
( படம் நன்றி : "தி ஃரண்ட்லைன்" )
கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரீகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது.
பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். 'குமரிக்கண்டம்' கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.
இப்போது அக்காலம் குறித்துப் பல புதிய ஆராய்ச்சிகள் நிகழ்வது, தமிழர்களின் தொன்மை குறித்தும், இந்தியத் துணைக்கண்டத்தின் உண்மையான வரலாறு குறித்தும் தெளிந்து கொள்ள உதவும்.
இந்த அகழ்வாய்வு குறித்த விவரங்களை இங்கே மற்றும் இங்கே காணவும்.
வண்ணப் படங்களுடன் கூடிய மேலதிகச் செய்திகளுக்கு இங்கே பார்க்கலாம். அதிலே ஒரு படம்தான் மேலே பார்க்கிறீர்கள். (நன்றி : தி ஃரண்ட்லைன் )
குறைந்த பட்சம் கி.மு 1000 -லிருந்து கி.மு 3800 வரைக்கும் முந்தைய காலகட்டதிலான காலவரை கொண்ட மனித எலும்புகளும், சுதைமண் பாண்டங்களும(Potsherds) இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன என்று சொல்கிறார்கள்! அதில் சிலவற்றில் ஆதிகால தமிழ் பிரம்மி எழுத்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்! :)
இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் - இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் - மிக மிக முக்கியமான உண்மைகள் வெளிவரும்.
1. தமிழர்களின் ஆதிதாயகம் தென்னக - குமரிக்கண்டப் பகுதியே
2. ஆரியர்களுக்கு முந்தைய, வேதகாலத்துக்கு முந்தைய - திராவிட/தமிழ் நாகரிகம் இந்தியாவில் வளர்ந்திருந்தது நிறுவப்படும்.
3. தமிழர்களுக்கும், ஆதி சீனர்களுக்கும், மெசப்பொட்டொமிய-மத்திய கி்ழக்கு நாகரிகங்களுக்க்கும் இருந்த வணிகத் தொடர்புகள் மேலும் தெரிய வரும்.
இன்னும் பற்பல உள்ளது!
ஹிந்துஸ்தாம் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில், பேராசிரியர் பத்மனாதன் ராகவன் சொல்லும் செய்திகள் மேலும் வியப்பும், உவகையும் அளிப்பவை.
ஆஸ்திரேலியாவில் - கான்பெர்ரா நேஷனல் பல்கலைக்கழகத்தில், மானுடவியலாளராகப் பணியாற்றும் டாக்டர் ராகவன் அவர்களை ஆஸ்திரேலியாவில் இருக்கும் யாராவது வலைப்பதிவாள நண்பர்கள் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்கள் வலைப் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!