26 May 2006

"க்ரீமி லேயர்" மோசடி?!

"க்ரீமி லேயர்" எனப்படும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் திட்டம் பற்றிய இன்றைய தினகரனில் வெளிவந்திருக்கும் இதுதான் சமூக (அ)நீதியா? என்னும் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!

முதலில் 'முற்பட்ட வகுப்பாருக்கு' இந்தக் "க்ரீமி லேயர்' திட்டம் செயல்படுத்தப்பட்டுப் பார்த்துவிட்டு - எல்லா 'முற்பட்ட வகுப்பாருக்கும்' (அதாவது ஏழை மற்றும் பணக்கார முற்பட்ட வகுப்பார்) சமவாய்ப்பு அளிக்கப்பட்டு - எல்லா "முற்பட்ட வகுப்பாரையும்" ஒரே மாதிரியான சமச்சீர் பொருளாதாரக் குடும்பத்தினர் ஆக்கிவிட்டால் - அதன் பிறகு - இந்தத் திட்டத்தை - பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பாருக்குப் பயன்படுத்தி இடஒதுக்கீடு வழங்குவதைப் பற்றி சிந்திக்கலாம் என்கிற கருத்தை இந்தக் கட்டுரை தூண்டுகிறது!

ம்! நல்ல யோசனைதான்!

'முற்பட்ட வகுப்பாரே' - முதலில் உங்களில் "ஏழை" முற்பட்ட வகுப்புச் சகோதரர்களைக் கைதூக்கிவிட - இந்த அருமையான யோசனையை ஏற்றுக் கொள்வீர்களா? தயார்தானா? :)

22 comments:

neo said...

இந்தக் க்ரீமி லேயர் திட்டம் பற்றீ வெங்கட் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்; அதில், இது குறித்துப் பேசியுள்ள வேறு சில வலைப்பதிவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்

Nakkiran said...

இட ஒதுக்கீடு குறித்து பல வாதங்கள் இருப்பினும், ஒரு மத்திய அமைச்சர் எடுத்துக் கொண்ட கொள்கையை சரியாக புள்ளி விவரங்களுடன் வாதிட முடியாமல் இருப்பது மிகக் கேவலமானது.

http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

வெங்காயம் said...

உங்களை எதிர்த்து நின்று பேசும் எஸ்கே போன்றவைகள் வெறுமனே கத்திக் கொண்டிருக்கும்.

வார்த்தைகளில் உண்மை இருக்காது சார். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்.

குழலி / Kuzhali said...

தினகரன் கட்டுரையிலிருந்து

//"இந்தியாவில் வர்க்கம் என்பதில்லை, ஜாதிதான் இருக்கிறது" என்று எத்தனையோ சமூக ஆய்வாளர்கள் தலையிலடித்து சொன்னாலும் பிரகாஷ் கரத் போன்ற சிலர் மட்டும் அதை புரிந்து கொள்ள தயாராயில்லை
//

கிரீமி லேயர் நிச்சயம் தேவை அது இல்லையென்றால் இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாக போய் சேராது, கிரீமி லேயரில் ஒரு லட்சம் வருமானத்திற்கு மேலுள்ளவர்களெல்லாம் கிரீமி லேயருக்குள் கொண்டு வரவேண்டுமென்பது அபத்தம், மேலும் கிரீமிலேயர் பற்றி பேசும் அளவிற்கு இன்னமும் அடுத்த தலைமுறை இன்னும் உள்ளே வரவில்லை

http://kuzhali.blogspot.com/2006/05/blog-post_21.html

Anonymous said...

Forward castes do not get any quotas.Creamy layer was introduced by Supreme Court so that the super rich,rich and socially advanced
sections in OBCs do not corner all
the benefits of reservation. The poor in forward castes and the rich in forward castes compete
for open quota.In open quota
BCs,SCs,STs can compete with Forward Castes.So your argument
is baseless and totally wrong.

dondu(#4800161) said...

"முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!"

