06 February 2007

தூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்!

தூ தூ தூ தூ தூ தூயவர்கள்!

சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள்! போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது!

தமிழர்களின் இன எதிரிகளான பார்ப்புகள் எப்போதும் இந்தத் தூ தூ தூயவர்கள் வேடம் புனைந்துதான் ஏய்த்து வந்துள்ளனர். பார்க்க:

1. லக்கிலுக்

2. கொசுபுடுங்கி

3. பாலபாரதி

4. செல்லா

5. மிதக்கும் வெளி

6. கொண்டைய மறைக்கலியேடா (லக்கிலுக்)

7. சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல் (மிதக்கும்வெளி)

8. போலி -டோண்டு (முத்துகுமரன்)

9. டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள (ஜோ)

நினைவில் கொள்ளுங்கள்:

1. சுகாசினி அய்யங்காரைக் காப்பாற்ற - பின்நவீனத்துவ வேடம் போடுவோம் ("கற்பு என்பது கால்களுக்கு இடையிலா இருக்கிறது?") - ஆனால் - பொம்பள தீட்டு அவ பூச பண்ணப்படாதுனு எஙகளவா சொல்லுறதை ஆதரிப்போம்!

2. தமிழை பாப்பானின் 'கர்ப்பகிரகத்தில்' சொல்லக்கூடாது என்கிற வேதாகம எச்சிக்கலை **ங்கி மரபை ஆதரிப்போம். ஆனால், "தமிழ்" என்கிற மொழி அடையாளத்தை வச்சு தரப்படுகிற விருதையும் எங்களவா தான் தேர்ந்தெடுப்போம்!

(You too Badri? தமிழ் வழிபாடு பற்றியும், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய ஓதுவாருக்கு நடந்த கொடுமை பற்றியுமான உங்கள் கருத்துக்களை எங்களுக்குப் படிக்கத் தருவீர்களா? - வெறுமனே தீட்சிதர்களை கண்டிக்கிற உங்கள் பதிவு போதாது - தமிழைப் புறக்கணிப்பதை ஆதரிக்கும் ஆசாமிகளுக்கு தமிழ் அடையாளம் எதற்கு - என்கிற "ஆதார"(!!!) கேள்விக்கு வெளிப்
படையான நேரடியான நேர்மையான பதிலைத் தாருங்கள்)


3. திராவிட 'முகமிலிகள்' எல்லாம் அயோக்கியர்கள் -ஆனால் எங்களவா ஆத்து 'முகமூடிகள்' சுத்த வீரர்கள்!

அட! அட! அட! என்ன ஒரு நியாய தரும நேர்மையான சிந்தனைகள்!

உங்களின் வெக்கங்கெட்டதனத்தை இந்த 'பால் வெளி மண்டலத்திலேயே' எவனும் அடிச்சுக்க முடியாதுய்யா!

வாழ்க!

பிற்சேர்க்கை:

1. திருந்தவே திருந்தாதா நோண்டு?

2.
நோண்டுவின் நாகரிகம்

படித்துப் பயன்பெறுங்கள்! :)

26 January 2007

'அமிர்தானந்தமயி'யும், சப்பாத்திகளும, சில வராகங்களும்!

நமது வலையுலகப் புனிதப் பசுக்களின் பிறழ்நிலைகளும், இரட்டைப் பேச்சுகளும், உள்ளடி வேலைகளும், கயமைத்தனங்களும் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

தமிழினம், தமிழ் மொழி - இவைகளைக் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிச் சிதைத்துவிட மாட்டோமா என்று வெறி கொண்டு அலையும் வராகமூர்த்திகள் - இதே மொழி அடையாளத்தின் காரணமாக ஏதேனும் நன்மை கிட்டுமானால் - அதையும் நக்கித் திண்ணுவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்புறம் மயிரைப் பிடுங்கினால் தமிழ் வளருமா என்று எச்சிகலைத்தனமாகக் குலைக்கவும் செய்வார்கள்!

இதைப்போலவே - தமிழர் நலனில் தமிழ்நாட்டு நலனில் எவ்வித அக்கறையுமற்றவர்கள் - தமிழ்நாடென்னும் சுயமரியாதைப் பூங்கா பொசுங்கிப் போகாதா - என்று நாளெல்லாம் ஏங்குவோர் - தமிழ்நாட்டு நலன் கருதி நடக்கும் காரியங்கள் மீது சேறு தூற்ற முதல் ஆளாய் நிற்பார்கள்.

மனித உரிமை, நவீனத்துவ சிந்தனைகளெல்லாம் இவர்களுக்குப் Punch(ing) lines! - அதாவது இவர்களின் 'இன'நலன்கள் பாதுகாக்கப்படும்வரைதான்.

தமிழ் இனத்தின் மானத்தின் மீது எறியப்படுகிற அம்புகள் எல்லாம் இவர்களுக்குப் பூச்செண்டுகள்! அந்த அம்புகளை வானத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க வந்த கடவுளின் மோட்ச கயிறுகளாய்ப் பற்றிக் கொண்டு தமிழர்கள் 'போய்ச்சேர'வேண்டும் என்று 'சாமியாடி' அருளாசி வழங்குவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழரால் கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுத்தலத்தில் 'இவாள்' நிற்கும் இடத்தில் சூத்திரன் நின்று தமிழ்ப்பாடல் இசைத்துவிட்டால் போதும்! உலகமே இடிந்துவிடும்! சூத்திரனை அடித்து உதைத்து துரத்திக் கொல்லும்வர ஓயமாட்டார்கள். அதையும் ஆதரித்து அது ஒரு சட்டபூர்வ சைவ நடவடிக்கை என்று எழுதும் சண்டாளத்தனம் இவாள்களுக்க்கு வெகு இயல்பாய் வரும்.

சுகாசினி அய்யங்காரையும் குஷ்புவையும் காப்பாற்ற ஓடோடி வந்த சில வலையுலகப் பெண்கள் - இந்த 'சம்பிரதாய' Moral puritanist எச்சிகலைத்தனத்தைக் கண்டிக்க மாட்டார்கள்! என்ன இருந்தாலும் Blood is thicker than post-modernism இல்லையா?

ஆனால், மாதவிலக்கு, தீட்டு என்றெல்லாம் படுகேவலமான வியாக்கியானம் செய்கிற இதே கும்பலின் அடிப்பொடிகள் பற்றி இந்தப் பெண்கள் பேசாமலிருப்பதன் மூலம் - இந்திய 'வர்ண' வரலாற்றின் நீட்சியை நிரூபித்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு முதலில் நன்றி.

பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதும், பேணுவதுமே 'சப்பாத்தி'களின் முதல் கடமை என்பது இன்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அமிர்தானந்தமயி, அன்னை சாரதா, அரவிந்த அன்னை, நிவேதா இவர்களின் அருளாசியெல்லாம் சூத்திரனை இந்த 'ஆன்மீக' மாயைக்குள் வைத்திருக்கும் வரையே! அப்புறம் 'எங்களவா பொண்ண அர்ச்சகராக்க மாட்டோம்' என்று அறிக்கை விட்டுவிடுவார்கள். கேட்டால் சூத்திரர்கள் கோவிலுக்குள் பூந்து அவங்காத்துப் பொண்ணை சைட் அடிப்பார்களாம்!

