26 May 2006

கலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா?

இன்று(26/5/2006) சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றது.

நண்பர் லக்கிலுக் பதிவான கலைஞரைத் தாக்க முயற்சி! -யில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.

>> ஒரு டஜன் ரவுடிகளுக்கு மேல் சட்டசபைக்கு அனுப்பி இருக்கும் தாதா ஜெயா தன் அடியாட்களுக்கு கொடுத்திருந்த அசைன்மெண்ட் இன்று வெற்றிகரமாக சட்டசபையில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.... >>

இந்த "சொர்ணக்கா" ஜெயா மாமி 1989-90-இலும் இதைத்தான் செய்தார்!

கலைஞர் படிக்கவிருந்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்துவிட்டு - பிறகு "அய்யயோ என்னை மானபங்கப் படுத்த முயற்சி" என்று நாடகம் போட்டார்.

அதைப் பார்ப்பனீயவாதிகள் பயன்படுத்தி எத்தனை கோயபெல்ஸ் பரப்புரை செய்தார்கள்?

இந்துத்துவவாத, பிற்படுத்தப்ப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க பார்ப்பனீயவாதிகள் செய்த சதியே ஜெ.வின் அதிமுக கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும்.

தமிழர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கோபால்சாமியும், திருமாவும் - இன்னமும் அங்கே இருப்ப்து மாபெரும் இனத்துரோகத்தில்தான் போய் முடியும்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றி ஒன்றும் பேசாத ஜெ. கலைஞரைத் தாக்க ஆள் அனுப்புகிறார் என்றால் - இதன் உள்ளர்த்தம் என்ன??


பார்ப்பனீயவாதிகள் - இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவ்ர்களை - கொலை செய்யத் திட்டம் இடுகிறார்களா? என்ற சந்தேகம் மமிக மிக மிக கடுமையாக எழுகிறது.

இதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"


பிற்சேர்க்கை:

அதிமுக அராஜகக் காட்சிகள்

அதிமுக அராஜகம்1

அதிமுக அராஜகம்2

அதிமுக அராஜகம்3

அதிமுக அராஜகம்4


( ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை. )

"க்ரீமி லேயர்" மோசடி?!

"க்ரீமி லேயர்" எனப்படும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் திட்டம் பற்றிய இன்றைய தினகரனில் வெளிவந்திருக்கும் இதுதான் சமூக (அ)நீதியா? என்னும் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!

முதலில் 'முற்பட்ட வகுப்பாருக்கு' இந்தக் "க்ரீமி லேயர்' திட்டம் செயல்படுத்தப்பட்டுப் பார்த்துவிட்டு - எல்லா 'முற்பட்ட வகுப்பாருக்கும்' (அதாவது ஏழை மற்றும் பணக்கார முற்பட்ட வகுப்பார்) சமவாய்ப்பு அளிக்கப்பட்டு - எல்லா "முற்பட்ட வகுப்பாரையும்" ஒரே மாதிரியான சமச்சீர் பொருளாதாரக் குடும்பத்தினர் ஆக்கிவிட்டால் - அதன் பிறகு - இந்தத் திட்டத்தை - பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பாருக்குப் பயன்படுத்தி இடஒதுக்கீடு வழங்குவதைப் பற்றி சிந்திக்கலாம் என்கிற கருத்தை இந்தக் கட்டுரை தூண்டுகிறது!

ம்! நல்ல யோசனைதான்!

'முற்பட்ட வகுப்பாரே' - முதலில் உங்களில் "ஏழை" முற்பட்ட வகுப்புச் சகோதரர்களைக் கைதூக்கிவிட - இந்த அருமையான யோசனையை ஏற்றுக் கொள்வீர்களா? தயார்தானா? :)

24 May 2006

கமலின் "அணையா நெருப்பு!"

கமல்ஹாசனின் சிறுகதையான "அணையா நெருப்பு" இந்த வார விகடனில் வந்திருக்கிறது. இது பற்றி இணையத்தில் பல தமிழ், ஆங்கில வலைப்பதிவர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல சில இந்துத்துவ ஜாட்டான்கள்(!) இந்தக் கதையைப் படித்து கமலைக் கரித்துக் கொட்டுவதும் தெரிந்தது! இவர்களின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்துவதை விடவும் நமக்கு வேறு மகிழ்ச்சி இல்லை என்பதால் - இந்தப் பதிவு!