என்ன அபத்தமான கேள்வி! க்ரீமி லேயரை வடிக்கட்டுவதை எதன் சம்பந்தமாகக் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சலுகை இட ஒதுக்கீட்டிலிருந்து ஐயா. ஆனால் முற்பட்ட வகுப்பினருக்கு, -க்ரீமி லேயரோ இல்லையோ- ஒரு ஒதுக்கீடும் கிடையாது என்பதுதானே உண்மை? இதில் வடிக்கட்டல் எங்கிருந்து வந்தது?

ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் க்ரீமி லேயர் விஷயம் அப்படியில்லையே. இட ஒதுக்கீட்டில் பெரிய பதவிக்கு வருபவர், அவர் பசங்கள் படித்து விட்டு காலேஜுக்கு வரும் தருணத்தில் நன்றாக முன்னேறியிருப்பார்தானே. அவருடைய பசங்களுக்கு நல்ல தரமான கல்வியை கொடுத்திருப்பார்தானே. அப்பசங்களும் ரிசர்வேஷனில் இடம் பெறுவது எந்த நியாயம்? அதைத்தான் சுப்ரீம் கோர்ட் கூறுகிறது. மற்றப்படி அப்பசங்கள் படிக்கக் கூடாது என்று கூறவில்லை. எல்லோரையும் போல ஓப்பன் லிஸ்டில் வரச் சொல்கிறது. அவ்வளவே.

தவறான உபயோகத்துக்கு ஆளாகக் கூடிய அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துள்ளீர்கள். ஆகவே இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என்னுடைய போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

தயா said...

முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா என்ன? அப்புறம் எப்படி கீரிம் லேயரை அவர்கள் மீது Apply பண்ணுவீர்கள்?

பொருத்தமா யோசியுங்க!

neo said...

நக்கீரன், குழலி, டோண்டு அவர்கள், தயா, வெங்காயம் - ஆகிய அனைவரும் முதன்முறையாக என் வலைக்கு வந்திருக்கிறீர்கள்!

மிக்க மகிழ்ச்சி! வருக! கருத்துக்கு நன்றி அனைவருக்கும்!

அந்த "அனானி" யார்? என்று நன்றாகவே தெரிகிறது; அவர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!

இதன் மீதான பதிலை கோர்வையாகத் தருவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டு பிறகு இடுகிறேன் :)

நன்றிகள் :)

neo said...

நான் இந்தக் க்ரீமீ லேயர் பற்றி எந்தக் கோணத்திலிருந்து இப்பதிவை எழுதினேன் என்பத அறிய சுந்தரவடிவேல் அவர்களின் இந்தப் பதிவைப் படிப்பது ஒரு Pre-requisite:

இட ஒதுக்கீடும், பன்மயமாக்கும் திட்டமும் (Diversity Plan)

அப்பதிவில் "Exit Strategy", "creamy Layer" என்று மேட்டுக்குடியார் வலியுறுத்துவது குறித்து - சுந்தரவடிவேல் எழுதியிருக்கும் இந்தப் பகுதியை கூர்ந்து கவனியுங்கள் :

>> இத்தகைய நடைமுறையை, வெங்கட் சொல்லும் வெளியேற்றத் திட்டத்தோடு ஒப்பிட்டு, இப்போது அரசு மற்றும் தனியார் துறையில் எந்தெந்த உயர்சாதிகள் அதிக அளவில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்தச் சாதிக் காரர்களை எடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது இருப்பவர்களைச் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பன்மயமாக்குதலின் பொருட்டு மற்ற ஆட்களை உள்ளே அமர்த்துதல் வேண்டும்.

இதனைப் பெருமளவில் விமர்சிக்கப் படும் இந்து அலுவலகத்திலிருந்து தினத்தந்தி அலுவலகம் வரையிலுமோ, அல்லது இன்போசிஸ்ஸிலிருந்து சரவணா ஸ்டோர்ஸ் வரையிலுமோ, நாரத கான சபாவிலிருந்து, வாடிப்பட்டி டிரம்ஸ் கம்பெனி வரையிலுமோ நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அப்படிக் கொண்டு வரும்போதுதான் வெளியேற்றுத் திட்டம் சரியாக வேலை செய்கிறதென்று பொருள்.