நல்ல Post-modernist மெளனம்! வாழ்க!

ந்ல்லவேளை அமிர்தானந்தமயி 'புனிதப் பசு' அல்லர்; இல்லாவிட்டால், நம்மளவா பெண்டுக சூத்ராள 'கட்டிப்புடிச்சு' அருளாசி கொடுப்பதாவது என்று அவரை ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்திருப்பார்கள்!

அமிர்தானந்தமயி தமிழகத்துக்கு வருகை தந்து சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நலப் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். வாழ்க!

அவர் வந்து போகும் வரை எந்த பார்ப்பையும், சப்பாத்தியையும் அவர் பக்கத்தில் விட்டுவிடாமல் இருப்பது தமிழகத்துக்கு நல்லது; இல்லாவிட்டால் அமிர்தானந்தமயிக்கும் தீட்டு கழித்து விட்டாலே ஆயிற்று என்று ஒழித்துக் கட்டிவிடுவார்கள்.

பி.கு:

தமிழ், தமிழின அடையாளங்களை வேதத்தின் பெயரால் இழிவுபடுத்தும், தமிழர் உரிமை மறுக்கும் பன்றிகளுக்கு - சிறந்த தமிழ் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டும் எதற்கு?

'பத்ரி' இது போன்ற பன்றிகளுடன் ஒரே குழுவில் இருக்க மறுக்கவேண்டும், விலகவேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.


25 January 2007

தல புராணம்

சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்தக் கவிதை புரியும். இதை நான் முதன்முதலாக எழுதி பல ஆண்டுகள் அப்படியே வைத்திருந்தேன்; சில திருத்தங்கட்குப் பின்னர் சில ஆண்டுகள் முன்பு வேறொரு தளத்தில் இட்டேன்.

இப்போது பொன்ஸ் அவர்கள் எழுதிய அரசாங்கம் கவனிக்குமா? - 2 என்ற பதிவில் யானைப் படங்கள் போட்டிருந்ததைப் பார்த்தபோது ஏனோ இந்த என் கவிதை நினைவுக்கு வந்தது!


தல புராணம்

=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.

- நியோ.

13 January 2007

'முனைவர் வைரமுத்து'வுக்கு வாழ்த்துக்கள்!



நேற்று முன்தினம் (11/01/2007) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு முனைவர்' (Doctor of Literature honoris causa ) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள்! :)

தகுதிவாய்ந்த பெருமகனாருக்கு சீரிய சிறப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பாராட்டுகிறோம். :)

இத்தருணத்தில் கவிப்ப்பேரரசரின் 'இனம்' என்ற கவிதையை இங்கே தருகிறேன்.


இனம்
-----------------------------

தமிழா

காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா

கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்

பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்

``````````````````

உன்
ஆட்டு மந்தைகளை
வேட்டையாட விட்டுவிட்டாய்

கூடப் பிறந்தோனின்
கோழிக்குஞ்சு திருடுகிறாய்

பிள்ளைபெற்ற பெண்ணை
அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அடையாளம் சொல்வதுபோல்
நீ
அடிமை புரிந்த
அடையாளம் மாறவில்லை

அன்று-
மதம் வந்தது
நீ
வருணமாகப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாய்ப் பிரிந்தாய்

தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்

````````````````````````

மழைபிலிற்றும் இரவுகளில்
நனையாத திண்ணையை
நாய்க்கு வழங்கிவிட்டு
நனைந்து கிடக்கிறாய்


வெளவால் -
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை

நீ -
அடிமையா? மனிதனா?
ஆதாரம் இல்லை

மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவத்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்

`````````````````````````````````

இந்தியப் பரப்பில்
எந்தமிழ் நாடு
நடந்து பார்த்தால்
நான்கு சதம்

இந்திய மக்களில்
எம்மருந்தமிழர்
ஏழுபுள்ளி ஐந்து சதம்

அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
ஊராட்சி ஒன்றியம்

பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்

அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்

தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்

அன்று தொலைத்த முகம்தான்
இன்றும் காணக் கிடைக்கவில்லை

`````````````````````````


தொலைக்காட்சி விளம்பரங்கள்
துருவிப் பார்க்கிறேன்

ஒரு முகமேனும்
தமிழ் முகம் இல்லை

ஒரு வணிகமேனும்
தமிழ் வணிகம் இல்லை

சுவர்பார்த்துத் தலைவாரும்
அடுக்குமாடி வீடுகளில்
பத்துக்கு ஏழு
தமிழர் இல்லை

விமானம் ஏறினால்
தமிழ்முகம் தேடுவேன்

ஏழைவீட்டுப் பாயாசத்தில்
எங்கோ அகப்படும் முந்திரிமாதிரி
இரண்டோ மூன்றோ
இருப்பினும் இருக்கும்

ஏனிந்தப் பின்னடைவு?

ஆடை ஆயுதம்
சுமையென்றானால்
அழுக்கும் பொதிகளும்
செல்வமென்றானால்
எந்த இனத்தின் யாத்திரை தொடரும்?

புதுமைகொள் தமிழா
புழுதி கழுவு

உலக நீரோட்டத்தில்
கரைந்துவிடாமல்
கலக்கப்பழகு

அடுத்த நூற்றாண்டின் *
அந்தி நேரத்தில்
மூளை தவிர எல்லாம்
செயற்கையாய்க் கிடைக்கும்

ஆண்டுக்கொருமுறை
முகம் மாற்றலாம்

மரத்தின் திசுக்களில்
மனிதன் வாழ்வான்

எண்கள் இட்ட்
இருதயம் கிடைக்கும்

கணவனுக்கு மனைவி
செவ்வாயிலிருந்து
செலவுக்கனுப்புவாள்

உணவு மாறும்
உடைகள் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

இன அடையாளம் மொழியாய் மிஞ்சும்
அடையாளம் இழக்காதே

மேற்கே விஞ்ஞானம்
பொருள் கண்டறிந்தது
போன நூற்றாண்டு

அதற்கு நீ
சொல் கண்டறிந்தது
இந்த நூற்றாண்டு

சொல்?
என்று நீ
சொல்லை விடுத்துப்
பொருள் கண்டறிவாய்?

அறி
அன்றுதான்

நீ
அறியப்படுவாய்.


- "தமிழுக்கு நிறம் உண்டு" தொகுதியிலிருந்து


* => இந்தக் கவிதை 1997 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது

11 January 2007

"ஜெய் தீட்டு ! "

சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.

முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)

அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!

இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)


"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:


மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!

ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)

26 May 2006

கலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா?

இன்று(26/5/2006) சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றது.

