06 May 2006

சிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு!

மயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அது குறித்த மேலதிக தகவல்களை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நூற்றாண்டு காலத்தின் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு என தொல்லியல் அறிஞர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இது பற்றி ஏற்கெனவே செய்தி.நெட் -இல் எழுதப்பட்டாகிவிட்டது.

முத்து (தமிழினி)யும் பதிவு செய்திருக்கிறார்.

தொல்லியல்/இந்தியவியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் முதலான தொல்லியலாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, இக்கல்வெட்டின் காலம் ஏறக்குறைய கி.மு. 2000 முதல் கி.மு 1000 -க்குள் எனக் கருதுகிறார்கள்.

சற்றேறக்குறைய கி.மு. 1500 வாக்கில் இக்கல்வெட்டில் காணப்படும் சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் வடிக்கப்பட்டிருக்கக் கூடும் என முதனிலை ஆய்வு கூறுவதாகத் தெரிகிறது.

தென்னகத்தில், கி.மு. 1500 வாக்கில் சிந்துசமவெளி எழுத்துக்கள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பது மாபெரும் நிகழ்வு ஆகும். இவ்வெழுத்துக்கள் திராவிட மொழி வகையினதாக இருப்பதும், அதன் மூலம் சிந்து சமவெளி திராவிட நாகரிகமானது என்பதும், தென்னகமும்-சிந்து சமவெளியும் உறவு பூண்டிருந்ததும் - பல வருடங்களாக திராவிட வரலாற்றாசிரியர்கள் தெரிவித்து வந்திருக்கும் கருதுகோள்களை நிறுவப் பெரிதும் பயன்படும்!

இக்கல்வெட்டு தமிழகத்தின் தொன்மையான காலத்திய படைப்புத்தான் என்றும், ஹரப்பா போன்ற சிந்துவெளி நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டு அன்று என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன். இதன் மூலம், பண்டைய சிந்துவெளி - தமிழக திராவிட நாகரீகங்களின் உறவு புலப்படுகிறது.

பிந்தைய தமிழ் பிரம்மி வகைக்கும் ஆதியான வடிவமாக இக்கல்வெட்டின் எழுத்துவடிவம் விளங்குவது இதன் தொன்மையையும், சிந்துவெளியின் திராவிட இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

என்னுடைய முந்திய பதிவுகளில் ஒன்றான ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம் பதிவில் கூறப்பட்டிருக்கும் கருதுகோள்களை மேலும் வலுச்சேர்க்கும் விதமாக இப்போதைய கல்வெட்டு கண்டுபிடிப்பு அமைந்துள்ளது!

இதன் வரலாற்று முக்கியத்துவம் நம்மவருக்கே இன்னும் சரியாக விளங்கவில்லை! வந்தேறிகளும், அவர்தம் வழிவந்தாரும் இக்கண்டுபிடிப்பின் உண்மையையும், முக்கியத்துவத்தையும் குறைத்துச் சொல்வதில் ஒன்றும் வியப்பு இல்லை! :)

'குதிரை விளையாட்டாளர்' என்.எஸ். ராஜாராம் என்கிற இந்துத்துவ வெறியர் ஹிந்துவுக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் - இம்மாதிரியான சிந்துவெளி எழுத்துக்கள் பாரசீகத்திலும் (இப்போதைய ஈரான், ஈராக் பகுதிகள்) கிடைத்துள்ளன என்று கம்பு சுத்தியிருக்கிறார்!

ஆனால், அவர் சொல்வது சிந்துவெளி வணிகர்கள் பண்டைய Elamite, Mesopotomian நாகரீகங்களுடன் வைத்திருந்த வணிக உறவின் மூலமாக சிந்துவெளியிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்ட ஓடுகள், கல்வெட்டுப் பொருட்கள் முதலானவை.

ஆனால், இப்போது மயிலாடுதுறையில் கிடைத்திருப்பது - இங்கேயே தமிழகத்திலேயே சிந்துவெளி எழுத்துக்களால் (திராவிட மொழி வகையினம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்ற) பொறிக்கப்பட்ட கல்வெட்டு!

இது இனி நிகழப்போகும் மாபெரும் வரலாற்றின் மீட்டெடுப்புக்கான முதல் துளி என்று சிலாகிப்பதற்கு நிறையவே காரணமிருக்கின்றது.