கூடவே வேலை கிடைக்காத பட்சத்தில் எந்தச் சாதிக்காரரும் எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்யும் மனத் திண்மை கொண்டவராக வேண்டும்.

உதாரணமாக ஒரு உயர்சாதிக் காரர் கக்கூஸ் கூட்ட வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமென்று எத்தனையோ பெரியவர்கள் சொன்னதுதான்.

நான் மதிக்கும் பகவான் இராமகிருஷ்ணரே கக்கூஸைத் தலையை விட்டுக் கழுவும்போது மற்ற பெருங்கொம்பன்கள் மலக்கூடை தூக்கினால் என்ன?

இதுதான் சமத்துவ சமதர்ம சமுதாயம்.

அப்போதுதான் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எலக்கிய வியாதிகள் கூவிக் கொள்ள முடியும்.

சட்டையில்லாமல் தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்கும் அதனைப் படம் பிடித்துக் காசு பார்ப்பதற்கு மட்டும் சேரிப் பிள்ளைகள் வேண்டும், கிராமத்துப் பிள்ளைகள் வேண்டும், ஆனால் தேசியத்தின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் வேண்டாம் என்றால் அது என்ன நடைமுறை? >>

மேட்டுக்குடியினரில் "Creamy Layer"-க்குத் தகுதியானவர்களின் பிள்ளைகள் - அரசு நடத்தும், அரசு உதவி பெறும், அல்லது அரசாங்கத்தின் மான்யம் போன்ற எந்த விதத்திலேயும் நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் - 'இடம்' பெறவே கூடாது - Open Quota-விலும் கூட என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் சாராம்சமாகும்.

இதை நான் முன்னெடுக்கவில்லை; ஆனால் - இப்படிப்பட்ட கருத்து வருவதென்பது இயல்பே.

இதன் அடிநாதம் என்னவென்றால் "ஈராயிரம் ஆண்டுகள் பின்னடைவைச் சந்தித்தவர்கள் ஒரு தலைமுறைக்குள் முன்னேறிவிட வேண்டும்" என்று நிர்ப்பந்திக்கிற - மேட்டுக்குடி மேட்டிமைத்தனத்துக்கான பதிலடியே ஆகும்.

மேட்டுக்குடியில் ஏழைகள்(அதாவது Creamy Layer-க்குள் வராதவர்களுக்கே) Open Quota-வில் முன்னுரிமை தரவேண்டும் ( Among the Forward caste students) என்பதுதான் அந்தக் கட்டுரையின் வாதம்.

மீண்டும் பிறகு வருகிறேன்.

dondu(#4800161) said...

An open quota is what it is, just an open quota. Caste has no place in it. Everyboday competes by merit. Preventing some persons from competing openly is tantamount to discrimination and will be rejected by all courts.

Even though you are quoting somebody else, please use some common sense.

"மேட்டுக்குடியினரில் "Creamy Layer"-க்குத் தகுதியானவர்களின் பிள்ளைகள் - அரசு நடத்தும், அரசு உதவி பெறும், அல்லது அரசாங்கத்தின் மான்யம் போன்ற எந்த விதத்திலேயும் நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் - 'இடம்' பெறவே கூடாது - Open Quota-விலும் கூட என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் சாராம்சமாகும்."
Why not sir? The creamy layer is paying taxes and only on these taxes all these grants are coming. No one can dictate here as to who should come or not come.

Regards,
Dondu N.Raghavan

neo said...

>> An open quota is what it is, just an open quota. Caste has no place in it. Everyboday competes by merit. Preventing some persons from competing openly is tantamount to discrimination and will be rejected by all courts. >>

1. This entire Creamy Layer debate - as propagated by the forward castes tries violently to imply :

"Reservations is not a Right but just a temporary arrangment", a view which is based on a stead-fast refusal to acknowledge the catastrophic effects of casteism or rather plundering upper casteist dominanace over the society for millenia.

