
வணக்கம் :)
'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின் தொன்மையான தாயகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இந்த வலையகம் ஒரு களமாக இருக்க விழைகிறேன்.
அண்மையில் 'கூகிள் எர்த்' என்கிற மென்பொருள் மூலமாக கன்னியாகுமரியின் தெற்கே உள்ள பகுதியைப் பார்த்தபோது, அந்த satellite imagery-ல் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் அமிழ்ந்து கிடக்கும் நிலப்பரப்பு தெரிந்தது.
இந்தியத் தென்பகுதி எல்லையை ஒட்டி ஒரு Continental shelf-போல் அல்லாது , தொடர்ச்சியாக ஒரு நிலப்பரப்பு போன்று அந்தப் பகுதி தோன்றுகிறது. குமரித் தென் எல்லையில் இருந்து கடலுக்கு அடியில் சுமார் ஒரு 300 கி.மீ தொலைவு தூரத்துக்கு அந்த நிலப்பரப்பு க்டலினடியில் தெரிவதைக் காண முடிகிறது.
மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள்.
என்னதான் 'லெமூரியா' ஒரு கற்பனைக் கதை என்று சில தொல்லியல் அறிஞர்கள் ஜல்லியடித்தாலும் - நம்முடைய பண்டைய இலக்கியச் சான்றுகளும், மொழியியல் ஆய்வுகளும், தற்போதைய குமரிக்குத் தெற்கே இருந்த பெரும் பண்டைய தமிழ் நிலப்பரப்பு - கடற்கோளில் அமிழந்து போனதை பல இடங்களில் தெரிவிப்பதை எப்படி ஒதுக்கித் தள்ளுவது?
இது பற்றிய மேலதிக விவரங்களை 'விவரமான' விசயமறிந்த தமிழர்கள் தரவேண்டும். 'நாசா' சாட்டிலைட்டுகள் - "குரங்கு" கட்டிய பாலங்களைத்தான் கண்டுபிடிக்குமா?
தமிழர்களின் தொலைந்த நிலப்பரப்புக் குறித்து ஆராய அவர்கள் உதவ மாட்டார்களா?
Google Earth Global viewer மென்பொருள் இங்கே கிடைக்கும்.
கூகிள் எர்த் மென்பொருள் மூலமாக சில புதிய தொல்லியல் ஆய்வு இடங்களைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விவரங்கள் இங்கே மற்றும் இங்கே பார்க்கவும்.
கமபோடியக் காடுகளின் அடர்ந்த இருளுக்குள் மறைந்து கிடந்த - ஒரு தொலைந்து போன பண்டைய நகரத்தையே - விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள் துணையோடு, அகச் சிவப்புக் கதிர்களின் ஒளிவீச்சு மூலம் புகைப்படமெடுத்து - முழுவதுமாகக் கண்டறிந்து வெளியிட்டதையும் - பின்னர் அகழவாய்வு வல்லுனர்கள் அந்த இடத்தை எளிதாக ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தததையும் - Discovery : Travel & Living - தொலைக்காட்சியில் பார்த்து வாய் பிளந்து நின்றேன்.
அதே போன்று - பல்லாயிரம் வருடத்துக்கு முந்தைய காலத்தில், 'பெரு' நாட்டில் வாழந்திருந்த ( இன்கா நாகரீக காலத்துக்கு முந்தைய) பண்டைய மக்களின் நகரங்களை அங்கிருக்கும் ஒரு தொன்மை வாய்ந்த ஏரியான டிட்டிகாகா(Lake Titicaca) அடியிலிருந்து அகழ்வாய்வு நிபுணர்கள் கண்டு பிடித்ததையும் படிக்க நேர்ந்தது.
'அய்மாரா', 'ஊரு' (கவனியுங்கள்!!) - என்பன போன்ற பெயர்கள் கொண்ட ஆதிப் பழங்குடிகள் இன்றும் அந்த ஏரிக்கரையில் வசித்து வருகிறார்கள்.
இதிலே வியப்பான விசயம் என்னவென்றால் அந்தப் பழங்குடிகள் - 'லெமூரியாவில்' ஏற்பட்ட 'ஊழி வெள்ள்ப் பெருக்கிலிருந்து' தப்பி வந்த பழங்குடிகளின் புதல்வர்கள் என்று நம்பப்படுவதுதான்!
15 comments:
நல்ல தகவல்கள்.
நீங்கள் தமிழ் மணத்தில் பட்டியல் இட்டு உள்ளீர்கள் அல்லவா?
தமிழ்ப் பதிவு உலகிற்கு வருக!!
கல்வெட்டு அவர்களே!
நன்றி! வலைப்பூக்களுக்குத் தேனீயாக வந்து அமுதம் பருகவே அதிக விருப்பம்! இந்த குறிப்பிட்ட செய்தி குறித்து வேறு யாரும் பேசியதாகத் தெரியாததாலேயே இதை இட்டேன்!
நிலவியல் ஆய்வாளர்கள் (குறிப்பாக கடல் நிலவியல் பற்றி அறிந்தவர்கள்) இந்த கூகிள் எர்த் மென்பொருள் மூலமாகத் தெரிகிற கடலடி நிலப்பரப்பு குறித்து மேலதிக விவரங்கள் தந்தால் நல்லது :)
வணக்கம் நியோ, இந்த தலைப்பு தமிழ்மணத்திலும் மற்றும் இணையத்திலும் அறியப்படாத அல்லது பெருமளவில் தகவல் தரப்படாத பகுதி, சில காலங்களுக்கு முன் மின் மடலில் நாசாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைத்தன, அதில் ஆடம் பாலம் பற்றிய புகைப்படங்களும் அடக்கம், மற்ற பதிவுகளுக்காகவும் காத்திருக்கின்றேன்
நன்றி
>> சில காலங்களுக்கு முன் மின் மடலில் நாசாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைத்தன, அதில் ஆடம் பாலம் பற்றிய புகைப்படங்களும் அடக்கம் >>
The Usual Suspects did that! :)))
இந்தப் பதிவுக்கான தலைப்பிலும் - ஆடம் பாலம் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சில பண்டாரங்கள் 'குரங்காட்டம்' ஆடினார்கள்!
இப்போ எல்லாம் ஆட்டம் கொஞ்சம் அடங்கித்தான் இருக்கு!
ஆனால், கடலின் அடிப்பரப்பு அகழ்வாய்வு செய்பவர்களுக்கு = தென் குமரிக்கடலில் சில பல ஆச்சரியங்களும், வரல்லாற்று உண்மைகளும் கிடைக்கும் என்பதே என் தாழ்மையான கருத்து.
ஆனால் துற்பேறு என்னவென்றால், இது போன்ற வரலாற்று இன்றியமையாக் காரியங்களில் தமிழர்கள் ஈடுபடுவது தங்கள் "இருப்பு" பற்றிய கேள்விகளை எழுப்பிவிடக் கூடும் - என்று சில 'கணவான்கள்' எண்ணுவதால் - தமிழின் தொன்மை, ஆதி தமிழரின் வரலாற்று மூலங்கள் வெளிவராமல் 'மூழ்கிக் கிடக்கின்றன'.
தேவநேயப் பாவாணர் - இது குறித்து எழுதியவைகளும் - சமகால தொல்லியல் அறிஞர்களின் பல்வேறு கூற்றுகளையும் உற்று நோக்கும்போது - குமரிக் கண்டம் பற்றிய நம்முடைய ஆய்வு முயற்சிகளின் போதாமை விளங்கும்.
சிந்துவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகளுக்கும், தொல் குமரிக் கண்ட ஆய்வுகளுக்கும் இடையே இருக்கும் - பொதுவான இழைகளைக் கண்டறிந்து விட்டால் - இந்தியத் துணைக்கண்டத்தின் - ஆரியத்துக்கு முந்தைய வரலாற்றைச் சரியாக விளங்கிக் கொள்ள்வியலும்.
இதுகுறித்து பதிவுகள் இட எண்ணியுள்ளேன். பார்ப்போம்! :)
>> இந்தப் பதிவுக்கான தலைப்பிலும் - ஆடம் பாலம் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சில பண்டாரங்கள் 'குரங்காட்டம்' ஆடினார்கள்!
