23 April 2006

பொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? - சுபவீயின் செவ்வி


'இந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில்; செவ்வியின் சுட்டி


ஒரு கூடுதல் செய்தி :

சுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும்

:)

6 comments:

Pot"tea" kadai said...

ஜெயாவிடம் மன்னிப்பை எதிர்பார்ப்பதா? கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பு தான்!
மன்னிப்பிற்கு பதிலாகத் தான் "மெர்க்"ம், கோடிகளும் கைமாறியிருக்கிறதே. ஆனால் தமிழினத் துரோகியை இன்னமும் அவர் தோழராகப் பாவிப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

ஜெயக்குமார் said...

போடாவிற்காக ஜெ. எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த சட்டத்தைக்கொண்டு வந்த பா.ஜ.க அரசும் அவர்களுடன் அமைச்சரவை கூட்டணியில் இருந்த திமுக-வும் தான் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

அந்த சட்டத்தைப்பயன்படுத்தி வைகோ-வை கைது செய்ததால் வைகோ-விடம் தான் மன்னிப்புக்கேட்கவேண்டும்.

நியோ / neo said...

பொட்டீக்கடை!

வருகைக்கு நன்றி! 'மெர்க்' ஒன்றல்ல; இரண்டு என்றும் கூட பேச்சு அடிபடுகிறது! :))


>>ஆனால் தமிழினத் துரோகியை இன்னமும் அவர் தோழராகப் பாவிப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.>>

உங்கள் வருத்தத்துக்கு விளக்கமளிப்பது போல இந்த வார நக்கீரனில் சுபவீயின் செவ்வியில் அவரே பதில் தந்திருக்கிறார் :

"வைகோவிடத்திலே மிக நெருக்கமாக இருந்தவன் நான். ஆனாலும் நட்பு வேறு அரசியல் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அது வைகோவாக இருந்தாலும் சரி, என் பிள்ளையாகவே இருந்தாலும் சரி, அந்த அம்மாவோடு போய் நிற்கிற யாரையும் காலம் மன்னிக்காது."

நியோ / neo said...

>> அந்த சட்டத்தைப்பயன்படுத்தி வைகோ-வை கைது செய்ததால் வைகோ-விடம் தான் மன்னிப்புக்கேட்கவேண்டும். >>

ஓ! அதாவது ஜெ. வைகோவிடம் கேட்டாராமா மன்னிப்பு?! அல்லது கேட்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

சுபவீயின் செவ்வியை படித்தீர்களென்றால் - அவரும் இதைத்தான் கேட்கிறார் ; அதாவ்து "ரகசியமாகவாவது" ஜெ. பொடா கைதுகளுக்காக மன்னிப்புக் கேட்டாரா என்று?!

மற்றபடி இந்த 'மன்னிப்புக் கேட்டல்' என்பதன் 'இடம் பொருள் ஏவல்' தெந்ரிந்துதான் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களா?

'மிசாவிலே போட்ட காங்கிரஸோடு திமுக கூட்டு வைத்ததே' என்று உள்றிய வைகோவுக்கான பதில்:

இந்திரா பகிரங்கமாக மிசா கொடுமைகளுக்காக மன்னிப்புக் கேட்டார். எங்கே? தன் வீட்ட்ல் அல்ல; கலைஞரின் வீட்டில் அல்ல; திமுக பொதுக்கூட்டத்தில் - சீரணி அரங்கிலே பல்லாயிரம் மக்கள் முன்பு பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.

அதுமட்டுமல்ல - மிசா இந்தியா முழுமையும் பாய்ந்த சட்டம்.

வைகோ அப்படிப்பட்ட கூமுட்டைத்தனமான ஒப்புமை செய்ததால் - கலைஞர் அந்த வரலாற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி - பிறகு வைகோவிடம் கேட்டார் - பொடாவிக்காக ஜெ. மன்னிப்பா கேட்டார்? குறந்தபட்சம் வைகோவிடமாவது?

ஜெ. வின் அடக்குமுறைச் சட்டம் தமிழனுகு எதிராக, தமிழினத்துக்கு எதிராகப் பாய்ந்தது; அதனால்தான் சுபவீ கேட்கிறார் - குறைந்தபட்சம் 'ரகசியமாகவாவது' ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? என்று!

'குற்றப்பரம்பரைச் சட்டம்' கொண்டுவந்த வெள்ளைக்காரன் - முக்குலத்தோரிடம் மன்னிப்பா கேட்டான்? - அது போலத்தான் இதுவும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார் - அதுவும் லாஜிக்காகத்தான் தோன்றியது!!! ;))

Anonymous said...

ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போல் செயல்படுகிறார். ஜெயாவிடம் அப்படி என்னத்தைத்தான் பார்த்தாரோ?

ஜெயக்குமார் said...

//ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போல் செயல்படுகிறார். ஜெயாவிடம் அப்படி என்னத்தைத்தான் பார்த்தாரோ?//

அப்படியெல்லாம் வேறு பதவிகள் உண்டா.
உங்களைபோல பிண்ணூட்டம் இடுபவர்களுக்கு என்னுடைய பதிவில் விளக்கம் அளித்துள்ளேன், நீங்கள் படிக்கவில்லையா?

இதொ உங்களுக்காக மீண்டும்.


சில அனானிகள் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளுடன், சில பிண்ணூட்டங்க்ளை இடுகிறார்கள், அவற்றை நாகரீகம் கருதி இங்கு நான் தவிர்த்துள்ளேன். அனானிகளை பிண்ணூட்டம் இட அனுமதித்தது , எல்லொரும் என் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்துகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உண்மையிலேயே உங்களுக்கு துனிவு இருந்தால் உங்கள் பெயர் மற்றும் இ-மெயில் முகவரியுடன் தெரிவிக்கவும். அவர்களுக்கு அவர்கள் பாசையிலேயே பதில் அளிக்க நான் காத்திருக்கிறேன்.

என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது அந்த ஊர் நண்பர்களிடம் கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன.