
வணக்கம் :)
'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின் தொன்மையான தாயகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இந்த வலையகம் ஒரு களமாக இருக்க விழைகிறேன்.
அண்மையில் 'கூகிள் எர்த்' என்கிற மென்பொருள் மூலமாக கன்னியாகுமரியின் தெற்கே உள்ள பகுதியைப் பார்த்தபோது, அந்த satellite imagery-ல் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் அமிழ்ந்து கிடக்கும் நிலப்பரப்பு தெரிந்தது.
இந்தியத் தென்பகுதி எல்லையை ஒட்டி ஒரு Continental shelf-போல் அல்லாது , தொடர்ச்சியாக ஒரு நிலப்பரப்பு போன்று அந்தப் பகுதி தோன்றுகிறது. குமரித் தென் எல்லையில் இருந்து கடலுக்கு அடியில் சுமார் ஒரு 300 கி.மீ தொலைவு தூரத்துக்கு அந்த நிலப்பரப்பு க்டலினடியில் தெரிவதைக் காண முடிகிறது.
மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள்.
என்னதான் 'லெமூரியா' ஒரு கற்பனைக் கதை என்று சில தொல்லியல் அறிஞர்கள் ஜல்லியடித்தாலும் - நம்முடைய பண்டைய இலக்கியச் சான்றுகளும், மொழியியல் ஆய்வுகளும், தற்போதைய குமரிக்குத் தெற்கே இருந்த பெரும் பண்டைய தமிழ் நிலப்பரப்பு - கடற்கோளில் அமிழந்து போனதை பல இடங்களில் தெரிவிப்பதை எப்படி ஒதுக்கித் தள்ளுவது?
இது பற்றிய மேலதிக விவரங்களை 'விவரமான' விசயமறிந்த தமிழர்கள் தரவேண்டும். 'நாசா' சாட்டிலைட்டுகள் - "குரங்கு" கட்டிய பாலங்களைத்தான் கண்டுபிடிக்குமா?
தமிழர்களின் தொலைந்த நிலப்பரப்புக் குறித்து ஆராய அவர்கள் உதவ மாட்டார்களா?
Google Earth Global viewer மென்பொருள் இங்கே கிடைக்கும்.
கூகிள் எர்த் மென்பொருள் மூலமாக சில புதிய தொல்லியல் ஆய்வு இடங்களைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விவரங்கள் இங்கே மற்றும் இங்கே பார்க்கவும்.
கமபோடியக் காடுகளின் அடர்ந்த இருளுக்குள் மறைந்து கிடந்த - ஒரு தொலைந்து போன பண்டைய நகரத்தையே - விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள் துணையோடு, அகச் சிவப்புக் கதிர்களின் ஒளிவீச்சு மூலம் புகைப்படமெடுத்து - முழுவதுமாகக் கண்டறிந்து வெளியிட்டதையும் - பின்னர் அகழவாய்வு வல்லுனர்கள் அந்த இடத்தை எளிதாக ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தததையும் - Discovery : Travel & Living - தொலைக்காட்சியில் பார்த்து வாய் பிளந்து நின்றேன்.
அதே போன்று - பல்லாயிரம் வருடத்துக்கு முந்தைய காலத்தில், 'பெரு' நாட்டில் வாழந்திருந்த ( இன்கா நாகரீக காலத்துக்கு முந்தைய) பண்டைய மக்களின் நகரங்களை அங்கிருக்கும் ஒரு தொன்மை வாய்ந்த ஏரியான டிட்டிகாகா(Lake Titicaca) அடியிலிருந்து அகழ்வாய்வு நிபுணர்கள் கண்டு பிடித்ததையும் படிக்க நேர்ந்தது.
'அய்மாரா', 'ஊரு' (கவனியுங்கள்!!) - என்பன போன்ற பெயர்கள் கொண்ட ஆதிப் பழங்குடிகள் இன்றும் அந்த ஏரிக்கரையில் வசித்து வருகிறார்கள்.
இதிலே வியப்பான விசயம் என்னவென்றால் அந்தப் பழங்குடிகள் - 'லெமூரியாவில்' ஏற்பட்ட 'ஊழி வெள்ள்ப் பெருக்கிலிருந்து' தப்பி வந்த பழங்குடிகளின் புதல்வர்கள் என்று நம்பப்படுவதுதான்!