2. The unilateral view that the disastrous effects of casteist, varna inequities - would be negated by just with a single generation of positive discrimination policies - is neither scientific nor Socially viable argument.

3. If the "effect of education" among Backward communities shoudld be sought to be measured by arbitrary economic scales, and their right to avail of the reservation policies should be taken away, then the socially equivalent yardstick should be applied to Forward comunities too.

That is :

OBCs (within Creamy Layer) => No reservation => should compete in Open Quota

- this Concept "automatically" means that this Social policy should also have this clause :

Forward castes (within Creamy Layer standards) => Cannot claim Seats in Open Quota => Should Study in strictly Private education institutes with no sort of govt. Funding.

Then only it will be a "Level Playing Field"

It is a "technically" valid argument.

Anonymous said...

டோண்டு அவர்களே, புரியாதவர்களிடம் வாதிடலாம்,விளக்கி எடுத்துரைத்து இயம்பலாம்.புரிந்து கொண்டு புரியாதது போல் நடித்து குதர்க்கமாக எழுதுபவர்களிடம் வாதிட்டு உங்கள் நேரத்தையும்,
உழைப்பையும் வீணாக்காதீர்கள். மத்திய அரசு அதை நடைமுறையில் அமுல் செய்துவிட்டது. வரவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கும்
இது பொருந்தும். ஆகையால் அவர்கள் ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள்.

neo said...

>> மத்திய அரசு அதை நடைமுறையில் அமுல் செய்துவிட்டது. வரவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கும்
இது பொருந்தும். ஆகையால் அவர்கள் ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். >>

இப்பிடி பொய் சொல்லும் கோயாபல்ஸ்-தனம் இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக வருது?! :)

Doctor Bruno said...

New Definition of Merit by Delhi Doctors

The ugly side of few perverted minds in Delhi

For nearly two weeks few filth in the capital were shouting that Merit is going to be compromised due to reservations. All the while, we had been giving clearcut evidence as to show that Merit will be NO WAY affected due to reservations and that reservations are going to uplift the society as a whole.

Now the cat is out of the bag.

As per Rediff a guy called Armaan says

“ We prefer reservation for people who deserve it. It's not that we don't have a conscience. We do care for the poor, those who really need help. We should have reservation on the basis of economy.”

So, at last as we have been telling all these days, these depraved guys never bothered about Merit. Merit was just an excuse for Apartheid. I would like to know the reaction of all those who were crying in the name of Merit (including two self-centered caste-centered nepotistic chaps who resigned from the knowledge commission in the name of merit) as to the new shift in demand by the Doctors that they are ready for Quota based on Economy, but not for quota based on Caste.

For those who do not know the difference, let me explain

Now if seats are reserved on the basis of caste, let us assume that a Student from FC will get the seat if he scores 297 out of 300 where as a student from SC will get the seat even if he scores 291 out of 300 (these are the cut off values from MBBS Admission in Tamil Nadu in 2005)

So far the apartheid guys were shouting loud that merit will be affected. There were even remarks from few of those “intelligent” chaps that a guy who scored 292 (SC guy who has got seat) is less talented (or less meritorious – let me repeat the word play) than the forward caste guy who scored 296 (and there fore cannot get the seat as the OC cut off is 297)

But now they WANT QUOTA ON ECONOMY. So they have no problem when a poor guy with mark 292 gets the seat while a rich guy with mark 296 does not get the seat. And strangely, in this case, (according to these doctors and also a person called Narayana moorthy, for whom I had great regard, until he too advised economy based quota) the merit is not affected when quota is based on economy.

Now I am not able to understand this……

If the earlier claim that merit is going to be affected by reservation based on caste is true, then merit is going to be affected if the quota is based on economy or for that matter any other reason like the state of domicile (Delhi – 100 percent reservation for Delhi Undergraduates) , Religion (eg Andhra Pradesh) , college graduated (eg JIPMER)

So a person whose primary aim is preservation of merit should NOT ALLOW ANY QUOTA.

But See the Delhi Doctors.