நண்பர் லக்கிலுக் பதிவான கலைஞரைத் தாக்க முயற்சி! -யில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.

>> ஒரு டஜன் ரவுடிகளுக்கு மேல் சட்டசபைக்கு அனுப்பி இருக்கும் தாதா ஜெயா தன் அடியாட்களுக்கு கொடுத்திருந்த அசைன்மெண்ட் இன்று வெற்றிகரமாக சட்டசபையில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.... >>

இந்த "சொர்ணக்கா" ஜெயா மாமி 1989-90-இலும் இதைத்தான் செய்தார்!

கலைஞர் படிக்கவிருந்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்துவிட்டு - பிறகு "அய்யயோ என்னை மானபங்கப் படுத்த முயற்சி" என்று நாடகம் போட்டார்.

அதைப் பார்ப்பனீயவாதிகள் பயன்படுத்தி எத்தனை கோயபெல்ஸ் பரப்புரை செய்தார்கள்?

இந்துத்துவவாத, பிற்படுத்தப்ப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க பார்ப்பனீயவாதிகள் செய்த சதியே ஜெ.வின் அதிமுக கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும்.

தமிழர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கோபால்சாமியும், திருமாவும் - இன்னமும் அங்கே இருப்ப்து மாபெரும் இனத்துரோகத்தில்தான் போய் முடியும்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றி ஒன்றும் பேசாத ஜெ. கலைஞரைத் தாக்க ஆள் அனுப்புகிறார் என்றால் - இதன் உள்ளர்த்தம் என்ன??


பார்ப்பனீயவாதிகள் - இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவ்ர்களை - கொலை செய்யத் திட்டம் இடுகிறார்களா? என்ற சந்தேகம் மமிக மிக மிக கடுமையாக எழுகிறது.

இதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"


பிற்சேர்க்கை:

அதிமுக அராஜகக் காட்சிகள்

அதிமுக அராஜகம்1

அதிமுக அராஜகம்2

அதிமுக அராஜகம்3

அதிமுக அராஜகம்4


( ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை. )

"க்ரீமி லேயர்" மோசடி?!

"க்ரீமி லேயர்" எனப்படும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் திட்டம் பற்றிய இன்றைய தினகரனில் வெளிவந்திருக்கும் இதுதான் சமூக (அ)நீதியா? என்னும் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!

முதலில் 'முற்பட்ட வகுப்பாருக்கு' இந்தக் "க்ரீமி லேயர்' திட்டம் செயல்படுத்தப்பட்டுப் பார்த்துவிட்டு - எல்லா 'முற்பட்ட வகுப்பாருக்கும்' (அதாவது ஏழை மற்றும் பணக்கார முற்பட்ட வகுப்பார்) சமவாய்ப்பு அளிக்கப்பட்டு - எல்லா "முற்பட்ட வகுப்பாரையும்" ஒரே மாதிரியான சமச்சீர் பொருளாதாரக் குடும்பத்தினர் ஆக்கிவிட்டால் - அதன் பிறகு - இந்தத் திட்டத்தை - பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பாருக்குப் பயன்படுத்தி இடஒதுக்கீடு வழங்குவதைப் பற்றி சிந்திக்கலாம் என்கிற கருத்தை இந்தக் கட்டுரை தூண்டுகிறது!

ம்! நல்ல யோசனைதான்!

'முற்பட்ட வகுப்பாரே' - முதலில் உங்களில் "ஏழை" முற்பட்ட வகுப்புச் சகோதரர்களைக் கைதூக்கிவிட - இந்த அருமையான யோசனையை ஏற்றுக் கொள்வீர்களா? தயார்தானா? :)

24 May 2006

கமலின் "அணையா நெருப்பு!"

கமல்ஹாசனின் சிறுகதையான "அணையா நெருப்பு" இந்த வார விகடனில் வந்திருக்கிறது. இது பற்றி இணையத்தில் பல தமிழ், ஆங்கில வலைப்பதிவர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல சில இந்துத்துவ ஜாட்டான்கள்(!) இந்தக் கதையைப் படித்து கமலைக் கரித்துக் கொட்டுவதும் தெரிந்தது! இவர்களின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்துவதை விடவும் நமக்கு வேறு மகிழ்ச்சி இல்லை என்பதால் - இந்தப் பதிவு!

கமலின் சிறுகதை அணையா நெருப்பு இங்கே!

23 May 2006

"மிஷன் ஏகலைவன்!"

பத்ரியின் இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ் பதிவில் - என்னுடைய பின்னூட்டமாக இந்தப் பதிவில் எழுதியிருப்பதை இட்டேன். பிறகு இதையே ஒரு தனிப்பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது.

சுந்தரவடிவேல் அவர்கள் எழுதியுள்ள பதிவில் - IIT-யில்(பொதுவாக உயர்கல்வி நிறுவனங்களில்) நிலவும் பல வகுப்புவாரியான சமச்சீர்மையற்றதன்மையைப் பற்றிப் பல தகவல்கள் சொல்கிறார்.

இதற்கு முன்பு கூட குழலி அவருடைய 'ஐஐடி'-யின் உள்வட்ட விளையாட்டுக்கள் - என்கிற பதிவில் பல தகவல்கள் சொல்லியிருந்தார்.

ரவி போன்றவர்கள் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை என்றே இப்போது வரை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சதீஷ் தேஷ்பாண்டே, யோகேந்திர யாதவ் எழுதிய 'தி ஹிந்து' கட்டுரையில்(ஒன்று | இரண்டு) :

" A rational and dispassionate analysis of this issue must begin with the one crucial fact that is undisputed by either side — the overwhelming dominance of upper castes in higher and especially professional education.

Although undisputed, this fact is not easy to establish, especially in the case of our elite institutions, which have always been adamant about refusing to reveal information on the caste composition of their students and faculty. "

என்கிறார்கள்!

என் கேள்விகள்/ ஐயங்கள் :

1. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் / நிர்வாகிகள் - போன்றோரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிய கணக்கெடுப்பைச் செய்வது அத்தனை கடினமானதா? - ஆம் என்றால் அதற்குக் காரணங்கள் என்ன?

2. அமைச்சர்கள் ஊழல், ரகசிய ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறுதல், எம்பிக்களின் ஊழல், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் - போன்ற எத்தனையோ - "கடினமான" விஷயங்கள் தொழில்நுட்பத்தினால் சாத்தியமாகி இருக்கும் போது - இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களின் இருப்போர் பற்றிய Social data-வை ஒரு "Mission Ekalavya (Ekalaivan!)" செய்து - எல்லாத் தகவல்களையும் ஒரு மாதத்துக்குள் பெற்று விட முடியாதா? (Legally or illegally - thru 'sting' operations!) - இதற்கெல்லாம் Ethan Hunt மாதிரி Undercover agent வேண்டுமா என்ன?

