17 January 2006

கைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்

ஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டாயிரம் வருஷத்துக்கப்பறம் பொறப்பட்டு வந்த எடத்துக்குப் போறதுன்னா எப்பேர்ப்பட்ட பாக்யம்?!

12,000 கோடி பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்ட 'கைபர்-போலன்' கணவாய் ஏர்வேஸின் பிரதெயேக விமான தளத்தின் ஓடுபாதையில் ரிக், யஜுர், சாம வேத யாகங்கள் ஒருவழியாக நடந்து முடிந்து எல்லாப் பயணிகளுக்கும் யாக குண்டப் பிரசாதங்கள் திருப்தியாய் வினியோகிச்சாச்சல்லவா?

யாகம்னா சும்மாவா? - அவா ஷேமத்துக்காக முக்ய எதிரிகளைப் போட்டு 'வறுத்து' எடுத்த யாகம்னா அது!


சாஸ்திர, பிரம்ம சூத்திர, ஸ்ருதி-ஸ்மிருதி அறிவைப் பிழிஞ்சு எடுத்த 'விமான சாஸ்திரா' வில சொல்லியிருக்காப்ல செஞ்ச ஹை-டெக் 'புஷ்பக விமானம்னா' இவாளை கொண்டு சேக்கப் போறது!

பல்லி கணெஷ்தான் பைலட் - நாசாவுக்கெல்லாம் போயி 'டிரெய்னிங்' எடுத்தவா ஆச்சே!


எல்லாரையும் 'கியூவில' நிற்கறதுக்கு டைரக்டர் 'வாலச்சந்தர்' டைரெக்ட் பண்ணிண்டு இருக்கச்சே, ஒரு இளவயசு பொண்ணாண்ட அவர் எப்படி நிக்கணும், பிளேனில எப்ப்டி ஏறணும், எப்பிடி ஸீட் பெல்ட் போடணும்னு சொல்றச்செ பக்கத்தில இருந்த சூளமேடு கடராஜன் 'அண்ணா! என்னமா டைரெக்ட் பண்றேள்' னு கட்டிப் பிடிச்சு அழுதுட்டார் (அப்பிடியே 'வாலச்சந்தர்' வைத்திருந்த வாலட்டையும் அடிச்சுட்டர்!)

பக்கத்துல நோஞ்சானாட்டமா நின்னுண்டிருந்த ஒர் சோப்ளாங்கி கிழட்டு மாமா Dர். பஜாத்தா - பக்கத்தில அவரு மூஞ்சியே பத்துட்டு நின்னுட்டுருந்த பசங்களாண்ட 'என்னடா இந்த Spencer Wells அம்பி ரிசர்ச் பண்ணான்? ஒண்ணும் வெளங்கல. மனுசன் ஆப்பிரிக்கல இருந்து வந்தான்றான். நேக்குத் தெரியும் அது கைபர்தான் - இல்ல கொஞ்ச தூரம் தள்ளிப் போனா வரும்ல 'காகேசியன்' மலை அங்கதான். கைபர் போன ஒடன பாரு - நான் புது குரோமோசோம் அர்ரய்ச்சி பண்ணி 'உரை' எழுதி அவனக் கிழிச்சுடறேன். அவன விட இதில நான் சீனியர்.. தெரிமோ - என ஆலந்து கொண்டிருந்தார்.

பக்கத்தில் கும்பலாக கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்த மாமாக்களுக்கு மத்தியிலிருந்து - ஒரு மொட்டை மாமா கோபமாக சத்தம் போட்டுட்டே விமான தளைத்தை விட்டு வெளியே செல்கிறார் - 'நேக்கு கோமளவல்லி ஏர்வேஸ்-ல டிராவல் பண்ணாத்தான் ரிலாக்ஸ்டா இருக்கும்'னுட்டு சொல்லிட்டுப் போயிடறார்.

ஒரு கிரவுண்டு இஞ்சினியர் கோயான் 'ஆமா இவனுங்க லாரில போனால மிச்ச எடம் இருக்கும் - இதுல பிளைட்டு கேக்குதா' என கலாய்த்ததை - தலைமுடிக்கு 'டை' அடித்தபடி வந்த 'கப்பு' மணிசாமி மாமா கேட்டு - 'உன் மேல பூனை நஷ்ட வழக்கு' போட்டுடுவேன் - எங்களவாளண்ட மன்னிப்புக் கேக்கலன்னா' என்ற மிரட்ட ஆரம்பிக்க - அதற்குள் எல்லோரும் சமாதானம் பண்ணி ஏற்றுகிறார்கள்.

கடைசி நேரத்தில் ஒரு உருவம் வந்து பிளைட்டில் ஏறுகிறது 'urban legend' கொலைகாரி ரேஞ்சுக்கு பெரியதாக தலை மயிர் மறைக்கும் மூடி போட்டு!
அதன் கையில் எதையோ ரொம்ப உஷாராக மறைத்தபடி அது உட்கார்ந்தது.

ஒன் வே பிளேன் என்பதால் யாருக்கும் பாராசூட் backup இல்லை; வெறும் cross-belt-தான்!

ஏர்ஹோஸ்டஸ்-கள் எல்லோருக்கும் 'சுரா' பானம் வழங்க ஆரம்பித்தனர், அது 'மங்கல' பானம் என்பதால். குடித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து 'ஜுய் கைபர்! ஜுய் போலன்! ஜுய் ஜுய்! என கூச்சலிட்டதும் - பல்லி கணேஷ் பிளைட்டை தூக்கி விட்டார்!

கர்நாடகாவைத் தாண்டி, மகாரஷ்டிரா போய்க்கொண்டிருந்தது பிளைட் - குஜராத்..... திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு ரேடார்களினின்றும் காணாமற் போய்விட்டது!

பி.கு:

அன்றிரவு Bun Tea TV-இல் ஒரு இருளான கிராமத்து பழங்குடியினக் கிழவர் திகிலோடு பேசிக் கொண்டிருந்ததை ஆங்கில பெயர்ப்பில் ஓட்டினார்கள்...."ஏதோ ஒரு பெரிய பறவை அந்தக் காட்டத் தாண்டி விழுந்து சத்தம்போட்டு நெருப்பக் கக்க்கிட்டே விழிந்துச்சு...அப்போ அதோட வயித்திலருந்து ஒரு மண்டை மயிர்மூடிட்டு ஒரு கறுப்பு உருவம் பறந்து வந்து அந்தப் பள்ளத்தாக்குல விழுந்து ஓடுச்சு"

No comments: