ஆடுதுறை பக்கத்திலெ ஏதோ ஒரு மங்கலம்
ஆத்துத்துறையில நின்ன 'சாமி'மாரு வீட்டுப்புள்ள
ஏக்கத்தில பாத்துச்சு 'தொப்புளான்' மவன் எசக்கிய
கருஞ்சடையா நெளியும் தலைய பயபுள்ள வாருரானா?
முகத்தில வந்துவுழும் முடி
காத்துல பாடும் ஜதி!
சடை பின்னி ரிப்பன் கட்டி
அடங்காத கருப்புநதி!
'சாமி'புள்ள சின்னப்பய ...சங்கரன் அழுதுபுட்டான்
என் முடிஇன்னிக்கோட போச்சே
குடுமி வச்சு குருகுலம் போக
என் தலை மயிரும் போச்சே
இப்பிடி எத்தனையோ ஆயிரம் ஆயிரமா
சின்னப்பயக மயிரும் போச்சு
சிரிப்பு விளையாட்டும் போச்சு
இத்தன வருசம் போச்சு
வளந்தது
சமஸ்க்ருதமா, மயிரா
போ
No comments:
Post a Comment