3. ஒரு 'வெளிப்படையான கொள்கையின்' அடிப்படையில் "இட ஒதுக்கீடு" கொண்டு வர வேண்டும் என்று அலம்பல் செய்யும் அறிவுஜீவிகள் - Why are they not Demanding that such Socially vital data about Higher educational Institutions be made public after collecting it thoroughly?

இதிலே என்ன ராணுவ ரகசியம் வேண்டிக்கிடக்கு?


4. "Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறார்கள்; அப்படியானால் - இந்த விஷயத்தில் ஒரு PIL போட்டு - உடனே எல்ல உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வகுப்புவாரியான ஆசிரியர் மாணவர் பிரதிநிதித்துவம் என்ன? அவர்கள் நிறுவனத்தில் - என்பதை வெளியிட வேண்டும் - என்று உச்ச/உயர் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாதா?


இனிமேல், "மிலிடெண்ட் சமூகநீதியாளர்" ஆக இருந்தாலே ஒழிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தப் பார்ப்பனீய அரசாங்க இயந்திர இந்தியாவில் விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

எனவே, "நவீனயுக ஏகலைவர்கள்" கட்டைவிரலைக் கொடுப்பவர்களாக இல்லாமல் - தங்கள் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கும் அதிகார வெறிபிடித்த சனாதனக் கரங்களை ஒடிக்கிற வீரர்களாக மாறவேண்டும் - என்பது காலத்தின் கட்டாயம்.

20 May 2006

பெரியாரின் கடைசிக் கண்ணீர்!

" நான் 'சூத்திரன்' என்கிற இழிவு நீங்க வேறு வழி என்ன? நான் பிறக்கிறதற்கு முன்னேயே 'சூத்திரர்கள்' நீங்கள். நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன். அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? நானும் போய் விட்டேனென்றால் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஆள் எங்கே?

நானாக இருக்கிறதனாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுவான்"


- என்று பெரியார் கண்ணீர் விட்டார்.

18 May 2006

இட ஒதுக்கீடும், 'ரவி ஸ்ரீநிவாஸின்' கட்டுடைப்பும்

இத்தனை நாள்வரை மிகக் குறைந்த படசம் 'பரந்த நோக்கும் சமூகப் பார்வையும்' உள்ளவர் ரவி ஸ்ரீநிவாஸ் - என்கிற ('மாயை'யை யாவது ரவியிடம் எதிர்பார்க்கலாம் என்கிற) 'ரோசா வசந்த்'தின் கூற்றைப் போலவே நானும் நம்பியிருந்தேன். இப்போது ரவியே தன்னைக் 'கட்டுடைத்து' கொள்கிறார்.

>> இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். >> என்றெல்லாம் பொச்சரிப்பு பொழிகிறார் ரவி!

இதை விடவும் அயோக்கியத்தனமாக மேல்சாதித்தனத்துடன் - இன்னும் சொல்லப்போனால் "பாப்பாரத்தனமாக" இந்த விஷயத்தைத் திரிக்க முடியாது.

"மெரிட்" என்கிற எச்சித்தனமான மாயையான சங்கதியை - இன்று 'காஞ்சா இலையா' போன்ற சமூக நீதி அறிஞர்கள் 'கட்டுடைத்துக்' கொண்டிருக்கும் வேளையில் - தங்களின் புரட்டுத்தனமான மேல்சாதித்தனமான 'மெரிட் வாதம்' - சமூகத் தளங்களில் அவற்றால் ஏற்பட்ட சமூகப் பங்களிப்பு என்ன என்கிற கறாரான எடைபோடப்பட்டுத் தோலுரிக்கப்படுவதைப் பொறுக்க முடியாத மனுவாதிகள் (இன்றைய சூழலில் பார்ப்பன - பனியா கூட்டணி மயிரான்கள்) - 'இட ஒதுக்கீட்டை' கட்டுடைத்துவிட்டதாக ஊளையிடலாம்.

அந்த கோஷ்டியிலே சேர்ந்து கொள்ளும் "Political Correctness" (அதாவது அவாள்களுக்கு)
இப்பொது ரவியிடம் தொற்றிக் கொண்டு விட்டது. இது குறித்து விசனப்பட வேண்டியதில்லை!

சமூக நீதி என்பது இவர்களின் "இருப்பை" கேள்விக்குள்ளாக்காமல், 'பீடத்தைப்' பெயர்க்காமல் நடக்கும் வரை அதன் நலம்விரும்பிகளாக வேடம் தரிக்க இவர்களால் நன்றாகவே இயல்கிறது.

தங்கள் சமூக அதிகாரத்தின் அடிவேராக இருக்கும் Intellectual Leadership மாயைக்கே வேட்டு வைக்கிற நடவடிக்கை என்றதும் இந்த ஜெண்டில்மேன்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிடும்!

உழைக்கும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய அரசும், தேசமும் - அவர்களின்
பெருவாரியான ரத்தம், வேர்வை, கண்ணீர் - இதன் மீதாகக் கட்டப்பட்ட அரசாங்க நிதியத்தின்
மூலம் நடத்தப்படுகிற மேற்கல்வி நிறுவனங்களின் எஜமானர்களாக மட்டும் இவாள்களே
இருப்பார்களாம்! உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஒருபயனும் இருக்காதென்கிற 'வேத விதியை' கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!

சென்னை ஐஐடி-யில் எப்படி மேல்வகுப்பார் - "சூத்திரர்" களை நடத்துகிறார்கள், மற்ற
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி பேராசிரியர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக பேராசிரியை வசந்தா கந்தசாமியின் உதாரணத்தை ரவியின் முந்தைய இட ஒதுக்கீட்டுப் பதிவில்
சொல்லியிருந்தேன். அதற்கு - ஒரே ஒரு உதாரணம் போதாது என்று புறந்தள்ளிப் பேசிவிட்டார். உண்மையில் வசந்தாவின் இ-மெயிலுக்கு ஒரு மடல் அனுப்பி முயற்சி செய்துவிட்டுப் பிறகு ஐஐடி-யின் மேல்சாதித் திமிர்த்தனம் பற்றி இவர் புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்திருக்கலாம்!

உயர்கல்வி நிறுவனங்கள் 'பெரியார் பூமி'யிலேயே இப்படி நடக்கும் என்றால் வட இந்தியாவில்?!!!

இவர்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை நாய்களாகவும், புழுக்களாகவும் நடத்துவார்களாம்; ஆனால், இந்தியாவில் இவர்களின் மேலாதிக்கத்தை மட்டும் சாமரம் வீசி பாதுகாக்க வேண்டுமாம்!

அடச்சீ! இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம் வெட்கமாய் இல்லை?

சிங்கப்பூரிலும் - கொரியாவிலும் ஐஐஎம் கிளைகளை அமைத்தே தீரவேண்டும் - அங்கெல்லாம் நம்முடைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி பன்னாட்டு வணிக அறிவுசால் வல்லமை பெறவேன்ண்டும் என்றெல்லாம் - இந்த மேலாதிக்க எஜமானர்கள் கொஞ்சம் நாள் முன்பு கூட பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஐஐஎம் என்பது ஒரு சிறப்பான Brand-ஆம்; அதை உலகம் முழுக்கப் பரப்புவார்களாம்!

அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியதே - குப்பனும், சுப்பனும் வரி கட்டி - வாக்களித்து உருவாக்கிய அரசாங்கமும், அரசும் தானே - அவர்களுக்கு இந்த 'மேட்டுக் குடி' நிறுவனங்கள் என்ன செய்து கிழித்து விட்டன?

>> இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து
கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட
ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். >> - என்கிறார் ரவி..

கொஞ்சம் நாள் முன்பு பார்ப்பனர்களும், தலித்துகளும் சேர்ந்து சமூக தளத்தில் செயல்பட
வேண்டும் - பிற்பட்ட வகுப்பாரை எதிர்த்து; ஏனெனில் அதுவே இப்போதைய இயற்கையான
சூழ்நிலை - என்றெல்லாம் நயவஞ்சகப் பரப்புரை செய்து கொண்டிருந்தார் ரவி. அதைக் கூட ஒரு அரசியல் கருத்து என்று அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்; ஆனால், இப்போது இவர் பேசுவது முழுக்க முழுக்க பார்ப்பனிய, உயர்சாதிய சிந்தனையின் பாற் பட்ட அரசியலே.

அதனால்தான், சமூக நீதி என்கிற உயரிய கருத்தாக்கத்தையும் 'கட்டுடைக்க' துணிச்சலோடு
வந்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியலே மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி - வேலை வாய்ப்புக்கான சமூக நீதி இட ஒதுக்கீடு குறித்துத்தான் எழுந்தது. அதத்தான் அவர் இப்போதும் பேசுகிறார்; செயல்படுகிறார் - அதை ரவி 'பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக

காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சி' என்று சேறு வாரி இறைப்பது - அயோக்கியத்தனமான பேச்சாகவே தோன்றுகிறது.

கலைஞரும் இதைப்போல கருத்தைத்தான் நேற்று - திருவாரூரில் பேசியுள்ளார்; கலைஞருக்கும் 'ரேசிஸ்ட்' முத்திரையை (இரண்டாம் முறையாக) குத்துவதற்கு ரவிக்கு ஒரு வாய்ப்பு எனக் கருதிக் கொள்ளலாம் போல!

'தி ஹிந்துவிலே' வியாழன் அன்று (18/5/06) வெளிவந்திருக்கும் "OBC Quota: stirring wider issues" என்கிற கட்டுரையைப் பற்றி "இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது" என்கிறார் ரவி.

OBC மக்கள் தங்களுக்கு 27% தரப்படும் வரை - எந்த மேல்சாதிக்காரனும் படிக்கவோ, வேலை செய்யவோ கூடாது என்றொரு கடும் போராட்டத்தை முன்னெடுக்கத்தான் ரவி போன்றவர்களின் எதேச்சதிகாரக் கருத்துக்கள் தூண்டும்.

>> எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். >> - என்று மேலும் மேலும் தன்னையே முரண்படுத்திக் கொள்கிறார்.

நாடு தழுவிய விவாதம் செய்ய எங்கே விட்டர்கள் மேல்சாதி ஜெண்டில்மேன்கள்?

"தேர்தல் முடிவு வரட்டும்; பிறகு பேசுவோம் - ஏனெனில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது" என்று அர்ஜுன் சிங் சொன்னபிறகும் - இஷ்டத்துக்கு நினைத்த போது போராட்டம், வேலை நிறுத்தம், பிரதமர் வீடு நோக்கிப் படையெடுப்பு - என்கிற காட்டுமிராண்டித்தனமான அராஜகத்தைச் செய்தது யார்? ரவி பாதுக்காக்கும் அதே மேல்சாதி மாணவர்கள்... டாக்டர்கள்தாம்!

தமிழக அரசு ஊழியர் போராட்டம் அவர்களுடைய வாழ்வுரிமை பற்றியது; அதுவும் அரசு ஊழியர் தெளிவாக கோரிக்கைகள், அறிக்கைகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்ட்ங்கள், பேச்சுவார்த்தைக்கான முறையீடுகள் - என எல்லா சனநாயக் முறைகளையும் செய்து பிறகு ஸ்டிரைக் பற்றிய முன்னறிவிப்பு கொடுத்து - பிறகுதான் வேலை நிறுத்தம் செய்தார்கள். (அப்போதும் கூட டாக்டர்கள், நர்சுகள் அந்த அரசு ஊழியர் போராட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது).

அந்தப் போராட்டத்துடன் - இப்போதைய மேல்சாதி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் டில்லியில் Unannounced Flash Strike நடத்தும் திமிர்த்தனத்தோடு ஒப்பிடுகிறார் ரவி. இவருடைய நேர்மை இத்தனை கீழ்த்தரமாக எழுதுமளவு இறங்கும் என்று இதுவரை நான் கருதியதில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுடைக்கப்பட்டிருக்கிறார்; அதையும் மற்றவருக்கு விட்டு வைக்காமல் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி.

15 May 2006

கணக்குப் புலிகள்!

தி.மு.க-வின் வெற்றியைப் பொறுக்க முடியாத 'பரம்பரைப் பகை' தொடர்ந்து விஷம் கக்கி வருவது தெரிந்ததே! நம் பகைவருக்கு கணக்குச் சொல்லித் தரும் தேர்தல் அலசல் இதோ!

(சும்மா இருக்கலாம்னு பாத்தாலும் 'பகை' விடமாட்டேங்கிதேப்பா! ;) )

06 May 2006

சிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு!

மயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அது குறித்த மேலதிக தகவல்களை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நூற்றாண்டு காலத்தின் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு என தொல்லியல் அறிஞர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இது பற்றி ஏற்கெனவே செய்தி.நெட் -இல் எழுதப்பட்டாகிவிட்டது.

முத்து (தமிழினி)யும் பதிவு செய்திருக்கிறார்.

தொல்லியல்/இந்தியவியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் முதலான தொல்லியலாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, இக்கல்வெட்டின் காலம் ஏறக்குறைய கி.மு. 2000 முதல் கி.மு 1000 -க்குள் எனக் கருதுகிறார்கள்.

சற்றேறக்குறைய கி.மு. 1500 வாக்கில் இக்கல்வெட்டில் காணப்படும் சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் வடிக்கப்பட்டிருக்கக் கூடும் என முதனிலை ஆய்வு கூறுவதாகத் தெரிகிறது.

தென்னகத்தில், கி.மு. 1500 வாக்கில் சிந்துசமவெளி எழுத்துக்கள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பது மாபெரும் நிகழ்வு ஆகும். இவ்வெழுத்துக்கள் திராவிட மொழி வகையினதாக இருப்பதும், அதன் மூலம் சிந்து சமவெளி திராவிட நாகரிகமானது என்பதும், தென்னகமும்-சிந்து சமவெளியும் உறவு பூண்டிருந்ததும் - பல வருடங்களாக திராவிட வரலாற்றாசிரியர்கள் தெரிவித்து வந்திருக்கும் கருதுகோள்களை நிறுவப் பெரிதும் பயன்படும்!

