the full piece here at
http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm
Open Seats - 430
321 BC students,
57 MBC students
14 SC students will get into the open competition.
38 Forward Community
This literally means that students from BC and MBC score well than the Forward Community Counterparts
This also means that the students from the so called forward community are able to get LESS THAN 10 percent of seats available......
And this is a proof that Reservations WORK... (for all those who say that reservations are useless)
>> And this is a proof that Reservations WORK... (for all those who say that reservations are useless) >>
This is an important point. I saw somwhere someone called srinithi? mis-quoting this thing and twisting it.
We have to Persist with resrvations for considerable period of time, Decades of Social conditioning is required for the fruits of social justice to bear.
Post a Comment