21 April 2006

கமல்ஹாசனுக்கு அதிமுக மிரட்டல்?

நேற்று கலைஞர் தூத்துக்குடியில் பேட்டியளிக்கும்போது, ஒரு பிரபல நடிகருக்கு அதிமுக 100 கோடி ரூபாய் தருவதாகவும், அதை வாங்கிக் கொண்டு அதிமுக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும்படியும் வியாபார பேரம் போல் பேசியதாகவும் - ஆனால் அந்த நடிகர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நடிகர் யார் என்பதை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை கலைஞர்.

இன்றைய ((ஏப்.21) தினகரனில் - அது கமல்ஹாசன்தான் என்றும், அவர் 100 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளவோ, மருதநாயகத்துக்கு பண உதவி - இன்னபிற உதவிகளை செய்வதாக அதிமுக சார்பில் பேசிய (சசிகலா) நடராஜனின் பேரத்தை அடியோடு மறுத்து விட்டதாகவும் - செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து கமல் மறுத்ததால் அழுத்தமாக மிரட்டல் தொனியில் வற்புறுத்தல்கள் வந்திருக்கின்றன. இதனால் கமல் 20 ஆம் தேதி இரவே அமேரிக்கா சென்றுவிட்டார் என்றும் செய்தி வந்துள்ளது.

கமலையே 'விலைக்கு வாங்க' நடந்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளின் முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானால்
...... 'டாக்டர் கோவூர்' விருது பெற்ற பகுத்தறிவாளர் கமல் - இது போன்ற குதிரை வியாபாரங்களுக்கு விலைபோக மாட்டார் என்று நான் நம்புகிறேன். இப்படி விலை போய்த்தான் 'மருதநாயகம்' எடுக்க வேண்டுமென்றால் அந்தப் படமே தேவையில்லை.

மேலும் நம்முடைய நாராயணன(உருப்படாதது) அவர்கள் முன்பு எழுதியது போல - வெளிநாட்டு பட நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டியாவது அவர் அந்த உன்னதப் படைப்பைச் செய்யட்டும். இந்த தமிழின விரோதிகளிடம் அவர் தன் பெருமையை இழக்காதிருக்கட்டும்.

இம்மாதிரியாகக் கேவலமாக அவரை விலை பேசிய கும்பலுக்கு தேர்தலுக்குப் பின் உரிய விளைவுகளைச் சந்திக்கிற நிலை வரத்தான் போகிறது.

6 comments:

Anonymous said...

Please visit this

http://www.aaraamthinai.com/arasiyal/states/2006/apr21state.asp

Till today i was not aware of this...

ஜோ / Joe said...

கமல் பனங்காட்டு நரி.இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டார்.

Bharaniru_balraj said...

கமல் என்கிற மாபெரும் நடிகனை கேவலப்படுத்துகிறார்கள். ஒரு வேளை மருதநாயகம் படம் எடுக்க பணம் தேவை என்றால் தமிழர்கள் ஆளுக்கு 10 ரூபாய் கொடுக்கலாம். ஆஸ்கர் நாயகனை அரசியல்வதிகள் தொந்தரவு செய்ய வேண்டாம்.

neo said...

எத்தனை கோடி ரூபாய் பணத்தை வேண்டுமானாலும் வாரி இறைத்துத் தேர்தலில் வெற்றி பெற இந்தக் காட்டுமிராண்டி மும்பல் தயாராக இருப்பதையே கமலுக்கு விடப்பட்ட மிரட்டல் காட்டுகிறது.

மேலும் கார்த்திக்கின் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரும் தற்கொலை செய்தி இறந்துவிட்ட செய்தியும் வந்திருகிறது.

இங்கே தமிழ்மணத்தில் அது பற்றி எந்தச் செய்தியும் வாசிக்க முடியவில்லை.

காங்கிரஸ் மேல்நிலைப் படிப்புகளில் இட ஒதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு அறிவித்தபின்னர் - பார்ப்பனீய சக்திகள் தமிழகத்திலும், இந்த தமிழ்மணத்திலும் - திமுக கூட்டணி பற்றிய அவத்தூறுகளையும், அதிமுக கூட்டணிக்கு அதிக ஆதரவு தந்தும் - படு கேவலமாக எழுதி வருவது நன்றாகவே தெரிகிறது.

இதைக் கூடப் புரிந்து கொள்ளத் துப்புக் கெட்ட சிலர் 'நடுநிலைவாதி' பெயர் பெறுவதற்கு எத்தனை பாடுபடுகிறார்கள் எனப் பார்க்கையில் சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை.

பணநாயக, சனநாயக விரோத, தமிழின விரோத பார்ப்பனீய அதிமுக வீழந்தாலே ஒழிய தமிழினத்துக்கு விடிவில்லை.

neo said...

ஜோ - உண்மைதான்! நமக்குத் தெரிந்ததுதானே! கமல் இந்த 'கொள்ளைக்காரர்களுக்கு' பயப்படப் போவதில்லை. :)

பரணி - கருத்துக்கு நன்றி :)

Devana said...

அது கமலின் நேர்மையைத்தான் காட்டுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் கமலுக்கு உங்களது ஆதரவு இருக்காது. ஏனெனில் அவர் ஆதரவு அப்படியே கேட்டால் அவர் பார்ப்பான் என்று சொல்லி நீங்கள் மறுப்பீர்கள்.