இக்கல்வெட்டு தமிழகத்தின் தொன்மையான காலத்திய படைப்புத்தான் என்றும், ஹரப்பா போன்ற சிந்துவெளி நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டு அன்று என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன். இதன் மூலம், பண்டைய சிந்துவெளி - தமிழக திராவிட நாகரீகங்களின் உறவு புலப்படுகிறது.

பிந்தைய தமிழ் பிரம்மி வகைக்கும் ஆதியான வடிவமாக இக்கல்வெட்டின் எழுத்துவடிவம் விளங்குவது இதன் தொன்மையையும், சிந்துவெளியின் திராவிட இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

என்னுடைய முந்திய பதிவுகளில் ஒன்றான ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம் பதிவில் கூறப்பட்டிருக்கும் கருதுகோள்களை மேலும் வலுச்சேர்க்கும் விதமாக இப்போதைய கல்வெட்டு கண்டுபிடிப்பு அமைந்துள்ளது!

இதன் வரலாற்று முக்கியத்துவம் நம்மவருக்கே இன்னும் சரியாக விளங்கவில்லை! வந்தேறிகளும், அவர்தம் வழிவந்தாரும் இக்கண்டுபிடிப்பின் உண்மையையும், முக்கியத்துவத்தையும் குறைத்துச் சொல்வதில் ஒன்றும் வியப்பு இல்லை! :)

'குதிரை விளையாட்டாளர்' என்.எஸ். ராஜாராம் என்கிற இந்துத்துவ வெறியர் ஹிந்துவுக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் - இம்மாதிரியான சிந்துவெளி எழுத்துக்கள் பாரசீகத்திலும் (இப்போதைய ஈரான், ஈராக் பகுதிகள்) கிடைத்துள்ளன என்று கம்பு சுத்தியிருக்கிறார்!

ஆனால், அவர் சொல்வது சிந்துவெளி வணிகர்கள் பண்டைய Elamite, Mesopotomian நாகரீகங்களுடன் வைத்திருந்த வணிக உறவின் மூலமாக சிந்துவெளியிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்ட ஓடுகள், கல்வெட்டுப் பொருட்கள் முதலானவை.

ஆனால், இப்போது மயிலாடுதுறையில் கிடைத்திருப்பது - இங்கேயே தமிழகத்திலேயே சிந்துவெளி எழுத்துக்களால் (திராவிட மொழி வகையினம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்ற) பொறிக்கப்பட்ட கல்வெட்டு!

இது இனி நிகழப்போகும் மாபெரும் வரலாற்றின் மீட்டெடுப்புக்கான முதல் துளி என்று சிலாகிப்பதற்கு நிறையவே காரணமிருக்கின்றது.

என்னுடைய ஆதிச்சநல்லூர் பதிவில் நான் இட்ட (ஆங்கிலப்) பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் படித்தால் - இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் மேலும் விளங்கும்! ;)

ஒவ்வொன்றாக 'வரலாற்றின் உண்மைகள்' தெளிய ஆரம்பித்திருப்பது தமிழருக்கு/திராவிட இன ஆய்வாளருக்கு மகிழ்ச்சியான செய்தியே!

Dravidians shall keep their 'Tryst with Destiny'!

( இது குறித்து மேலும் கிடைக்கக் கூடிய புதிய தகவல்களை இங்கேயே சேர்க்க நினைத்துள்ளேன்)



பி.கு:

கலைஞர் 4/5/2006 அன்று இந்தக் கல்வெட்டு குறித்த செய்தியை தீவுத்திடல் கூட்டத்தில் பிரதமர் முன்பாகப் பேசிய பேச்சில் குறிப்பிட்டு பெருமிதமாகச் சொன்னார்! :)

27 April 2006

'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்!

சும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் போய் விடுமோ என்கிற பயமும் சேர்ந்து கொண்ட பின்னர் கேட்கவா வேண்டும்?!

தயாநிதி மாறன் 'டாட்டா குழுமத்தை' DTH விசயத்தில் மிரட்டினார் என்று 'சும்மா' கொளுத்திப் போட்டு - அதற்குத் தங்கள் ஆஸ்தான குரு சோ -வின் ஆதிசேட நாக்கை வேறு பயன்படுத்திப் பார்த்தார்கள்!

'குரு கோல்வால்கருக்கு' அஞ்சலி செலுத்தும் தமிழகத்தின் 'ஒரே நடுநிலைப் பத்திரிக்கை'யான தினமணியில் கம்பு சுத்திப் பாத்தாச்சு! அவங்கப்பன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் அலம்பல்கள்! போதாததற்கு 40 கோடி (150 கோடி??!) புகழ் கோமாளியும் ஊளைக்கு ஒத்து வேறு!

என்னடா விசயமென்றால் - 'அதாவதுங்கய்யா சம்பவம் நடந்த எடத்துல இருந்து நான் திரும்பி வர்றப்ப ஒரு பத்துமைல் தூரத்தில தயாநிதி மாறன் வீடு இருந்துச்சுங்கய்யா' ரேச்ஞ்சில முழநீள பதிவுகள்!!! ;) (எல்லாம் இடஒதுக்கீடு அறிவிப்புப் படுத்தும் பாடு!! - என்னப்பா தமிழ்நாட்டில ஒரு டாக்டரும் தெருவில போராடக்காணமே! ;) )


தயாநிதி மாறன் - தன்னைப் பற்றிய பற்றிய செய்தி அவதூறு என்றும் - அதை வெளியிட்டதற்காக - 'தினமணி' ஆசிரியரும், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' நிர்வாக இயக்குநரும் - தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் - தவறினால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தினகரனில் இன்று(27/04/06) வெளிவந்திருக்கும் அந்தச் செய்தி இங்கே :

"டாடாவை மிரட்டினார் தயாநிதி மாறன்" என்ற பெயரில் தினமணியிலும், எக்ஸ்பிரஸ் இன்வெஸ்டிகேஷன் என்ற பாணியில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் 26.4.2006 அன்று வெளியான கட்டுரை விஷமத்தனமாக உள்ளது. இந்தக் கட்டுரையில் வெளியான தகவல்கள் கற்பனையானவை, பொய்யானவை, அற்பத்தனமானவை.

உங்கள் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் எழுப்பிவிட்டு அவற்றுக்கு பாதிக்கப்பட்டோரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தயாநிதி மாறனைப் பிடிக்காத சிலரின் கட்டளைப்படி நேர்மையற்ற முறையில் புரளிகளைப் பரப்பி ஆதாயம் அடைவதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள். அவர் பதில் அளிக்க மறுக்கும் விஷயங்களை தயாநிதி மாறன் மறுக்க வேண்டும் என்கிறீர்கள்.