என்னுடைய ஆதிச்சநல்லூர் பதிவில் நான் இட்ட (ஆங்கிலப்) பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் படித்தால் - இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் மேலும் விளங்கும்! ;)

ஒவ்வொன்றாக 'வரலாற்றின் உண்மைகள்' தெளிய ஆரம்பித்திருப்பது தமிழருக்கு/திராவிட இன ஆய்வாளருக்கு மகிழ்ச்சியான செய்தியே!

Dravidians shall keep their 'Tryst with Destiny'!

( இது குறித்து மேலும் கிடைக்கக் கூடிய புதிய தகவல்களை இங்கேயே சேர்க்க நினைத்துள்ளேன்)



பி.கு:

கலைஞர் 4/5/2006 அன்று இந்தக் கல்வெட்டு குறித்த செய்தியை தீவுத்திடல் கூட்டத்தில் பிரதமர் முன்பாகப் பேசிய பேச்சில் குறிப்பிட்டு பெருமிதமாகச் சொன்னார்! :)

15 comments:

மாயவரத்தான் said...

//வந்தேறிகளும், அவர்தம் வழிவந்தாரும் இக்கண்டுபிடிப்பின் உண்மையையும், முக்கியத்துவத்தையும் குறைத்துச் சொல்வதில் ஒன்றும் வியப்பு இல்லை! :) //

ஹிந்து பத்திரிகையையும், ஐராவதம் மகாதேவனையுமா சொல்கிறீர்கள்?!

நியோ / neo said...

ஐராவதம் மகாதேவன் அவர்கள் குறித்துக் கூடுதல் தகவல் பெற இந்த வலைப்பக்கம் உதவக்கூடும்.

நியோ / neo said...

>> ஹிந்து பத்திரிகையையும், ஐராவதம் மகாதேவனையுமா சொல்கிறீர்கள்?! >>


முதுகுசொறிதல் 1:

"பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..."

முதுகுசொறிதல் 2:

"....பேராசைக்காரனடா பார்ப்பான்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்.....

........
........
........

...பாயும் கடிநாய்ப் போலிசுக்காரப் பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு...."

("மறவன் பாட்டு" கவிதையிலிருந்து)

முதுகுசொறிதல் 3:

"சூத்திரனுக்கொரு நீதி
தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி
என்று சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சதி என்றும் கண்டோம் "

(சொறிந்தவர்: 'மகாகவி' சுப்பிரமணிய அய்யர் என்கிற பாரதியார்)

பி.கு :

உமக்கு சில விஷயம் புரியவில்லை என்றால் ஒன்றும் குற்றமில்லை! ;) - ஆனால் ரவி ஸ்ரீநிவாஸ்-க்கு புரிய மாட்டேன் என்கிறதே எனும்போதுதான் பெருமூச்சு வருகிறது ;(

Anonymous said...

தம்பி,
திராவிடர்கள் - ஆப்ரிக்கவில்லிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்பதை மட்டும் நன்றாக மறந்துவிடு...

ஏனென்றால் நமக்கு வேண்டியதெல்லாம் சிருபான்மையரை ஓரங்கட்டி ஓட்டு வாங்கவேண்டும் அவ்வளவுதானே...

ரொம்ப நாளைக்கு இந்த பாச்சா பலிக்காது என்றாலும், முடிந்தவரை மிளகாய் அரைப்போமே!

Anonymous said...

நியோ,

மிக நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

//ஹிந்து பத்திரிகையையும், ஐராவதம் மகாதேவனையுமா சொல்கிறீர்கள்?! //

நானறிந்த வரையில், திரு.ஐராவதம் மகாதேவன் ஒரு நேர்மையான வரலாற்றறிஞர். சிந்துவெளி நாகரிகம் மற்றும் பிராமி எழுத்துமுறை தொடர்பான ஆய்வுகளில் பிதாமகர் என்று சொல்லலாம். இன்றுள்ள அனைத்து ஆய்வாளர்களாலும், ஜாதி, இன வித்தியாசமின்றி, 'பிராமி ஆய்வுகளின் தந்தை' எனப் புகழப்படுபவர். போலி வாதங்கள் செய்பவரல்ல. ஜாதிவேறுபாடு பார்க்காத இவருக்குத் தேவையில்லாமல் ஜாதிச்சாயம் பூசவேண்டாம்.