கமலின் சிறுகதை அணையா நெருப்பு இங்கே!

23 May 2006

"மிஷன் ஏகலைவன்!"

பத்ரியின் இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ் பதிவில் - என்னுடைய பின்னூட்டமாக இந்தப் பதிவில் எழுதியிருப்பதை இட்டேன். பிறகு இதையே ஒரு தனிப்பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது.

சுந்தரவடிவேல் அவர்கள் எழுதியுள்ள பதிவில் - IIT-யில்(பொதுவாக உயர்கல்வி நிறுவனங்களில்) நிலவும் பல வகுப்புவாரியான சமச்சீர்மையற்றதன்மையைப் பற்றிப் பல தகவல்கள் சொல்கிறார்.

இதற்கு முன்பு கூட குழலி அவருடைய 'ஐஐடி'-யின் உள்வட்ட விளையாட்டுக்கள் - என்கிற பதிவில் பல தகவல்கள் சொல்லியிருந்தார்.

ரவி போன்றவர்கள் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை என்றே இப்போது வரை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சதீஷ் தேஷ்பாண்டே, யோகேந்திர யாதவ் எழுதிய 'தி ஹிந்து' கட்டுரையில்(ஒன்று | இரண்டு) :

" A rational and dispassionate analysis of this issue must begin with the one crucial fact that is undisputed by either side — the overwhelming dominance of upper castes in higher and especially professional education.

Although undisputed, this fact is not easy to establish, especially in the case of our elite institutions, which have always been adamant about refusing to reveal information on the caste composition of their students and faculty. "

என்கிறார்கள்!

என் கேள்விகள்/ ஐயங்கள் :

1. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் / நிர்வாகிகள் - போன்றோரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிய கணக்கெடுப்பைச் செய்வது அத்தனை கடினமானதா? - ஆம் என்றால் அதற்குக் காரணங்கள் என்ன?

2. அமைச்சர்கள் ஊழல், ரகசிய ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறுதல், எம்பிக்களின் ஊழல், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் - போன்ற எத்தனையோ - "கடினமான" விஷயங்கள் தொழில்நுட்பத்தினால் சாத்தியமாகி இருக்கும் போது - இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களின் இருப்போர் பற்றிய Social data-வை ஒரு "Mission Ekalavya (Ekalaivan!)" செய்து - எல்லாத் தகவல்களையும் ஒரு மாதத்துக்குள் பெற்று விட முடியாதா? (Legally or illegally - thru 'sting' operations!) - இதற்கெல்லாம் Ethan Hunt மாதிரி Undercover agent வேண்டுமா என்ன?

3. ஒரு 'வெளிப்படையான கொள்கையின்' அடிப்படையில் "இட ஒதுக்கீடு" கொண்டு வர வேண்டும் என்று அலம்பல் செய்யும் அறிவுஜீவிகள் - Why are they not Demanding that such Socially vital data about Higher educational Institutions be made public after collecting it thoroughly?

இதிலே என்ன ராணுவ ரகசியம் வேண்டிக்கிடக்கு?


4. "Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறார்கள்; அப்படியானால் - இந்த விஷயத்தில் ஒரு PIL போட்டு - உடனே எல்ல உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வகுப்புவாரியான ஆசிரியர் மாணவர் பிரதிநிதித்துவம் என்ன? அவர்கள் நிறுவனத்தில் - என்பதை வெளியிட வேண்டும் - என்று உச்ச/உயர் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாதா?


இனிமேல், "மிலிடெண்ட் சமூகநீதியாளர்" ஆக இருந்தாலே ஒழிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தப் பார்ப்பனீய அரசாங்க இயந்திர இந்தியாவில் விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

எனவே, "நவீனயுக ஏகலைவர்கள்" கட்டைவிரலைக் கொடுப்பவர்களாக இல்லாமல் - தங்கள் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கும் அதிகார வெறிபிடித்த சனாதனக் கரங்களை ஒடிக்கிற வீரர்களாக மாறவேண்டும் - என்பது காலத்தின் கட்டாயம்.

20 May 2006

பெரியாரின் கடைசிக் கண்ணீர்!

" நான் 'சூத்திரன்' என்கிற இழிவு நீங்க வேறு வழி என்ன? நான் பிறக்கிறதற்கு முன்னேயே 'சூத்திரர்கள்' நீங்கள். நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன். அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? நானும் போய் விட்டேனென்றால் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஆள் எங்கே?

நானாக இருக்கிறதனாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுவான்"


- என்று பெரியார் கண்ணீர் விட்டார்.

18 May 2006

இட ஒதுக்கீடும், 'ரவி ஸ்ரீநிவாஸின்' கட்டுடைப்பும்

இத்தனை நாள்வரை மிகக் குறைந்த படசம் 'பரந்த நோக்கும் சமூகப் பார்வையும்' உள்ளவர் ரவி ஸ்ரீநிவாஸ் - என்கிற ('மாயை'யை யாவது ரவியிடம் எதிர்பார்க்கலாம் என்கிற) 'ரோசா வசந்த்'தின் கூற்றைப் போலவே நானும் நம்பியிருந்தேன். இப்போது ரவியே தன்னைக் 'கட்டுடைத்து' கொள்கிறார்.

>> இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். >> என்றெல்லாம் பொச்சரிப்பு பொழிகிறார் ரவி!

இதை விடவும் அயோக்கியத்தனமாக மேல்சாதித்தனத்துடன் - இன்னும் சொல்லப்போனால் "பாப்பாரத்தனமாக" இந்த விஷயத்தைத் திரிக்க முடியாது.

"மெரிட்" என்கிற எச்சித்தனமான மாயையான சங்கதியை - இன்று 'காஞ்சா இலையா' போன்ற சமூக நீதி அறிஞர்கள் 'கட்டுடைத்துக்' கொண்டிருக்கும் வேளையில் - தங்களின் புரட்டுத்தனமான மேல்சாதித்தனமான 'மெரிட் வாதம்' - சமூகத் தளங்களில் அவற்றால் ஏற்பட்ட சமூகப் பங்களிப்பு என்ன என்கிற கறாரான எடைபோடப்பட்டுத் தோலுரிக்கப்படுவதைப் பொறுக்க முடியாத மனுவாதிகள் (இன்றைய சூழலில் பார்ப்பன - பனியா கூட்டணி மயிரான்கள்) - 'இட ஒதுக்கீட்டை' கட்டுடைத்துவிட்டதாக ஊளையிடலாம்.

அந்த கோஷ்டியிலே சேர்ந்து கொள்ளும் "Political Correctness" (அதாவது அவாள்களுக்கு)
இப்பொது ரவியிடம் தொற்றிக் கொண்டு விட்டது. இது குறித்து விசனப்பட வேண்டியதில்லை!

சமூக நீதி என்பது இவர்களின் "இருப்பை" கேள்விக்குள்ளாக்காமல், 'பீடத்தைப்' பெயர்க்காமல் நடக்கும் வரை அதன் நலம்விரும்பிகளாக வேடம் தரிக்க இவர்களால் நன்றாகவே இயல்கிறது.

தங்கள் சமூக அதிகாரத்தின் அடிவேராக இருக்கும் Intellectual Leadership மாயைக்கே வேட்டு வைக்கிற நடவடிக்கை என்றதும் இந்த ஜெண்டில்மேன்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிடும்!

உழைக்கும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய அரசும், தேசமும் - அவர்களின்
பெருவாரியான ரத்தம், வேர்வை, கண்ணீர் - இதன் மீதாகக் கட்டப்பட்ட அரசாங்க நிதியத்தின்
மூலம் நடத்தப்படுகிற மேற்கல்வி நிறுவனங்களின் எஜமானர்களாக மட்டும் இவாள்களே
இருப்பார்களாம்! உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஒருபயனும் இருக்காதென்கிற 'வேத விதியை' கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!