இதுகுறித்து பிரஸ் கவுன்சிலிடம் தயாநிதி மாறன் புகார் செய்வார். தேர்தல் சமயத்தில் இது போன்ற அவதூறான கட்டுரையால் அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

உங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தயாநிதி மாறன் மறுக்கிறார்.
மேலும் சன் டி.வி சம்பத்தப்பட்ட எந்த விஷயத்திலும் தனக்கு ஆர்வமில்லை. தனது பெயரை இந்த விஷயத்தில் தேவையின்றி இழுத்து சேற்றை வாரி இறைப்பதாகக் கூறுகிறார்.

எனவே எனது கட்சிக்காரரிடம் (தயாநிதி மாறன்) நீங்கள்: நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அத உங்கள் பத்திரிக்கையில் பிரதான இடத்தில் வெளியிட்டுக் களங்கம் கற்பித்ததற்கு நஷ்ட ஏடாக ரூ. 1 கோடி தரவேண்டும்.

இதைச் செய்யத் தவறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியது இருக்கும்."


கார்த்திக்கும் அவரது பார்வர்டு பிளாக் கட்சிக்காரர்களும் தொடர்ந்து மிரட்டப்படுவது - ஒரு வேட்பாளர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, எம்ஜியாரின் அண்ணன் மகள் லீலாவதி மிரட்டி துன்புறுத்தி ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது, தேமுதிக வேட்பாளர்கள் விலைபேசப்படுவது - என தொடரும் 'அவாள்' திமுக-வின் லீலைகளில் இந்த அவதூறு செய்தியும் ஒன்றாகிறது போலும்!

வழக்கம்போல - 'இவாள்' இதையும் இருட்டடிப்புச் செய்வாள் பாருங்கோ! ;)

23 April 2006

பொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? - சுபவீயின் செவ்வி


'இந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில்; செவ்வியின் சுட்டி


ஒரு கூடுதல் செய்தி :

சுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும்

:)

22 April 2006

எலிசபெத்தின் காதல்!

சில வருடங்கட்கு முன்பு எலிசபெத் பாரெட் ப்ரவுனிங்(Elizabeth Barrett Browning) என்கிற பிரபலமான ஆங்கிலப் பெண் கவிதாயினியின் 'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' (Sonnets from the Portuguese) என்கிற தொகுப்பைப் படிக்க நேர்ந்தது.

விக்டோரியன் காலகட்டத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் கவிஞராக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவரை விடவும் வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவுனிங் (Robert Browning) என்கிற இன்னொரு பிரபலமான கவிஞரை காதலித்து மணந்தவர் எலிசபெத்.

'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' என்கிற கவிதைத் தொகுப்பே எலிசபெத் தன் ஆருயிர்க் காதலனை எண்ணி உருகி உருகிப் பாடியதுதான்! படிப்பவர்களையும் உருக வைப்பது; உயிர்ப்புள்ள கவிதைகள் அவை.

அந்தத் தொகுப்பின் 43-ஆம் பாடலை தமிழில் மொழி ஆக்கம் செய்து பார்க்கும் ஆசை வந்தது! இதைச் செய்தும் இப்போது சில காலங்கள் ஆகின்றன; அந்த மொழி ஆக்கக் கவிதையை (முயற்சியை) இங்கே தருகிறேன்.

எலிசபெத்தின் 'மொழியாளுமை' எளிய சொற்களின் மூலம் வலிய வளமான படிமங்களைக் உருவாக்க வல்லது. புலனறிவு கடந்த இறைமைத் தேடலின் 'ஆன்மா' இக்கவிதைகளில் 'சூல்' கொண்டுள்ளது என்பர். நான் மொழியாக்கத்திற்கு நமது புதுக்கவிதை வடிவத்தை முயன்று பார்த்திருக்கிறேன். இனி மொழியாக்கக் கவிதை :


'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' - 43


உன் மீதான என் காதலை எப்படி விரித்துரைப்பேன்?
என் காதலென்னும் வேகப்புரவி...
உணர்வென்னும் சமவெளியில் புரண்டு சிலிர்க்காமல்
மொழியென்னும் தொழுவத்தில் அடைபடச் சம்மதிக்குமா?!

விம்மிப் புடைத்து நிற்கும் என் ஆன்மாவின் ஒவ்வொரு அணுக்களிலும்
எல்லையற்ற உன் நினைவுகள் வியாபித்திருக்கின்றன...
பகலும் இரவும் காதலால் என்னை ஒளியூட்டும் உன் பெயரென்னும் விண்மீன்!

கட்டற்ற காற்றாய் என் காதல் வந்துன் சுவாசமாகட்டும்
புனிதமான என் நேசம் கார்மேகமாய் சூல் கொண்டு
உன்னைக்கண்டதும் மழைக்கத்தொடங்குகின்றன
என் பழைய காயங்கள் உனைக் கண்டதும் இமை மூடுகின்றன

உன் மீதான காதல்
இழந்துபோன என் பழைய புதையல்களை மீட்டெடுத்துவிட்டது!
இறந்துபோன நம்பிக்கைகளுக்கும் 'மீட்சி' தந்தது!

என் மூச்சின் காற்றாய் நீ!
என் புன்னகையின் ஆன்மாவாய் நீ!
என் கண்ணீரின் ஜீவ ஊற்றாய் நீ!
என் வாழ்க்கையின் மூல வேராய் நீ.. நீதான் இருக்கின்றாய்!
என் 'மெய்' - 'பொய்'யாகிப் போன பின்னும்
பிரபஞ்சத்தின் கைகளால் உனைத் தழுவிகொள்வேன் -
இன்னும் இறுக்கமாய்!


********************************


பின்வருவது எலசபெத்தின் மூலக் கவிதை:

Sonnets from the Portuguese: 43

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of every day's
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints, -- I love thee with the breath,
Smiles, tears, of all my life! -- and, if God choose,
I shall but love thee better after death.

- Elizabeth Barrett Browning

21 April 2006

கலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ

வில்லிவாக்கத்தின் திமுக வேட்பாளரை ஆதரித்து அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்ட்டத்தில் பேராசிரியர் 'அடலேறு' சுபவீ அவர்கள் பேசியிருக்கிறார் :

* கலைஞரின் முயற்சியால்தான் - நானும், வைகோவும் மற்ற பொடாவில் கைது செய்யப்பட்டவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தோம்

* வைகோ சிறையிலிருந்த போது எழுதிய நூல்கள் சிறப்பானவை;ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது. எனவே வைகோவின் நூல்களைக் கொளுத்தவேண்டும்.

* ஜெ. தமிழின அடையாளங்களுக்கு எதிரானவர்; அவரை விமர்சிப்பவர்களைக் கொலை கூடச் செய்து விடுவார்.

* தமிழகத்தில் சனநாயகம், தமிழின உணர்வு ஆகியவை தழைத்தோங்க திமுக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான் - ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசனுக்கு அதிமுக மிரட்டல்?