They have gone on Mass CL today. They do not want a SC student getting 292 marks get MBBS. But they were silent when Private colleges were started that made any person, even those who passed 12th after 3 attempts get MBBS. What were they doing when the private colleges were opened? They did not even give a sign of protest. Do those AIIMS guys think that we all are fools to believe that they are crusading for merit at present? What were they doing for those sponsored seats and NRI quotas

They have no problem when some one gets MBBS from Private College even though he gets 50 marks in 12th. They never fought. It was Tamil Nadu students who had always fought against the private medical colleges

They have no problem of a student getting low marks in PG entrance in AIIMS, but getting MD Gen just because he studied MBBS there. At that juncture they never represented to PM or President

And as per the latest statement, they have no problem if a poor guy who gets 292 marks become a doctor while a rich guy who gets 296 has to watch

BUT THEY ARE WORRIED when a SC Guy (or a OBC Guy) who takes 292 marks get admission instead of a Forward Community guy who gets 296.

SO in effect, all these hullabaloo over the past two weeks were not against reservations. It is in fact against the students from the reserved community.

They were not fighting for merit as they were claiming (we already knew that merit is a mask) They fight to maintain apartheid

And see this report in Economic times by Urmi Goswamy from Delhi

(as per http://thoughtsintamil.blogspot.com/2006/05/blog-post_23.html) that sums up the issue

PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy. The government proposes to let them off the reservation hook. The model Right to Education Bill proposes that private schools that receive no funds from the government will not be required to take children from weaker sections. The Model Bill will form the basis of states' legislation to enable the fundamental right of education.

SO there are guys in Delhi who cannot breathe easy when a student from weaker society studies along with his children. Their main worry seems to be the community of the student who studies along with them and not the marks of the students who studies in the college. God Save India !!!

neo said...

மருத்துவர் ப்ருனோ சொல்வதில் 1000% விழுக்காடு உண்மை உள்ளது!

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் தரம் குறையும் - என்று ஜல்லியடிக்கும் அறிவுஜீவிக் கூட்டம் - பொருளாதார அடிப்படையினால் மாடும் அந்தத் தரம் குறைந்துவிடாதா? என்ற நியாயமான கேள்விக்கு பதில் தருமா?

சாதி வெறி, இன வெறி பிடித்து அலையும் ரேசிஸ்ட்டுகள் மற்றவர்களை அப்படி அழைக்கும் குரூர நகைச்சுவையை இன்னும் எத்தனை காலத்துக்கு பொறுப்பது?

Doctor Bruno said...

Reservations குறித்து AIIMSல் சில அறிவு ஜீவிகள் இப்பிடியெல்லாம் சொல்லி இருந்தார்கள்

"The students who come through quota are all incomeptent."

"And yeah, I would still prefer being treated by a general category doctor. Most people who come in via the quota route would not be smart enough to compete in the general category"

AIIMSல் என்ன நடக்குதென்று உங்களுக்கு தெரியுமா

Read this shocking report from Times of India at http://timesofindia.indiatimes.com/articleshow/1543278.cms

The HC had found that "AIIMS students, who had secured as low as 14% or 19% or 22% in the (all-India) entrance examination got admission to PG courses while SC or ST candidates could not secure admission in their 15% or 7% quota in PG courses, in spite of having obtained marks far higher than the in-house candidates of the institute." HC had analysed admission data over five years.

Merit here was clearly being sacrificed, the study showed. For instance, in the January 1996 session, an AIIMS student with 46.167% marks - lowest for an AIIMS student that year - got PG admission.

However, an SC student with the same grades was admitted but denied coveted course such as obstetrics and gynaecology. The SC student got shunted to community while AIIMS students easily won berths in prestigious disciplines.

Twelve AIIMS candidates were selected even though they got less marks than the SC candidate who secured 60.33% marks. Similarly, 16 AIIMS students got admission to PG courses even though they got less marks than another ST student who got 62.16%.

MERIT.. What is that, by the way ???

neo said...

Dr.Bruno!

Keep them coming! :)

These Upper-casteist Hypocrites would breast-beat about Merit, but what happens if we let them run the show?!

