Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

25 January 2007

தல புராணம்

சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்தக் கவிதை புரியும். இதை நான் முதன்முதலாக எழுதி பல ஆண்டுகள் அப்படியே வைத்திருந்தேன்; சில திருத்தங்கட்குப் பின்னர் சில ஆண்டுகள் முன்பு வேறொரு தளத்தில் இட்டேன்.

இப்போது பொன்ஸ் அவர்கள் எழுதிய அரசாங்கம் கவனிக்குமா? - 2 என்ற பதிவில் யானைப் படங்கள் போட்டிருந்ததைப் பார்த்தபோது ஏனோ இந்த என் கவிதை நினைவுக்கு வந்தது!


தல புராணம்

=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.

- நியோ.

11 January 2007

"ஜெய் தீட்டு ! "

சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.

முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)

அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!

இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)


"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:


மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!

ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)