நன்றி
கமல்
www.varalaaru.com

Anonymous said...

ஆனால் ரவி ஸ்ரீநிவாஸ்-க்கு புரிய மாட்டேன் என்கிறதே எனும்போதுதான் பெருமூச்சு வருகிறது ;(

ரவி சீனீவாசன் புரிந்தாலும் புரியாதது போல் வலைபதிவுகளில் எழுதுகிறாரோ.

வஜ்ரா said...

சிந்து சம வெளி நாகரீகம் தமிழகத்திலும் பரவி இருந்தத்தை தவிர அது, ஆரிய வந்தேரிகள் நாகரீகம், திராவிட பூர்வீகக் குடிகள் நாகரீகம் என்று எதையும் அந்த கண்டுபிடிப்பு சொல்லவில்லை. தேவையில்லாமல் இதனூடே அரசியலைச் சேர்க்க வேண்டாம்.

அதை "ஹிந்துத்வா" ஆராய்ச்சியாளார் என்று நீங்கள் கூறுகிற ராஜாராம், குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக தொடரும் சிந்து சமவெளி நாகரீகத்தின் வெளிப்பாடாகத்தான் இதனை கருதியிருக்கிறார்.

அவர் கூறி இருப்பதைப் பார்க்க.
//
The discovery of a stone axe with signs found on the Indus Valley seals is certainly significant, but we need to exercise caution and not jump to hasty conclusions. To begin with, similar signs have been found in caves in Kodumalai in Tamil Nadu and in Anakodai in Jaffna (Sri Lanka).

Mr. Mahadevan's claim that the language of the Indus Valley was Dravidian because he reads a Tamil sounding word (Murukan) in these four signs is far-fetched. It is an opinion that is not supported by any methodology. One can similarly claim that Ashoka's Brahmi inscriptions are in Tamil because early Tamil used a version of Brahmi. All we can say at this time is that the Indus Valley people had connections with the south, just as they did with West Asia, where too examples of Indus writing have been found.

N.S. Rajaram,
Bangalore
//

வந்தேரி ஆரியர்கள் என்ற கண்ணோட்டமே கேள்விக்குறியாக இருக்கும் இந்த வேளையில், இது போல் இன வாதம் பேசி துவேஷத்தை வளார்ப்பது தவறு.

ஷங்கர்.

வெற்றி said...

நியோ,
தகவலுக்கு நன்றிகள்.

//அது குறித்த மேலதிக தகவல்களை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்.
//

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

---வந்தேரி ஆரியர்கள் என்ற கண்ணோட்டமே கேள்விக்குறியாக இருக்கும் இந்த வேளையில், இது போல் இன வாதம் பேசி துவேஷத்தை வளார்ப்பது தவறு.---

சங்கரநாராயணன்: ஐராவதம் மகாதேவனுக்குப் பிராமண முத்திரை குத்த சீலைத் தூக்கிக்கொண்டு வரும் முதல் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா? பிராமண எதிர்ப்புக்கும் பிராமணீய எதிர்ப்புக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியவில்லையென்றால் யார் என்ன செய்யமுடியும்? எதிர்ப்பவர்கள் எதை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள்.

என்.எஸ்.ராஜாராம் - ஹா ஹா ஹா!!

Anonymous said...

என்.எஸ்.ராஜாராம் = ஹா ஹா ஹா

http://www.hinduonnet.com/fline/fl1720/17200040.htm

Anonymous said...

பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் நியோ வந்தேறிகள் என்று உளரலாம் தப்பில்லை. அப்படியெனில் ஐரவதம் மகாதேவனும், ஹிந்து பத்திரிகையும் என்ன என்ற கேள்விக்கு பதில் வராது. பாரதியார் அப்போது மட்டும் ஒப்புக் கொள்ளப்படுவார். நல்ல எண்ணம்டா சாமி.

Anonymous said...

Historians and experts in archeology do not jump to conclusions on the basis of a single finding or excavation.
But those who think that they
know everything in history
will jump to conclusions and
end up in writing nonsense.
They have no sense of history.

Anonymous said...