They make all Higher-educational institutes as their own zenana!! ;)

Mental-retards, Hypocrites, Racists, Caste Zealots..hmmm!........ Indian Higher Education needs to be "revamped" by the sons of the soil!

The time's now and here. Period.

Anonymous said...

sons of the soil
What a MCP are you.

neo said...

anony,

>> sons of the soil
What a MCP are you. >>

Derision can work in wither direction - no?!

Looking at the Tons and Tons of anti-backward community hatred spewed by the so called "Forward Community" memebers in the Blog world (not just in thamizhmanam) and the real world - the OBCs have maintained relatively better decorum.

FCs indulge in Casteist slurs, and their derogatory insults about OBC brain power and capabilities abound everywhere!

Their utter refusal to understand the social mechanism which is vital to the Nation-building of a new India, exposes their only Loyalty - to themselves and their societal power which they desire abundantly!

The Flag-waving, Patriotic Breast-beating, "Hindu" glorifying, FC / upper casteist fellas have called their own Bluff!!

Remember without Social Justice the entire "Idea of India" (due courtesy to Shashi Tharoor and credit to Nehru) would crumble like pack of cards.

Try to get out of your Hate mongering racist attitude! ;)

வவ்வால் said...

வணக்கம் நியோ!

கிரீமி லேயர் பார்த்து இட ஒதுக்க வேண்டும் என்றால் இப்போது உள்ள முற்பட்டோரில் 90 சதவீதம் பேர் கல்லூரி வாசல் மிதிக்க முடியாது.IIM,IIT போன்றவற்றில் படிப்போர் எல்லாம் முற்பட்ட சமூகத்தின் வசதி மிக்கோரே! சாதாரணமாக ஒரு MBA(XLRI,NIRMA,BAJAJ,IIM) நுழைவு தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி கட்டணம் மட்டுமே குறைந்தது 50000 ரூபாய் ஆகும் இதனை நல்ல மதிப்பெண் எடுத்தாலும் பொருளாதார ரீதியாக நலிந்த மாணவனால் முடியாது.எனவே IIM ,IIT இல் வருவோர் எல்லாம் மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகிறார்கள் என்பதே மோசடி.ஆரம்ப கட்டத்திலேயே பணம் இன்மையால் நுழைவுதேர்வில் சரியாக செயல்பட்டு மதிப்பெண் எடுக்க முடியாத எத்தனையோ பேர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் மாநில நுழைவுத் தேர்விலேயே இந்த பாகு பாடு வந்து விடுகிறது.எனவே தான் நுழைவு தேர்வை எடுக்க வேண்டும் என சட்டம் கொணர இருக்கிறார்கள்.ராசிபுரம் ,தாரபுரம் பகுதிகளில் நுழைவுதேர்வு, மதிப்பெண் கூட்டுவதற்கான தனித்தேர்வு ஆகியவற்றிற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது,தமிழகம் எங்கும் இருந்து அங்கே போய் தங்கிபடிக்கிறார்கள் மாணவர்கள்.சும்மாவா ஒரு மாணவனுக்கு 20000 ரூபாய் வரை செலவு ஆகும்.அவர்கள் என்ன மாயம் செய்கிறார்களோ அங்கே போய் பயிற்சி எடுப்போரில் 80 சதவீதம் நல்ல கல்லூரிகளில் இடம் பிடிக்கிறார்கள்.

அதிக மதிப்பெண் எடுக்க அறிவு மட்டும் போதாது இந்த காலத்தில் சிறப்பான பயிற்சி எடுக்க பணம் வேண்டும்.1970 களின் கதையை இங்கே பேசுவார்கள் அது கவைக்குதவாது!முற்பட்டோர் எல்லாம் பொதுபிரிவில் வருகிறார்கள் என சில சொல்லலாம் ஆனால் அதுவே ஒரு இட ஒதுகீடு தான் ,பணத்தை வைத்து நன்றாக மதிப்பெண் வாங்குவதற்கான அனைத்து வித்தையும் செய்து ஒரு குறிப்பிட்ட சதவித மக்களே மீண்டும் மீண்டும் பொது இடங்களை ஆக்ரமிக்றார்களே!