என்பதை
இந்தப் பதிவுக்கான தலைப்பை - ஆடம் பாலம் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சில பண்டாரங்கள் முன்பு 'குரங்காட்டம்' ஆடியதைக் குறிக்கும் விதத்திலேயே வைத்தேன்
Neo,
அருமையான பதிவோடு தொடங்கியிருக்கிறீர்கள் .இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதியுங்கள்.
கம்போடிய பண்டை நகரம் என்று குறிப்பிடுவது 'அங்கோர் வாட்' பகுதியா?
ஜோ!
>> அருமையான பதிவோடு தொடங்கியிருக்கிறீர்கள் .இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதியுங்கள். >>
நான் இந்த கூகிள் எர்த் புகைப்படம் குறித்த என்னுடைய அய்யத்தை இங்கு பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ துவக்கினேன்.
வேறு சில பதிவுகள் இட விருப்பம்தான் கூடிய விரைவில்! :)
>> கம்போடிய பண்டை நகரம் என்று குறிப்பிடுவது 'அங்கோர் வாட்' பகுதியா? >>
அதேதான். அங்கோர்வாட்டைச் சுற்றியிருந்த பகுதியிலிருந்தாதன் அந்தப் பண்டைய நகரக் கண்டுபிடித்தார்கள்
வாழ்த்துகள் நியோ...
வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் உண்டு.
தமிழர்களின் வரலாறு கூறும் தேவநேயப் பாவணர் புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். தமிழகம் சென்றால் தான் வாங்க இயலும்.
தமிழர் நலன் காக்க விழையும் குரலாக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துகள்.
அன்புடன்
புத்தாண்டு வாழ்த்துகளுடன்
நண்பன்
இன்று தான் தங்கள் பதிவை பார்த்தேன்
நன்றாக உள்ளது முத்தமிழ் மன்றத்தில் இந்தியா தமழர்களது என ஒரு விளக்கம் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=1709&start=0&sid=5b64820d2aa9310ec3a2496f5ea75869
நண்பன் அவர்களே,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி! 'ஆதிச்சநல்லூர்' புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுதைமண் படிமங்கள், பானைகள் ஆகியவை பற்றிய - கால மற்றும் எழுத்து ஆராய்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு - குமரிக்கண்டம் பற்றியும் முதலாம், இரண்டாம் தமிழ்ச்சங்கங்கள் பற்றியும் கூடுதல் செய்திகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
என்னார்,
வணக்கம் மற்றும் நன்றி! நீங்கள் தந்த சுட்டி முழுமையாக இல்லாததால் என்னால் அதைப் படிக்க இயலவில்லை. மீண்டும் தர இயலுமா? நன்றி.
இதுகுறித்த கூடுதல் தகவல்கள் என்ன கிடைத்தாலும், நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
தங்களுடைய வரலாற்றுப் பதிவு மிக்க நன்று. இப்படி பதிவுகள் இடுவதற்கு யாரும் இலர்...பதிவுலகில்.
அனைவரும் சாப்பாடு, பொழுதுபோக்கு, இட்டலி வடை என்கிறார்கள். எனக்கு பலநேரத்தில் புரிவதில்லை.
இங்கைத் தமிழில் விளங்குவதில்லை.
உங்கள் பதிவு மிக நன்று.
தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.
படங்களை எங்கே தேடிப் பிடித்தீர்கள்.
தாங்கள் இது பற்றி ஒரு நூல் எழுதலாமே. அப்பாத்துரையார் போன்றவர்களுக்குப் பின்னர் யாரும் இவற்றைப் புத்தகமாக்கியதில்லை. அரிக்கமேடு பற்றியும் ஏதாவது கிடைத்ததா?
பாலாற்றுப் படுக்கையில் ஏதொ கிடைத்ததாக செய்தி வந்தது... என்னவாயிற்று.
காவிரிப்பூம் பட்டினம் கலைஞரின் கட்டிலுக்கடியில் ஒழிந்து கொண்டதா?
சன்-மகன்_ கதிரவத் தொலைக்காட்சி பணம் கொடுத்து ஆய்வுகளைத் தொடக்கலாம்...