முதலாவதாக, ராஜாராம் ஒரு ஃப்ராடு பேர்வழி. ஒரு முறை அல்ல, பல முறை அவரது புரட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்துத்வா கொள்கையை தூக்கிப்பிடிக்க, ஏமாற்று வழியில் சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சியில் குட்டையை குழப்பியவர். இதன் மூலம் பலரது பொன்னான நேரத்தை வீணாக்கியவர். எவ்வித (ஆரிய - திராவிட) உள்நோக்கமில்லாமல் செயல்பட்ட ஆராய்ச்சியை திசை திருப்பியவர்.

ராஜாராமை துணைக்கு இழுப்பது, ஆரியவாதம் பேசி துவேஷத்தை வளர்க்கத்தான் உதவும்.

- குகன்

Anonymous said...

இந்த கண்டுபிடிப்பு, மற்றும் இதன் ஆராய்ச்சியை திசை திருப்ப முயலும் ராஜாராம் போன்ற ஆரியவாதிகளை கண்டுக்கொள்ளுங்கள் என்றுதான் நியோ எச்சரிக்கிறார்.

இதை உணர மறுக்கும் சிலருக்கு நெஞ்சு குறுகுறுத்தால் என்ன செய்வது? மகாதேவனை சிறுமைப் படுத்தி இங்கு சொறிந்துகொள்கிறார்கள். ஐராவதம் மகாதேவனின் உழைப்பு மகத்தானது/நிகரற்றது. அவரது பதிவுகளை படித்தால் இதை அறியலாம். உங்கள் கீழ்த்தரமான சண்டையில் அவர் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள்.

- குகன்

Anonymous said...

I read this article with great interest. First of all let us compare both aryan and dravidian civilizations:

Indus valley civilization depended on CLAY and clay related articles where as invaded ARYANS did not even have a word for CLAY in their so called VEDAS. ARYANS relied on horses but indus valley dravidians did not know of horses until aryans invaded them.

With above examples, how one can argue that sanskritists built such towering buildings and houses. As we all know and even the HINDUTVA idealogues, that DRAVIDIANS are the builders of this society and ARYANS copied everything from them. But to keep us under their control, they roll all these fraudulent lies.

There was a quote by Charlatan NS Rajaram about indus inscriptions of Jiroft [how many times the historical world busted his ass. Still he keeps boasting about his own unacceptable, offensive and mendacious theories. Can he show an example of Sanskrit inscription before 150 AD. Even if we consider his phony ideas, why did the VEDAS not written in this script. Why the early satpatabrahmanas and others followed entirely different scripts of Kharoshti and persian. Can he also show examples of pre historical Sanskrit inscriptions found in any parts of world due to overseas trade. Most of the inscriptions found abroad [Egypt, Sembiran, Indonesia, etc] are classical Tamil Brahmi inscriptions found on pot sherds. This clearly shows that tamils are not only the inheritors of indus culture and excelled in ancient overseas trade and brought wealth to this part of the world.

There was another quote by Michel Danino about the recent finding of Mayilduthurai script. According to him, these axes might have been left behind by some traders of indus valley. But according to experts, the stone used in this axe was of peninsular origin. So the question of "imported story" created by genius MICHEL DANINO is a fiasco.

Special advise to MICHEL DANINO: You came on a mission to Pondicherry Aurobindo Ashram. Where did you get filthy ideas of creating a story on vedic roots of tamil culture. If we retrace the ancient poems of Sangam Literature Men and Women considered equal. But according to vedic culture women were not given importance. They followed Varna system. But in Sangam poems no such evidences could be found. People were segregated according to their trade and industry and all of them lived amicably with real dignity. The term Parayar derived from Paravar. Look at the fate of parayas now and the way paravas got treated in pandyan kingdom. Jainism and Budhism were given utmost importance from every nook and corners along with the normal deities. With the advent of brahman culture, these two religions lost their nobility. Brahmans occupied all top most posts in the kingdoms and they started establishing their own rules. How many jains and budhists got slaughtered due to them. Anyone has an answer for this? Please share. So I would appreciate people like Michel Danino should start working on new ideas and not following the old illogical theories created by AUROBINDO.

Finally, can all Brahman "sudras" stop arguing like this and start reading the complete history of tamilnadu and post thier views. Please visit http://www.geocities.com/Athens/Ithaca/1335/Hist/fall_ind.html#ash to get a basic knowledge of indian history.