சென்னை ஐஐடி-யில் எப்படி மேல்வகுப்பார் - "சூத்திரர்" களை நடத்துகிறார்கள், மற்ற
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி பேராசிரியர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக பேராசிரியை வசந்தா கந்தசாமியின் உதாரணத்தை ரவியின் முந்தைய இட ஒதுக்கீட்டுப் பதிவில்
சொல்லியிருந்தேன். அதற்கு - ஒரே ஒரு உதாரணம் போதாது என்று புறந்தள்ளிப் பேசிவிட்டார். உண்மையில் வசந்தாவின் இ-மெயிலுக்கு ஒரு மடல் அனுப்பி முயற்சி செய்துவிட்டுப் பிறகு ஐஐடி-யின் மேல்சாதித் திமிர்த்தனம் பற்றி இவர் புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்திருக்கலாம்!

உயர்கல்வி நிறுவனங்கள் 'பெரியார் பூமி'யிலேயே இப்படி நடக்கும் என்றால் வட இந்தியாவில்?!!!

இவர்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை நாய்களாகவும், புழுக்களாகவும் நடத்துவார்களாம்; ஆனால், இந்தியாவில் இவர்களின் மேலாதிக்கத்தை மட்டும் சாமரம் வீசி பாதுகாக்க வேண்டுமாம்!

அடச்சீ! இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம் வெட்கமாய் இல்லை?

சிங்கப்பூரிலும் - கொரியாவிலும் ஐஐஎம் கிளைகளை அமைத்தே தீரவேண்டும் - அங்கெல்லாம் நம்முடைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி பன்னாட்டு வணிக அறிவுசால் வல்லமை பெறவேன்ண்டும் என்றெல்லாம் - இந்த மேலாதிக்க எஜமானர்கள் கொஞ்சம் நாள் முன்பு கூட பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஐஐஎம் என்பது ஒரு சிறப்பான Brand-ஆம்; அதை உலகம் முழுக்கப் பரப்புவார்களாம்!

அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியதே - குப்பனும், சுப்பனும் வரி கட்டி - வாக்களித்து உருவாக்கிய அரசாங்கமும், அரசும் தானே - அவர்களுக்கு இந்த 'மேட்டுக் குடி' நிறுவனங்கள் என்ன செய்து கிழித்து விட்டன?

>> இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து
கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட
ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். >> - என்கிறார் ரவி..

கொஞ்சம் நாள் முன்பு பார்ப்பனர்களும், தலித்துகளும் சேர்ந்து சமூக தளத்தில் செயல்பட
வேண்டும் - பிற்பட்ட வகுப்பாரை எதிர்த்து; ஏனெனில் அதுவே இப்போதைய இயற்கையான
சூழ்நிலை - என்றெல்லாம் நயவஞ்சகப் பரப்புரை செய்து கொண்டிருந்தார் ரவி. அதைக் கூட ஒரு அரசியல் கருத்து என்று அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்; ஆனால், இப்போது இவர் பேசுவது முழுக்க முழுக்க பார்ப்பனிய, உயர்சாதிய சிந்தனையின் பாற் பட்ட அரசியலே.

அதனால்தான், சமூக நீதி என்கிற உயரிய கருத்தாக்கத்தையும் 'கட்டுடைக்க' துணிச்சலோடு
வந்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியலே மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி - வேலை வாய்ப்புக்கான சமூக நீதி இட ஒதுக்கீடு குறித்துத்தான் எழுந்தது. அதத்தான் அவர் இப்போதும் பேசுகிறார்; செயல்படுகிறார் - அதை ரவி 'பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக

காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சி' என்று சேறு வாரி இறைப்பது - அயோக்கியத்தனமான பேச்சாகவே தோன்றுகிறது.

கலைஞரும் இதைப்போல கருத்தைத்தான் நேற்று - திருவாரூரில் பேசியுள்ளார்; கலைஞருக்கும் 'ரேசிஸ்ட்' முத்திரையை (இரண்டாம் முறையாக) குத்துவதற்கு ரவிக்கு ஒரு வாய்ப்பு எனக் கருதிக் கொள்ளலாம் போல!

'தி ஹிந்துவிலே' வியாழன் அன்று (18/5/06) வெளிவந்திருக்கும் "OBC Quota: stirring wider issues" என்கிற கட்டுரையைப் பற்றி "இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது" என்கிறார் ரவி.