ம்... என்ன செய்வது நாசாவிலிருந்தா எமது கடல்கொண்ட தென்னாடுகளை ஆய்வு செய்வார்கள்.
நன்றாயிருக்கிறது.
whitelistல இல்லாதவங்க எல்லாம் blacklistல இருக்கறதா அர்த்தம் இல்லைங்க neo. முற்றிலும் தொழில்நுட்ப காரணத்தால உங்க பதிவை என் நிரல் கண்டுபிடிக்கலை. விளக்கமா சொல்லனும்னா வேற யார் பதிவுல இல்லாத '-' என்ற character உங்க பதிவான neo-lemurianல இருக்கு. அதை என் நிரல் எதிர்பார்க்கல. பதிவோட பெயர்ல a-z, 0-9 மட்டும்தான் இருக்கும்னு தப்பா நினைச்சுட்டேன். இப்போ நிரலை மாத்திட்டேன். உங்க பேரையும் வெண்பட்டியல்ல சேர்த்துட்டேன்.
மத்தபடி இந்த அந்நியன் கொலையெல்லாம் பண்ணமாட்டான் கவலைப்படாதீங்க!
வருகைக்கு நன்றி வெங்கட்ரமணி! :)
நண்பர்களே
குமரிக்கண்டம் பற்றி குமரிமைந்தன் திண்ணையிலும் அவரது வலைப்பக்கத்திலும் எழுதிவருகிறார்
www.thinnai.com
http://kumarimainthan.blogspot.com
E - mail: kumarimainthan@sify.com
கடலடி நிலப்பரப்பு பற்றி செயற்கைக்கோள் படங்களை விட Brijbqsi world Atlas தெளிவாகக் காட்டும். சுறவ(மகர)க் கோட்டைத்தாண்டிச் செல்லும் ஒரு மலைத்தொடரும் நிலநடுக்கோட்டிலும் சுறவக்கோட்டிலும் மேற்கு நோக்கிப் பிரியும் இரண்டு கிளைப்புகளும் கடல்மட்டத்திலிருந்து 600 அடிகளுக்குள் உள்ளன.
இந்தியக் கண்டத்திட்டு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கடிகாரச் சுற்றாகச் சுற்றி நகர்ந்ததாக தமிழ்நாட்டரசின் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் நூல் படத்துடன் விளக்கியுள்ளது. செயகரனின் குமரி நில நீட்சி நூலில் வரும் திபேத்திய மக்களின் கடற்கோள் பற்றிய மரபையும் டெத்தீசுக் கடல் பற்றிய விளக்கத்தையும் இணைத்தால் 13.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தட்டு ஆசியத்தட்டுடன் மோதி டெத்தீசுக்கடல் இன்றைய கங்கையாற்றுத் தடமாக மாறிய வரலாற்றோடு அன்று இந்தியத் தட்டில் நாகரிகமுள்ள மக்கள் வாழ்ந்த செய்தியும் கிடைக்கும். அபிதான சிந்தாமணியில் மத்தியப் பிரதேசம் என்பது இமயமலைக்குக் கிழக்கும் விந்தியமலைக்குக் கிழக்கும் இருந்ததாகவும் பின்னர் அது மாற்றமடைந்ததாகவும் கூறுகிறது. குமரிக் கண்டக் கோட்பாடு மட்டுமல்ல எந்தத் தேசிய வரலாற்றையும் வல்லரசியம் ஏற்றுக்கொள்ளாது ஏனென்றால் அதில் உரிமை சார்ந்த அரசியல் உள்ளது. வரலாற்று வரைவே ஒரு அரசியல் நடவடிக்கை. மண்டை ஓடுகளையும் மண்பாண்ட ஓடுகளையும் வைத்து ஊகங்கள் செய்வதை விட உலகமெல்லாம் மக்களிடையில் பதிவாகியுள்ள பரபுகளின் அடிப்படையில் முடிவுகளை எய்துவது பயனுள்ளதாய் இருக்கும். என் வலைப்பக்கத்தில் உள்ள கட்டுரைகளைப் பாருங்கள்.
http://kumarimainthan.blogspot.com
e.mail- kumarimainthan@gmail.com
அன்புடன் குமரிமைந்தன்
Post a Comment