நல்ல தரமான பள்ளில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து இடம்,மேல் நிலைத் தேர்வுக்கு தனிப் பயிற்சி,நுழைவுத் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என எடுத்து படித்த பல வசதிகொண்டோர் தான் இப்போது இட ஒதுக்கீடுக்கு எதிராக குரல் கொடுப்போர்,அவ்வாறு கூற என்ன நியாயம் உள்ளது.

ஏழை விவசாயி மகன் அரசுப்பள்ளியில் படித்து என்ன தான் மதிப்பெண் எடுத்தாலும் இதர வசதிகள் இன்மையால் எக்காலத்திலும் அத்தகைய கல்வி கூடங்களின் வாசலை மிதிக்க முடியாதே! சிலர் இப்போதும் சொத்தை வாதம் வைப்பார்கள் எல்லாருக்கும் தரமான கல்வியை அரசு வழங்கட்டுமே என்பார்கள் அது நடக்கிற கதையா,அப்படி நடக்கும் வரையில் இந்த ஈம் ,ஈட் களை மூடிவைப்பார்களா?

neo said...
This comment has been removed by a blog administrator.
neo said...

நன்றி வவ்வால் அவர்களே!

>> சாதாரணமாக ஒரு MBA(XLRI,NIRMA,BAJAJ,IIM) நுழைவு தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி கட்டணம் மட்டுமே குறைந்தது 50000 ரூபாய் ஆகும் இதனை நல்ல மதிப்பெண் எடுத்தாலும் பொருளாதார ரீதியாக நலிந்த மாணவனால் முடியாது.

எனவே IIM ,IIT இல் வருவோர் எல்லாம் மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகிறார்கள் என்பதே மோசடி.ஆரம்ப கட்டத்திலேயே பணம் இன்மையால் நுழைவுதேர்வில் சரியாக செயல்பட்டு மதிப்பெண் எடுக்க முடியாத எத்தனையோ பேர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். >>

இதுவும் மேலும் சில முக்கியமான கருத்துக்கள் சொல்லி உள்ளீர்கள். முற்பட்ட வகுப்பாரிடம் இதே விஷயத்தினை (என் முந்தைய பின்னூட்டம்) ஒன்றில், வேறு விதமாகச் சொன்ன உடனே "குதர்க்க வாதம்" என்று மட்டையடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இவர்கள் செய்தால் வாதம் - மற்ரவர் செய்தால் ஜல்லியா?

1990-களில் மண்டல் கமிசனின் வேலை வாயிப்பில் இட ஒதுக்கீடு பரிந்துரையை - படிப்பிலே இட ஒதுக்கீடு இல்லாமல் வேலை வாய்ப்பிலே இருந்தால் thats putting the cart before the horse என்றார்கள்.

இப்பொது கல்வியிலே கொண்டுவந்தால் - பொருளாதாரம், க்ரீமி லேயர் என்று ஜல்லி!

சரி பொருளாதார க்ரீமி லேயரை - எல்லாச் சமூகத்துக்கும் பொதுவாகச் செய்யலாமா - என்றால் உடனே Discrimination என்று கூப்பாடு!!!!

மற்ற நேரத்தில் எல்லாம் 'இவாள்களுக்கு' - "ஹிந்து" கணக்கிற்கு காண்பிக்க - OBC, Sc, ST எல்லாரும் வேண்டும்!

முசல்மான்களை தொந்தரவு செய்ய OBC, SC, ST community--இல் இருந்து தலைவர்கள், "தொண்டர்கள்", குண்டர்கள்! எல்லாம் வேண்டும்!!

ஆனால் - சக "இந்துக்களான" OBC- களுக்கு ஒரு நன்மை செய்ய விடாமல் இடைமறித்து கூப்பாடு, கூச்சல், காட்டுக்கத்தல், மூர்க்க எதிர்ப்பு, நரித்தனம் - எல்லாம் காட்ட ஆரம்பிப்பார்கள்!

"ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையயப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!"