நேற்று கலைஞர் தூத்துக்குடியில் பேட்டியளிக்கும்போது, ஒரு பிரபல நடிகருக்கு அதிமுக 100 கோடி ரூபாய் தருவதாகவும், அதை வாங்கிக் கொண்டு அதிமுக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும்படியும் வியாபார பேரம் போல் பேசியதாகவும் - ஆனால் அந்த நடிகர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நடிகர் யார் என்பதை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை கலைஞர்.

இன்றைய ((ஏப்.21) தினகரனில் - அது கமல்ஹாசன்தான் என்றும், அவர் 100 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளவோ, மருதநாயகத்துக்கு பண உதவி - இன்னபிற உதவிகளை செய்வதாக அதிமுக சார்பில் பேசிய (சசிகலா) நடராஜனின் பேரத்தை அடியோடு மறுத்து விட்டதாகவும் - செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து கமல் மறுத்ததால் அழுத்தமாக மிரட்டல் தொனியில் வற்புறுத்தல்கள் வந்திருக்கின்றன. இதனால் கமல் 20 ஆம் தேதி இரவே அமேரிக்கா சென்றுவிட்டார் என்றும் செய்தி வந்துள்ளது.

கமலையே 'விலைக்கு வாங்க' நடந்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளின் முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானால்
...... 'டாக்டர் கோவூர்' விருது பெற்ற பகுத்தறிவாளர் கமல் - இது போன்ற குதிரை வியாபாரங்களுக்கு விலைபோக மாட்டார் என்று நான் நம்புகிறேன். இப்படி விலை போய்த்தான் 'மருதநாயகம்' எடுக்க வேண்டுமென்றால் அந்தப் படமே தேவையில்லை.

மேலும் நம்முடைய நாராயணன(உருப்படாதது) அவர்கள் முன்பு எழுதியது போல - வெளிநாட்டு பட நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டியாவது அவர் அந்த உன்னதப் படைப்பைச் செய்யட்டும். இந்த தமிழின விரோதிகளிடம் அவர் தன் பெருமையை இழக்காதிருக்கட்டும்.

இம்மாதிரியாகக் கேவலமாக அவரை விலை பேசிய கும்பலுக்கு தேர்தலுக்குப் பின் உரிய விளைவுகளைச் சந்திக்கிற நிலை வரத்தான் போகிறது.

19 April 2006

பச்சரிசிகளும், 'புழுத்த' அரிசிகளும்!

கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருந்த, தொடர்ந்து கலைஞர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த 'ஒரு கிலோ இரண்டு ரூபாய்' பொது விநியோக அரிசித் திட்டத்துக்கு ஜெ.வும், 'வையகத்தின் கோமாளியும்' கடும் எதிர்ப்பும், கிண்டலும் செய்தபடி இருந்தனர்.

இப்போது தமிழக முதல்வர் திடீரென ஒரு 'சந்துமுனையில்' நின்றபடி 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்கிறார், ஒரு முதலமைச்சர் 'கொள்கை முடிவுகளை' இப்படி அறிவிக்கக் கூடாது என்கிற வரம்பையும் மீறி!

அதற்கும் சில அறுந்த வால் வானரங்கள் தாண்டிக் குதித்து குட்டிக்கரணம் இட்டு மகிழ்ச்சி ஊளையில் திளைக்கின்றன! இத்தனை சனநாயக விரோதப் போக்கும் தமிழின விரோதக் கும்பலால் நடத்தப் படுகின்றன.

இதிலே முழு உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கு :


1. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான விளக்கம்


2. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான கூடுதல் விளக்கம்(தினமணி)


3. கலைஞரின் கருத்து


4. கலைஞரின் கவிதை



5. அரசியல் தலைவர்கள் கருத்து

17 April 2006

'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகுப்பு!

'பரம்பரைப் பகை' என செயலலிதா வெளிப்படையாகவே அறிவித்திருப்பதை தமிழினத்துக்கு விடப்பட்ட அறைகூவலாகவே இன உணர்வாளர்கள் கருதுகின்றனர் என்பது உறுதி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணீ அவர்கள் 18 ஏபரல் முதல் தி.மு.க கூட்டணியை ஆதரித்து தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

1990-களில் 'தடாவில் கைதாகி சிறைவாசம் செய்தவரும், பிறகு 2002-ஆம் ஆண்டு 'பொடா'வில் கைதாகி ஒன்றரை ஆண்டு காலம் வெஞ்சிறையில் இன உணர்வுக்காகவும், ஈழ விடுதலை உணர்வுக்காகவும் வாடிய - பேராசிரியர் 'அடலேறு' சுப.வீரபாண்டியன் அவர்களும் - தமிழின விரோத செயலலிதாவை தமிழக அரசியல் அரங்கிலிருந்தே வெளியேற்றுவோம் என்கிற முழக்கத்தோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சுபவீ வெளியிட்டுள்ள அறிக்கை:

"பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டு சிறையில் கிடந்த தமிழன் என்னும் அடிப்படையில் தமிழ் மக்களிடம் என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

பொடாவை மறந்து விட்டோம் என நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். அது நமக்கும் செயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகை என்றால் மறந்து விடலாம்.

தமிழினத்துக்கும், தமிழீழ உறவுக்கும் எதிராக அவரால் தொடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம் அல்லவா அது? - என்பதால் என்னால் மறக்க முடியவில்லை.

தமிழர் தேசிய இயக்கத்தை தடை செய்து, கண்ணகி சிலை போன்ற தமிழ் அடையாளங்களை அப்புறப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களை எல்லாம் பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே இல்லாமல் பார்த்துக் கொண்ட தமிழ் இன எதிரி செயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி இனியும் இந்த நாட்டில் நீடிக்கக் கூடாது.

'பரம்பரை எதிரியோடு தேர்தலில் மோதுகிறேன்' என்று செயலலிதாவே சொன்னபிறகு, அந்த அறைகூவலை நாமும் ஏற்போம். பரம்பரை எதிரியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம்.

சர்வாதிகார ஆட்சி ஒழியவும், சனநாயக ஆட்சி மலரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

தமிழ் இன உணர்வாளர்களே - நீங்களும் களத்துக்கு வாருங்கள். கைகோர்த்து நிற்போம். "

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சுபவீ.

சனவரித் திங்களில் ஒரு சாலை விபத்தின் காரணமாக காயமடைந்து இப்போதுதான் தேறி வந்திருக்கும் சுபவீ அவர்களின் இன உணர்வுப் போராட்டம் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியது.

'பரம்பரைப் பகையை' வேரறுக்க இன உணர்வுப் போர் வீரர்களும், படைத்தலைவர்களும் அணிவகுப்பது தமிழினத்தின் விடியலைக் கட்டியங்கூறும்; நாளை வெற்றி முரசம் ஒலிக்குமென்கிற நம்பிக்கை தரும் மகிழ்ச்சிச் செய்தி.