OBC மக்கள் தங்களுக்கு 27% தரப்படும் வரை - எந்த மேல்சாதிக்காரனும் படிக்கவோ, வேலை செய்யவோ கூடாது என்றொரு கடும் போராட்டத்தை முன்னெடுக்கத்தான் ரவி போன்றவர்களின் எதேச்சதிகாரக் கருத்துக்கள் தூண்டும்.

>> எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். >> - என்று மேலும் மேலும் தன்னையே முரண்படுத்திக் கொள்கிறார்.

நாடு தழுவிய விவாதம் செய்ய எங்கே விட்டர்கள் மேல்சாதி ஜெண்டில்மேன்கள்?

"தேர்தல் முடிவு வரட்டும்; பிறகு பேசுவோம் - ஏனெனில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது" என்று அர்ஜுன் சிங் சொன்னபிறகும் - இஷ்டத்துக்கு நினைத்த போது போராட்டம், வேலை நிறுத்தம், பிரதமர் வீடு நோக்கிப் படையெடுப்பு - என்கிற காட்டுமிராண்டித்தனமான அராஜகத்தைச் செய்தது யார்? ரவி பாதுக்காக்கும் அதே மேல்சாதி மாணவர்கள்... டாக்டர்கள்தாம்!

தமிழக அரசு ஊழியர் போராட்டம் அவர்களுடைய வாழ்வுரிமை பற்றியது; அதுவும் அரசு ஊழியர் தெளிவாக கோரிக்கைகள், அறிக்கைகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்ட்ங்கள், பேச்சுவார்த்தைக்கான முறையீடுகள் - என எல்லா சனநாயக் முறைகளையும் செய்து பிறகு ஸ்டிரைக் பற்றிய முன்னறிவிப்பு கொடுத்து - பிறகுதான் வேலை நிறுத்தம் செய்தார்கள். (அப்போதும் கூட டாக்டர்கள், நர்சுகள் அந்த அரசு ஊழியர் போராட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது).

அந்தப் போராட்டத்துடன் - இப்போதைய மேல்சாதி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் டில்லியில் Unannounced Flash Strike நடத்தும் திமிர்த்தனத்தோடு ஒப்பிடுகிறார் ரவி. இவருடைய நேர்மை இத்தனை கீழ்த்தரமாக எழுதுமளவு இறங்கும் என்று இதுவரை நான் கருதியதில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுடைக்கப்பட்டிருக்கிறார்; அதையும் மற்றவருக்கு விட்டு வைக்காமல் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி.

15 May 2006

கணக்குப் புலிகள்!

தி.மு.க-வின் வெற்றியைப் பொறுக்க முடியாத 'பரம்பரைப் பகை' தொடர்ந்து விஷம் கக்கி வருவது தெரிந்ததே! நம் பகைவருக்கு கணக்குச் சொல்லித் தரும் தேர்தல் அலசல் இதோ!

(சும்மா இருக்கலாம்னு பாத்தாலும் 'பகை' விடமாட்டேங்கிதேப்பா! ;) )

06 May 2006

சிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு!

மயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அது குறித்த மேலதிக தகவல்களை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நூற்றாண்டு காலத்தின் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு என தொல்லியல் அறிஞர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இது பற்றி ஏற்கெனவே செய்தி.நெட் -இல் எழுதப்பட்டாகிவிட்டது.

முத்து (தமிழினி)யும் பதிவு செய்திருக்கிறார்.

தொல்லியல்/இந்தியவியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் முதலான தொல்லியலாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, இக்கல்வெட்டின் காலம் ஏறக்குறைய கி.மு. 2000 முதல் கி.மு 1000 -க்குள் எனக் கருதுகிறார்கள்.

சற்றேறக்குறைய கி.மு. 1500 வாக்கில் இக்கல்வெட்டில் காணப்படும் சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் வடிக்கப்பட்டிருக்கக் கூடும் என முதனிலை ஆய்வு கூறுவதாகத் தெரிகிறது.

தென்னகத்தில், கி.மு. 1500 வாக்கில் சிந்துசமவெளி எழுத்துக்கள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பது மாபெரும் நிகழ்வு ஆகும். இவ்வெழுத்துக்கள் திராவிட மொழி வகையினதாக இருப்பதும், அதன் மூலம் சிந்து சமவெளி திராவிட நாகரிகமானது என்பதும், தென்னகமும்-சிந்து சமவெளியும் உறவு பூண்டிருந்ததும் - பல வருடங்களாக திராவிட வரலாற்றாசிரியர்கள் தெரிவித்து வந்திருக்கும் கருதுகோள்களை நிறுவப் பெரிதும் பயன்படும்!

இக்கல்வெட்டு தமிழகத்தின் தொன்மையான காலத்திய படைப்புத்தான் என்றும், ஹரப்பா போன்ற சிந்துவெளி நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டு அன்று என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன். இதன் மூலம், பண்டைய சிந்துவெளி - தமிழக திராவிட நாகரீகங்களின் உறவு புலப்படுகிறது.

பிந்தைய தமிழ் பிரம்மி வகைக்கும் ஆதியான வடிவமாக இக்கல்வெட்டின் எழுத்துவடிவம் விளங்குவது இதன் தொன்மையையும், சிந்துவெளியின் திராவிட இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

என்னுடைய முந்திய பதிவுகளில் ஒன்றான ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம் பதிவில் கூறப்பட்டிருக்கும் கருதுகோள்களை மேலும் வலுச்சேர்க்கும் விதமாக இப்போதைய கல்வெட்டு கண்டுபிடிப்பு அமைந்துள்ளது!

இதன் வரலாற்று முக்கியத்துவம் நம்மவருக்கே இன்னும் சரியாக விளங்கவில்லை! வந்தேறிகளும், அவர்தம் வழிவந்தாரும் இக்கண்டுபிடிப்பின் உண்மையையும், முக்கியத்துவத்தையும் குறைத்துச் சொல்வதில் ஒன்றும் வியப்பு இல்லை! :)

'குதிரை விளையாட்டாளர்' என்.எஸ். ராஜாராம் என்கிற இந்துத்துவ வெறியர் ஹிந்துவுக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் - இம்மாதிரியான சிந்துவெளி எழுத்துக்கள் பாரசீகத்திலும் (இப்போதைய ஈரான், ஈராக் பகுதிகள்) கிடைத்துள்ளன என்று கம்பு சுத்தியிருக்கிறார்!

ஆனால், அவர் சொல்வது சிந்துவெளி வணிகர்கள் பண்டைய Elamite, Mesopotomian நாகரீகங்களுடன் வைத்திருந்த வணிக உறவின் மூலமாக சிந்துவெளியிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்ட ஓடுகள், கல்வெட்டுப் பொருட்கள் முதலானவை.

ஆனால், இப்போது மயிலாடுதுறையில் கிடைத்திருப்பது - இங்கேயே தமிழகத்திலேயே சிந்துவெளி எழுத்துக்களால் (திராவிட மொழி வகையினம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்ற) பொறிக்கப்பட்ட கல்வெட்டு!

இது இனி நிகழப்போகும் மாபெரும் வரலாற்றின் மீட்டெடுப்புக்கான முதல் துளி என்று சிலாகிப்பதற்கு நிறையவே காரணமிருக்கின்றது.

என்னுடைய ஆதிச்சநல்லூர் பதிவில் நான் இட்ட (ஆங்கிலப்) பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் படித்தால் - இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் மேலும் விளங்கும்! ;)

ஒவ்வொன்றாக 'வரலாற்றின் உண்மைகள்' தெளிய ஆரம்பித்திருப்பது தமிழருக்கு/திராவிட இன ஆய்வாளருக்கு மகிழ்ச்சியான செய்தியே!

Dravidians shall keep their 'Tryst with Destiny'!

( இது குறித்து மேலும் கிடைக்கக் கூடிய புதிய தகவல்களை இங்கேயே சேர்க்க நினைத்துள்ளேன்)



பி.கு:

கலைஞர் 4/5/2006 அன்று இந்தக் கல்வெட்டு குறித்த செய்தியை தீவுத்திடல் கூட்டத்தில் பிரதமர் முன்பாகப் பேசிய பேச்சில் குறிப்பிட்டு பெருமிதமாகச் சொன்னார்! :)